Saturday, August 27, 2011

முடிந்தால் சிந்தியுங்கள்!


இலங்கையுடனான உறவை, எக்காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள, இந்தியா தயாராக இல்லை. கச்சத்தீவு முடிந்து போன விஷயம். திரும்பவும் பேச முடியாது. போர்க்குற்றம் குறித்து இலங்கையே விசாரிக்கும் : கிருஷ்ணா

தினமலர் செய்தி - ஆகஸ்ட் 26 , 2011.  

இந்த திறமையான காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அடுத்து என்ன மாதிரியான அறிக்கைகள் வரலாம் என்று ஒரு சின்ன ஊகம்!

->2ஜி ஊழலை ராஜா தலைமையில் தி.மு.க விசாரிக்கும்!
->காமன் வெல்த் ஊழலை கல்மாடி தலைமையில் காங்கிரஸ் விசாரிக்கும்!
->சத்யம் முறைகேட்டை பற்றி ராமலிங்க ராஜு விசாரிப்பார்!
->சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை பற்றி, ஹசன் அலி தலைமையில் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களே விசாரிப்பார்கள்!
->பத்திரத்தாள் முறைக்கேட்டை தெல்கி விசாரிப்பார்!
->போபர்ஸ் ஊழலை ஒத்தோவியோ குவாத்ரோச்சி விசாரிப்பார்!
->மும்பை தீவிரவாத தாக்குதல்களை பற்றி அஜ்மல் கசாப் விசாரிப்பார்!

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு கச்சத்தீவு முடிந்து போன விழயமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் வாழும் நம்மை போன்றோருக்கு காஷ்மீரும், அருணாச்சல் பிரதேசமும் கூட முடிந்து போன விழயமாக இருப்பதில் தப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை! இலங்கையை விட பல மடங்கு பலம் வாய்ந்த நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான உறவை மட்டும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும்! தனி மனிதர்களுக்கு மட்டும் தான் இறையான்மையா, மத்திய அமைச்சர்களுக்கு கிடையாதோ! அநியாயங்களை கண்டும் காணாமல் இருப்பதற்கு பெயர் தான் வெளிஉறவு கொள்கையா? அகிம்சையையும், ஆன்மிகத்தையும் உலகுக்கே போதித்த இந்தியாவுக்கு, காங்கிரஸ் அரசின் இந்த போக்கு உலக அரங்கில் அவமானத்தை தேடி தராதா? இந்த பச்சோந்தி கொள்கைகளால் நாம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகுவோம் என்பது இந்த அரசுக்கு தெரியாதா! 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார்

No comments:

Post a Comment