கிசு கிசு எழுதிட்டு இருந்தவன் எல்லாம் தலையங்கம் எழுதுனா எப்படி இருக்கும்னு
தினமலரின் அணு உலை எதிர்ப்பு கட்டுரைகளை பார்த்து தெரிஞ்சிகோங்க, சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சது தான் மிச்சம். நம்மால் எதை மாற்ற முடியுமோ அதற்காக மட்டுமே நேரத்தை செலவழிங்கனு அருள் ராஜன் சாரே சொல்லிருக்காரு, போய் அடுத்த வாரம் அந்தரங்கம் ரெடி பண்ணுங்க, ஸ்னேஹா பிரசன்னா லவ் பத்தி கவர் ஸ்டோரி ரெடி பண்ணுங்க, அத விட்டு அணு உலை, மின்சாரம்னு காமெடி பண்ணிட்டு.
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Saturday, January 21, 2012
மானங்கெட்ட இந்திய இளைஞர்களே!
If 15,964 farmers died in 2010 under huge debt, why is the govt keen to save an indebted Vijay Mallya? Isn't everyone equal? //Devinder Sharma
இதுல என்ன டவுட்டு! எல்லாருக்கும் தெரிஞ்ச பரம ரகசியம், இந்திய அரசாங்கம், குடிமக்களோட உண்மையனா பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் என்னைக்குமே கண்டுகிட்டது கிடையாது. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்துட்டு நாற்பது கோடி பேரு இருக்காங்க, அவங்க இருந்தா என்ன செத்தா என்ன? பத்து பதினஞ்சி விஜய் மால்யா தான் நாட்டோட ஜி.டி.பி'ய வளர்த்துட்டு இருக்காங்க (ரொம்ப நல்லவங்க, நாம கேக்கும் பொது எல்லாம் நல்ல கமிஷனும் கொடுக்குறாங்க). மானங்கெட்ட இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இந்தியா வல்லரசு நாடாவோ, வளர்ந்த நாடாவோ ஆகனும்னு ஆசை இருந்தா அமைதியா அரசோட எல்லா திட்டங்களுக்கும் ஆதரவு கொடுங்க! (நாற்பது கோடி பெற கொன்னுட்டா சராசரி தனி மனித வருமானம் அதிகமாயிடும்). நமக்கு என்ன தெரியும் நம்ம என்ன விஞ்ஞானியா, பொருளாதார வல்லுனரா, நம்ம போய் அமெரிக்காகாரனுக்கு முதுகு தேய்க்கலாம் வாங்க.

இந்தியா ஒளிர்கிறது! தமிழகம் மிளிர்கிறது!
வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நாற்பது கோடி இந்தியர்களில் ஒருவரா நீங்கள்? தமிழகத்தில் வாழ்பவரா நீங்கள்? ஆஹா, வீடுதோறும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிகணினி! நூறு கிலோ மீட்டர் தூரம் சென்று வர 3 நாட்கள் சம்பாதித்தாலே போதும், ஒரு லிட்டர் பால் வாங்க, ஒரே நாள் சம்பாதித்தாலே போதும், சுத்தமான குடிநீர் வாங்க பாதி நாள் சம்பதிதாலே போதும், இந்தியா ஒளிர்கிறது! தமிழகம் மிளிர்கிறது!
Thursday, January 19, 2012
வாழ்க ஜனநாயகம்!
பிறப்பால் ஜனநாயக இந்தியாவின் தவபுதல்வர்கள் நாம், வாழ்வதோ காங்கிரஸ் என்ற துப்பு கெட்ட, ஆண்மை அற்ற, வக்கிர புத்திகாரர்களின் கூட்டமைப்பின் ராணுவ ஆட்சியில்; மரியாதையைக்குறிய அடிமைகளாக! வெள்ளையனின் அடிமைகளாக இருந்த போது கூட நம்மிடம் தன்மானமும், சுய புத்தியும் மிச்சம் இருந்தது, காங்கிரஸ் என்னும் துப்பு கெட்டவர்களின் அடிமையாக வாழும் நமக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது? எத்தனை ஊழல்கள் செய்தாலும், எத்தனை முறை கேடுகள் நடந்தாலும், அரசியல் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தங்களை பரிசுத்ததன்மை மிக்கவர்களாகவும், தூய்மையின் மொத்த குத்தகைகாரர்களாகவும் காட்டி கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களை மிஞ்ச இதுவரை, இல்லை, இல்லை; இனிமேலும் யாரும் பிறக்க முடியாது! அப்படியே இதை எல்லாம் மீறி ஒரு பிரச்சனை வந்தால், காந்தியின் பின்னாலோ, அல்லது இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் முயற்சியில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போன்ற ஒரு மாயையை உருவாக்கியோ, தப்பித்து கொள்ளும் ஆண் மகன்களின் கூட்டமைப்பு தான் இந்த காங்கிரஸ் கட்சி. நீங்கள் ஒரு தனி மனிதனாகவோ, சமூக எழுச்சி அமைப்பாகவோ இருந்து காங்கிரஸின் எதாவது ஒரு தவறை சுட்டிகாட்டுங்கள் பார்க்கலாம், நீங்கள் விடுதலை புலியாகவோ, மதவாத அமைப்பாகவோ, நக்சலாகவோ, அந்நிய சக்தியாகவோ சித்தரிக்கபடுவது நிச்சயம், ஒரு வேளை காங்கிரசுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேற்று கிரக சதிகாரகளாக கூட சித்தரிக்க படலாம்! வாழ்க ஜனநாயகம்
-வி. எஸ். வினோத் குமார்
Subscribe to:
Posts (Atom)