நீங்கள் அதிக நேரம் பேசும் போது கேட்பவர்களுக்கு நீங்கள் சொல்ல கூடிய அர்த்தங்கள் அர்த்தமற்றவைகளாகவும், நீங்கள் முன்னெடுக்கும் வாதங்கள், விதண்டாவாதங்களாகவும் தெரிய கூடும். உங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்ற மன நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ கேட்பவர்கள் தள்ளபடுவார்கள், உங்கள் தீர்க்கமான சிந்தனைகள் அவர்களுக்கு பிடிவாதமாக தெரியும். எனவே குறைவான நேரத்தில் நிறைவான, அனைவர்க்கும் புரியும்படியான, ஆழமான கருத்துகளை சொல்லி முடித்து விடுங்கள். எதிர் மறை சிந்தனை உள்ளவர்களுடன் பேசும் போது ஆணித்தரமான கருத்துகளையும், சரியான ஆதாரங்களையும் வைத்து கொண்டு பேசுங்கள், தவறான தகவல்களை கொடுத்து மாட்டி கொள்ளாதிர்கள், குறிப்பாக, உங்கள் ஒரு தவறு கூட நீங்கள் சொல்ல வந்த கருத்தில் உள்ள அனைத்து உண்மைகளையும், நியாங்களையும் அர்த்தமற்றதாக ஆகி விடும். எல்லாவற்றுகும் மேலாக உங்கள் மனசாட்சிக்கு உண்மையான கருத்துகளை பேசி பழகுங்கள், எக்காரணத்தை கொண்டும் பேச்சின் ஓட்டத்தில் உங்களை இழந்து விடாதிர்கள்.
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment