உறவுகள், நட்பு, அன்பு போன்ற உன்னதமான விழயங்களை புறக்கணித்து விட்டு பணத்தை தேடி நாம் முன் வைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்குள், நாமே வளர்த்து கொள்ளும் தீவிரவாதம். நம் தலைமுறையிலே பக்தி, அன்பு, வெட்கம், அழுகை, துடிப்பு, நெகிழ்வு, பவ்யம் போன்ற பல உணர்வுகளை இழந்து, வெறும் உதட்டளவு சிரிப்பு, காமம், வெறி, பயம் போன்ற வெகு சில உணர்வுகளை கொண்ட, நாகரீக வளர்ச்சி குறைந்த மனித பிண்டங்களாய் உலாத்தி கொண்டு இருக்கிறோம், இந்த நிலையின் முடிவு, மனித இனத்தின் நாகரீகம் அற்ற, ஒருவனை ஒருவன் கொன்று சாப்பிடும் முதல் நாளாக தான் இருக்க முடியும்! Facebook, Orkut, போன்ற வலை பின்னல்களில் மாயையான நட்பை தேடுவதில் சிறிது நேரத்தை உங்கள் உறவுகளுடனான பாச வலை அறுபடாமல் இருக்க செலவு செய்யுங்கள்!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment