முன் குறிப்பு: தல ரசிகர்கள் முழுதாக படித்து விட்டு திட்ட ஆரம்பிக்கவும்!
பில்லா 2 படத்துக்கு செல்லும் முன் தீவிர தல ரசிகனான என் தம்பி என்னிடம் சொன்னது, படத்தில் காமெடி எல்லாம் இல்லைடா! முடிந்த பின் தான் தெரிந்தது, படத்தில் காமெடிக்கு தனி ட்ராக் இல்லன்றத தான் அந்த நல்லவன் அப்படி சொல்லி இருக்கான், மத்தபடி படம் முழுக்கவே செம காமெடி. கதாநாயகியை கட்டி போட்டு விட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் வில்லன்கள் ஸ்நியபர் துப்பாக்கியை வைத்து கொண்டு உட்காந்து இருப்பது, தல, சில பல வண்டிகளுடன் வந்து புழுதியை கிளப்பி கதாநாயகியை மீட்பது, வயிற்றில் பத்து, இருபது குத்து வாங்கினாலும் (கத்தியில்) தல கெத்தாக நடப்பது, ஒரு செகப்பு ஸ்கெட்சு பேனாவையும், நீதிபதி குடும்பத்தோட எடுத்த ஒரு பழைய போட்டோவையும் வைத்து, அதில் நீதிபதியை தவிர அனைவரையும் கவர் செய்யும் படி ஒரு வட்டம் வரைந்து தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்குவது எல்லாம் த்ரீ மச், இது வரை உலக திரை பட வரலாற்றிலயே இப்படி ஒரு சமயோசித வழியை எந்த வில்லனும் பின்பற்றி இருக்க மாட்டான், கடைசியில் தல அவரது வலது மற்றும் இடது கையோடு வில்லனது கோட்டைக்குள்ளயே நுழைந்து துவம்சம் செய்யும் போது எந்த தறுதலை இந்த சீன் வச்சதுனு கேக்கலாம்னு பார்த்தேன், சுத்தி தல ரசிகர்கள் (என் தம்பியையும் சேர்த்து) இருந்ததால் வாயை மூடி கொண்டேன். படம் முழுக்க மாஸ் மாஸ் னு யோசிச்சு திரைக்கதை பழைய புயுஸ் போன பல்பு மாதிரி ஆயிடுச்சு. கதை தான் கொஞ்சம் காமெடியே தவிர தல இன்னாமா நடிச்சு இருக்கார், இன்னா கெத்து, ஸ்டைல், தலைவா யு ஆர் கிரேட், ஐய்ஐய்யோ இது தளபதி டயலாக் இல்ல, சாரி தல யு ஆர் கிரேட்!. தல ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் மத்தவங்க விடு ஜூட்!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
வி. எஸ். வினோத் குமார்
// கதை தான் கொஞ்சம் காமெடியே தவிர தல இன்னாமா நடிச்சு இருக்கார், இன்னா கெத்து, ஸ்டைல்//
ReplyDeleteஎன்ன கொடுமைங்க வினோத் இது!!!!