சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு மைல் கல், ஜனநாயகத்தின் ஒப்பில்லா அதிசியம்.. பண பலம், ஊடக பலம், செல்வாக்கு, ரவுடியிசம், இலவசங்கள், ஜாதி வாக்குகள், குலதெய்வத்தின் மேல் சத்தியம் போன்ற அனைத்தையும் உடைத்தெறிந்து ஜனநாயகம் விண்மீனை போல ஒளிர்கின்றது. ஒரு கட்சி அறுபது வருடங்களாக சேர்த்த செல்வாக்கை ஒரே தேர்தலில் உடைத்தெறிந்து ஜனநாயகம் தன்னை மேலும் அழகாக்கி கொண்டது. எங்கும் முறைகேடு, எதிலும் முறைகேடு என்று ஆட்சி செய்து வந்த தி.மு.காவை வேரறுத்தது ஒரு வகையில் சந்தோஷத்தை கொடுத்தாலும், இந்த நல்லதொரு தொடக்கத்தை அ.தி.மு.க எப்படி எடுத்து செல்ல போகிறது என்ற ஆவலும், எதிர்பார்ப்பும் மேலோங்கி இருக்கிறது, கூடவே எந்த தவறும் நடந்து விட கூடாது என்ற கவலையும், அப்படி நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. ஜனநாயகத்தின் மூலம் ஒளிர்ந்த தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை, இந்தியாவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக ஒளிர வழி செய்ய வேண்டும் என்ற ஏக்கம் பெரும்பாலான மக்களிடையே உள்ளது. தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவது ஓரிரு நாட்களிலோ, மாதங்களிலோ நடக்க கூடிய விழயம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஜெயலலிதா போன்ற ஒரு சிறந்த தலைவரால் இதை மூன்று, நான்கு வருடத்தில் கண் முன் நிறுத்தி விட முடியும் என்பதில் பலர் அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ளனர். அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சிறிது அதிக பொறுப்புடனும், நன்றியுடனும், கண்டிப்புடனும் செயல்பட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் சரி செய்து தமிழகத்தை ஓரிரு வருடங்களிலயே வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும், அடுத்த சில வருடங்களில் தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாகவும் மாற்ற முடியும். நமது அடுத்த முதல்வருக்கு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதுடன் நமது தொப்புள் கொடி உறவான, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. சிறந்த நிர்வாகம், மக்கள் நல திட்டங்கள், தனி மனித பொருளாதார மேம்பாடு, சட்டம் ஒழுங்கு, விவசாயம், கல்வி, தொழில் மேம்பாடு போன்ற பல விழயங்கள் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தூண்களாக நின்று ஒளிர செய்யும். அவற்றில் அவசியமானதாக, பல துறைகளில் உள்ளவர்களின் எதிர்பார்பாக இருக்க கூடிய சில கருத்துகளை பின் வரும் பகுதிகளில் அலசுவோம்.
- தொடரும்..
அன்புடன்,
வினோத் குமார்.
கருத்துகள் வரவேற்கபடுகிறது!
No comments:
Post a Comment