Saturday, August 18, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 4 !


பிராமணன் என்று கூறி கொண்டு கழிசடையாக நடப்பவர்கள் அதிகம் பேர், அதை காரணம் காட்டி தலித் என்று கூறி கொண்டு கழிசடை தனம் செய்பவர்கள் நியாயவாதிகள் ஆகி விட மாட்டார்கள். இரண்டு பேருமே கழிசடைகள தான்! பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும்  தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது. ஒரு ஜாதி, மத, இன  அடையாளத்தோடு உள்ள  பெரும்பாலானவர்களின் மன நிலை, அனைவரின் மன நிலை ஆகாது, தனி நபர்  குற்றங்களுக்கு ஜாதி, மத சாயம் பூசி பிரிவினை ஏற்படுத்துவதை தவிர்ப்போம், ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபடுவோம், சமத்துவத்தை சமாதியில் இருந்து உயிர்பிப்போம்,  மனிதத்தை வளர்ப்போம்.  


முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி.  எஸ். வினோத் குமார்

பின் குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, நம் மனங்களை பண்படுத்த!

Wednesday, August 15, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 3!

நாடு வேறு, நாட்டை ஆள்பவர்கள் வேறு. நாட்டை ஆள்பவர்கள் புனிதர்களாக இல்லாமல் சராசரி மனிதர்களாக இருந்து விட்ட காரணத்தின் விளைவே இன்றைய அனைத்து அவலங்களும். இந்த நிலையில் இல்லாமல் இருந்தால், அல்லது வேறு நிலையில் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது வாதத்திற்கு மிக சிறந்த காரணி, மனித இயல்பு, அனால் உண்மை? 100 % வாழ்வதற்கு சிறந்த இடம், சிறந்த வழி, சிறந்த கலாச்சாரம் என்று எதையாவது குறிப்பிட முடியுமா? இயற்கை விதிகளினால் இம்மண்ணின் மைந்தர்கள் படைக்கப்பட்டவர்கள் நாம், இந்த நாட்டில் உள்ள குறைகளை களைவது, நம் உடம்பில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயை அணுகும் நேர்த்தியோடு இருக்க வேண்டுமே தவிர, அதை விட்டு சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவிப்பது பல லட்சம் பேரின் தியாகத்தை கொச்சை படுத்தும் செயலாகும். நிகழ் கால சமுக போராளிகள், கடந்த கால போராளிகளின் தியாகத்தை இப்படி அணுகுவது ஆரோக்யமானதல்ல! நோக்கங்கள் நல்லதற்காக இருந்தாலும் அதை செயல்படுத்தும் வழிமுறை தவறாகும் போது சராசரி மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போவோம். 

முடிந்தால் சிந்தியுங்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!


அன்புடன்,
V . S . வினோத் குமார் 

Thursday, August 9, 2012

அனுபவ பாடம் - 1!


நீங்கள் அதிக நேரம் பேசும் போது  கேட்பவர்களுக்கு நீங்கள் சொல்ல கூடிய அர்த்தங்கள் அர்த்தமற்றவைகளாகவும், நீங்கள் முன்னெடுக்கும் வாதங்கள், விதண்டாவாதங்களாகவும் தெரிய கூடும். உங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்ற மன நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ  கேட்பவர்கள் தள்ளபடுவார்கள், உங்கள் தீர்க்கமான சிந்தனைகள் அவர்களுக்கு பிடிவாதமாக தெரியும். எனவே குறைவான நேரத்தில் நிறைவான, அனைவர்க்கும் புரியும்படியான, ஆழமான கருத்துகளை சொல்லி முடித்து விடுங்கள். எதிர் மறை சிந்தனை உள்ளவர்களுடன் பேசும் போது ஆணித்தரமான கருத்துகளையும், சரியான ஆதாரங்களையும் வைத்து கொண்டு பேசுங்கள், தவறான தகவல்களை கொடுத்து மாட்டி கொள்ளாதிர்கள், குறிப்பாக, உங்கள் ஒரு தவறு கூட நீங்கள் சொல்ல வந்த கருத்தில் உள்ள அனைத்து உண்மைகளையும், நியாங்களையும் அர்த்தமற்றதாக ஆகி விடும். எல்லாவற்றுகும் மேலாக உங்கள் மனசாட்சிக்கு உண்மையான கருத்துகளை பேசி பழகுங்கள், எக்காரணத்தை கொண்டும் பேச்சின் ஓட்டத்தில் உங்களை இழந்து விடாதிர்கள்.

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்