இந்த வருடம் முதல் நான் படிக்கும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிரலாம் என முடிவெடுத்துள்ளேன். இந்த சிறு முயற்சி நண்பர்களுக்கு புத்தகங்களை பற்றிய ஒரு அறிமுகமாகவும், வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ளவும் உதவும் என நம்புகிறேன். இந்த வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு ஐம்பது புத்தகங்களையாவது படித்த விட வேண்டும் என முடிவெடுத்து உள்ளேன், பார்க்கலாம்!
சமீபத்தில் மறைந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து உள்ளேன், மிக சிறிய புத்தகம். நான் சந்தித்த பல சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் தங்களை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் சீடன் என பெருமையாக அறிமுகப்படுத்தி கொள்வதை எண்ணி வியந்திருக்கிறேன்.
புத்தகத்தின் பெயர் : எண்ணங்கள்
ஆசிரியர் பெயர்: டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பாளர்: கங்கை புத்தக நிலையம்
விலை: 35/-
பக்கங்கள்: 167
முடிந்தால் நீங்களும் வாசிக்க தொடங்கி விடுங்கள்.
அடுத்து படிக்க இருப்பது :
அறிந்ததினின்றும் விடுதுலை, ஜே. கிருஷ்ணமூர்த்தி.
விரைவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment