இருபத்தாறு வருடங்களாக பயனற்ற, வடிவமற்ற பாறையாக ஏக்கத்தோடும், இயலாமையோடும் இருந்த என்னை, சிறிது காலமாக பல சிறு சிறு உளிகளை கொண்டு இந்த சமூகம் செதுக்க ஆரம்பித்திருப்பதாக உணருகிறேன்! எனக்கான தளமும், நோக்கங்களும் தெளிவாகும் போது ஏக்கங்களும், இயலாமையும் பலம் இழக்கின்றன! பாலைவனத்தில் விதைக்கப்பட்ட விதையாய் பரிதவித்த மனசாட்சியும், ஆன்மாவும் புதிதாய் பெய்த மழையில் துளிர் விடும் ஆரம்பிக்கும் விருட்சம் போல் எழ ஆரம்பித்து இருக்கின்றன. வீழ்ச்சிகளும், தோல்விகளும் அன்றாட நிகழ்வான வாழ்கையில், வீழ்ச்சிகளும், தோல்விகளும் சந்தர்பங்களுக்கு தானே தவிர மனதுக்கோ, உடம்புகோ, ஆன்மாவுக்கோ அல்ல என்பது தெள்ள தெளிவாகி விட்டது. பல கடினமான நேரங்களில், வாழ்கை ஓட்டத்தில் என்னை இழந்து விடாமல் தடுக்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும், என்னை எதிரியாக நினைத்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாரதியின் வழியில், தினம் தினம் புதியதாய் பிறக்க மட்டுமல்லாமல், மனிதனாகவும் பிறக்க கற்று கொண்டு விட்டேன் என நினைக்கிறேன். வலிகளுக்கு ஊடே செதுக்கப்படுகிறேன், ரத்தமும், சதையும் கொண்ட பிண்டமாக அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் கொண்ட மனிதனாக!
இந்த உலகிற்கு விடுப்பு கொடுக்கும் முன்பு சமூகத்திற்கு என் பயனையும், உலகிற்கு என் வடிவத்தையும் காட்டி விட வேண்டும் என்ற உந்துதலோடு தொடர்கிறேன்!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.
very well written da.. I could feel that its not just a blog.. its something really beyond.. some true thing from your heart...!!
ReplyDelete