ஆயிரம்
கோடி கோளாரிருக்க அவையனைத்தை விட்டு இதை மட்டும் நோக்கும் இவன் பொய்யன் என்றாய்
-
ஆயிரம்
ஆயிரம் நானிருக்க அவனையெல்லாம் விட்டு என்னை மட்டும் நோக்கும் நீ!
உன்னிடம் அதிகம் பேச ஒன்றும் இல்லை,
ஆயிரம்
கோடி ஆண்டு அறியாமை வரலாற்றின் இன்றைய எச்சம் தான் நீ!
ஆயிரம்
கோடி துளி விஷத்துளிகளில் எதன் வீரியம் அதிகம்?
நீ
உட்கொண்டது உனக்கானது, நான் உட்கொண்டது எனக்கானது!
ஆயிரம்
கோடி கோளாறில் எதன் பாதிப்பு அதிகம்?
நீ
உணர்ந்தவை உனக்கானது, நான் உணர்ந்தவை எனக்கானது!
மின்னலும்,
இடியும் ஒன்றாம் -
ஆனால் அதை
பார்ப்பதும் கேட்பதும் ஒட்டமறுக்கிறது!
நான்
பார்ப்பது என்னை உந்தி தள்ளுகிறது -
கேட்பவைகள் என்னுள் புகுந்து
கொள்ளு(ல்லு)கிறது,
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது -
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது -
புகுந்தவை
என்னுள் நடக்கிறது,
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
#சமூக பிரச்சனைகளை அணுகுதல்!
No comments:
Post a Comment