குற்றமும் தண்டனையும்
உலகில் நடைபெறும் அனைத்து குற்றங்களும் ஒரே காரணத்திற்காகவோ, நோக்கத்திற்காகவோ செய்ய படுபவை அல்ல, இதை புரிந்து கொள்ளவே தயாராய் இல்லாத வரை அவற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவோ, அல்லது குற்றங்களை தடுத்து நிறுத்தவோ முடியும் என்று நினைப்பது சிறு பிள்ளைத்தனம்.
தவறுகளுக்கான தண்டனைகளை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஈடுபாடு அவை நடை பெறாமல் இருக்கவும் , நடை பெரும் பட்சத்தில் நம்மை தற்காத்து கொள்ளவும் செய்ய வேண்டியவனைவற்றை பற்றி பேசுவதில் இல்லை , பிறகொரு குற்றம் நடக்கையில் திரும்ப கொடி பிடிக்க தொடங்கி விடுகிறோம் - இந்த மன நிலையை வைத்து கொண்டு நாம் எதை தான் சாதித்து விட முடியும்?
குற்றங்கள் வானத்தில் இருந்து நேராக மனித மனங்களில் டௌன்லோட் செய்ய படுவதாக கற்பனை செய்வதை சற்று மறு பரிசிலனை செய்வோம், அவை கண்டிப்பாக நோய் பிடித்த ஒரு சமூகத்தின் மூலம் மனித மனங்களில் பரவிய தொற்று நோயாக தான் இருக்க முடியும், மன நோய்கள் மூலம் செய்ய படும் குற்றங்களுக்கும், சமூகத்திற்கு ஒரு மிக பெரிய பங்கு இருப்பதை எந்த மன நல மருத்துவராலும் மறுத்து விட முடியாது. தனி மனித ஒழுக்கம் தொடங்கி அரசியல் சாசனம் வரை பரவி இருக்கும் நோய் கிருமிகளை மேலும் வளராமல் நிறுத்தி வைக்கவும் , ஒட்டு மொத்தமாக அழிக்கவும், மீண்டும் பாதிக்காமல் தடுக்கவும் வேண்டியவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் மனிதம் பற்றி சிந்திக்க தயாராய் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. நோயற்ற சமூகத்தில் வலி நிவாரணிகள் வழகொழிந்து போகும் என்பது நிதர்சனம். விதைக்காமல், விளைவதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை, தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நல் விதைகளை முதலில் விதைத்து விட்டு நல்லதொரு சமூக மாற்றத்திற்காக காத்திருக்க தொடங்குவோம்!
தண்டனைகள் வலி நிவாரணிகள் மட்டுமே நோய்க்கான காரணங்களையும் அவை ஏற்படாமல் தற்காத்து கொள்வதை பற்றியும் சிறிது பேசி வைப்போம்!
முடிந்தால் சிந்தியுங்கள்!