வெகு காலமாக அப்துல் கலாமை விமர்சித்ததற்காக பல பேரின் கண்டனத்திற்கு ஆளாகினேன், இருந்தாலும் அப்துல் கலாமை எப்படி நீ சொல்லலாம் என்ன திரும்ப பல அறிவு ஜீவிகள் பதிவுகளை போடுவதால் இந்த பதிவு!
கூடங்குளத்தில் உள்ள அணு உலைகளை அளிப்பது ரஷ்ய நாட்டை சேர்ந்த நிறுவனம், இன்று வரை அவர்கள் நாட்டில் தயாரித்த அணு உலையில் ஏற்பட கூடிய விபத்துக்கு பொறுபேற்க தயாராய் இல்லை, அப்படி இழப்பிடு தர வேண்டும் என்ற கட்டாயம் இருந
்தால் நாங்கள் இதை விற்க தயாராய் இல்லை என்பதை தெளிவு படுத்திய பின்பு வேறு வழி இல்லாமல் இந்திய மக்களின் வரி பணத்தின் மூலமாக இழப்பீடு கொடுத்து கொள்ளலாம் என்ற தான்றோன்றி தனமாக முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது, தயாரிப்பாளரே பிரச்சனைக்கு பொறுபேற்க விருப்பமில்லாத ஒரு தொழில் நுட்பத்திற்கு தான் நமது அறிவியல் ஞானி மாண்புமிகு திரு அப்துல் கலாம் அவர்கள் 100௦௦% பாதுகாப்பானது என்று உத்தரவாதம் கொடுத்திருகிறார், இதை அவர் ரஷ்ய கம்பெனியிடம் சொல்லி நமக்கு இழப்பிடு வாங்கி தரும் படி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து இருந்தால் கூட அவரை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம், சாதாரண மக்களிடம், அவரை ஒரு அறிவாளியாக, தலைவராக, ரோல் மாடலாக நினைக்கும் பல கோடி மக்களின் முன் சொல்கிறார் அணு உலை 100௦% பாதுகாப்பானது என்று! இதை நான் இரண்டு விதமாக பார்கிறேன், ஒன்று இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கோமாளியாக அப்துல் கலாம் இருக்கலாம், அப்படி இல்லை தன்னை நம்பி இருக்கும் மக்களை கோமாளியாக ஆக்கி காரியத்தை சாதித்து கொள்ள கூடிய ஒரு குள்ள நரியாக இருக்கலாம். ஆக அப்துல் கலாமை சாடுவதில் எந்த தவறும் இல்லை என்பதை இதன் மூலம் அப்துல்கலாமை தெய்வமாக நினைத்து கொண்டிருக்கும் அன்பிற்கினிய, அப்பாவி உள்ளங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களை நான் பரிதாபப்பட்ட பிறவிகளாக தான் பார்க்கிறேனே தவிர எதிரியாக அல்ல.
பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
ட்டு பூஜை அறையில் வைத்து கும்புடுகிறேன்.பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
No comments:
Post a Comment