Sunday, July 8, 2012

நான் ஈ (நானி)!




நானி என்ற இளைஞன் தன் காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றவும், தன்னை கொன்றதுற்கு பழி வாங்கவும் நான் ஈ என்று அவதாரம் எடுத்து வருகிறான், ஈயாக அவதாரம் எடுத்த நானி தன் காதலியை வில்லனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. இது வரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் கையாளப்படாத துல்லியமான கிராபிக்ஸ் காட்சிகள், ஒரு விநாடி கூட ஒவ்வாமை ஏற்படுத்தாத ரம்மியமான திரைக்கதை, கண்ணுக்கினிய கண்ணியமான காட்சி அமைப்புகள், நேர்த்தியான நடன அசைவுகள், மனதை வருடும் பின்னணி இசை, இயல்பான நடிப்பு, திரைக்கதை உடன் பிண்ணி பிணைந்த நகைச்சுவை காட்சிகள், அப்பப்பா எவ்வளவு பிளஸ்கள்.. படம் முடிந்த பிறகு தான் உணர்ந்தேன், கடைசி அரை மணி நேரம் கை, கால், கண், காது, கழுத்து எல்லாவற்றையும் எதோ மோடி மஸ்தான் வித்தை செய்து திரைப்பட குழுவினர் கட்டி போட்டு விடுகின்றனர்.
இயக்குனருக்கு ஒரு பெரிய ஓ போடலாம்; கற்பனை குதிரையை ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிறார்; துல்லியம், ரம்மியம், கண்ணியத்தை நம்பி படம் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். அனைத்தையும் அழகாகவும், நேர்த்தியாகவும் காண்பித்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
லாஜிக் பார்க்காமல், விதண்டாவாதம் பேசாமல் இரண்டரை மணி நேரம் தேமே என்று உட்கார்ந்து பொழுதை கழிக்க சிறந்த படம்.

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

No comments:

Post a Comment