இயந்தரமயமாகி விட்ட வாழ்கை பயணத்தில் சிந்தனைக்கான சாத்தியகூறுகள் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், அரசியல் போன்ற பொருள் சார்ந்த சிந்தனைகள் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணத்திற்காகவும், பெட்ரோலுக்காகவும் ஓடும் வாடகை வண்டி போல பொருளாதரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஓடும் மனித இயந்திரங்களை உருவாக்கி வருகின்றது.
மனிதம் பட்டு போய் விடாமல் தழைக்க பொருள் சார்ந்த சிந்தனைகளுக்கு வேக தடைகள் அவசியமாகின்றன. என் அனுபவத்தில் நீண்ட தனிமை பயணங்கள் ஒரு மிக சிறந்த வேக தடையாக செயல்படுகின்றது, சில மணி நேர பேருந்து, ரயில் பயணங்களில் சிந்தனைகள் சிறிய விதைகளாக விதைக்கப்பட்டு, துளிர் விட்டு விருட்சமாகி விடுகின்றன, அதை போன்று உருவான சிந்தனை விருட்சங்கள் என் வாழ்கை பயணத்தை பலவாறு மாற்றி அமைத்து உள்ளது.
வாழ்கை பயணத்தை செம்மையாகவும், ருசிகரமானதாகவும் அமைத்து கொள்ள பயணங்கள் அவசியமாகின்றன. வேக தடைகள் தானாக உருவாவதற்காக காத்திருக்காமல் வாய்ப்பு கிடைக்கும் போது உருவாக்கி கொள்ளுங்கள், நீண்ட தனிமை பயணங்களாக.
உங்கள் அனுபவம் கூறும் வேக தடைகளையும் தெரியபடுத்துங்கள்.
No comments:
Post a Comment