பணம் சம்பாதிக்க என்னவெல்லாம் பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிச்சாலும் இவனுங்கள மாதிரி யோசிக்க முடியாது என்பதை சத்தியம் செஞ்சு சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் IIT யில் படித்த, படித்து கொண்டிருபவனுடைய விந்தணு விலைக்கு வாங்க தயார் என்று சென்னையை சேர்ந்த ஒரு மறை கழண்ட தம்பதி இணையத்தில் விளம்பரம் செய்தது, பிள்ளை பேருக்கு வழி இல்லாமல் விந்தணுவை வாங்கும் பாசத்தை கொச்சைபடுத்திய இந்த மானம்கெட்ட தம்பதியர் சொன்னதை வேத வாக்காக எடுத்து கொண்ட IIT யில் படித்த ஒரு பக்கி பரதேசி, IIT யில் படித்தவர்களது விந்தனுகளை இணையத்தில் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி விட்டது. இன்னொரு அறிவு ஜீவி IIT , IIM மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலை கழகங்களில் படித்தவர்களை திருமணம் மற்றும் டேடிங் என்ற பெயரில் கூட்டி கொடுக்கும் இணையதள நிறுவனத்தை ஆரம்பித்து விட்டது. சிறந்த பல்கலை கழகங்களில் படித்த பெரும்பாலனோர் அதிகளவு பணத்திற்காகவும், பொய்யான சமூக மதிபிற்காகவும் தங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருப்பது இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்!
இப்படி தன்னை தானே மெய்ச்சு கொண்டு சுய அடையாளங்களை ஏற்படுத்துவதை தவிர சிறந்த பல்கலை கழகங்களில் படித்தவர்கள் என்னத்தை பெரியதாக கிழித்து விட்டார்கள் என தெரியவில்லை (என்னையும் சேர்த்து தான்)! நான் உணர்ந்தவை, பெரிய பல்கலை கழகத்தில் படித்த பெரும்பாலனோர், அடிக்க வந்துவிடாதிர்கள், எல்லாரும் அல்ல, பெரும்பாலனோர் மிக எளிதாக விலை போக கூடிய ஜந்துகள், தனது நெருங்கிய உறவுகளை தூரபடுத்தி தற்காலிக, சிற்றின்பதிர்கான உறவுகளை எளிதாக ஏற்படுத்தி கொள்ள கூடியவர்கள், கடந்து வந்த பாதையை உதாசீன படுத்தி ஆல் டே ஜாலி டே என வாழ்கையை முன்னெடுத்து செல்ல கூடியவர்கள், தாய் மண், இல்லாமை, கல்லாமை, பசி, உறவுகள் இவை எல்லாம் அவர்களது அகாரதிகளில் தேடினாலும் கிடைக்காது. பிறருக்காக தங்கள் இன்பங்களை சிறிதளவு கூட குறைத்து கொள்ள விரும்பாதவர்கள், இன்னும் எத்தனையோ சொல்லலாம், இத்தனை நொட்டைகள் இருந்தும் இவர்கள் பண்ணுகிற அலப்பறை இருக்கே. சூ அபபா..
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்