Wednesday, November 9, 2011

முடிந்தால் சிந்தியுங்கள் - 2

உறவுகளை துச்சமாக மதித்து, அந்நிய நாட்டில் கிடைக்கும் பணத்திற்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வசதிகளுக்காகவும், கட்டவிழ்த்த சுதந்திரத்துக்காகவும், ராஜ அடிமைகளாக உங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கும் இந்தியர்களே! உங்கள் செயலை நியாயபடுத்த, இந்திய நாட்டில் அது நொட்டை, இது நொல்லை என்று சொல்வதை தயவு செய்து இன்றோடு நிறுத்தி விடுங்கள். உங்கள் தாயார் அசிங்கமாக இருந்தால், அழகாக இருக்கும் த்ரிஷாவையும், நயந்தாராவையும் அம்மா என்று எப்படி கூப்பிட முடியாதோ, அதே போல் எங்கள் தாய் நாட்டில் எவ்வளவு நொட்டைகள் இருந்தாலும், எவ்வளவு நொல்லைகள் இருந்தாலும் எங்களால் அவளை விட்டு கொடுக்க முடியாது! உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் இருங்கள், இல்லை உங்கள் விருப்பம் போல் உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வாழ்கையை தொடங்குங்கள், நாங்கள் தடுக்கவில்லை, அதை விட்டு இந்தியாவை குறை சொல்லி உங்களையும் ஏமாற்றி கொண்டு, வருங்கால இந்தியாவையும் எமாற்றதிர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை பற்றியும், உங்கள் செல்வம் கொழிக்கும் சமூகத்தில் இருக்கும் இருண்ட பகுதியை பற்றியும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். முதலில், செல்வம் என்ற வார்த்தைக்காக நீங்கள் இழந்ததையும், இழந்து கொண்டிருப்பதையும், இழக்க போவதையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் இன்னும் வாழ தொடங்கவே இல்லை என்பது புரியும்!

முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

ஏழாம் அறிவு!

சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான் 

ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்

சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்//

கேட்பதற்கு பெருமையாக இருந்தாலும் பெருமைப்பட முடியவில்லை! இன்னும் புதினம், தமிழ்நெட் போன்ற வலைதளங்களில், ஒவ்வொரு நாளும் நான் கண்ட லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் சிதைந்த உடல்கள் கண்முன்னேயே இருக்கிறது, பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாரையும் விட்டு வைக்கவில்லையே, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளும், கொத்து குண்டுகளும் நம்மை போன்ற உயிருள்ள மனிதர்களை சில்லு சில்லாக சிதைத்து கொண்டிருந்தனவே, ஐ. நா வழங்கிய உணவு பொருட்களையும், மருத்துவ உதவியையும் கூட தடை செய்து பசியாலும், மருத்துவ உதவி இன்றியும் எவ்வளவு பேரை கொன்றார்கள்! அப்பொழுது பேசி இருக்கலாமே இந்த வசனத்தை!! இறையாண்மை என்ற ஒரு வார்த்தையை வைத்து கொண்டு இந்த பரந்த உலகத்தையே ஆண்மை அற்றதாக ஆக்கி விட்டனரே! திவீரவாததிற்கு எதிரான போர், இந்த கொலைகார வாக்கியம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை எத்தனை லட்சம்? உலகத்தின் எல்லா மூலைகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், இத்தனை லட்சம் அப்பாவி உயிர்களை எந்த போரும் எடுக்கவில்லையே, போர் முடிந்த பின்னரும் லட்சகணக்கான மக்களை இப்படி கூண்டில் அடைத்து சித்தரவதை செய்யவில்லையே? நாதியற்ற இனம் தானே நம் தமிழ் இனம், இதில் நமக்கு எதற்கு பெருமை! இந்த வீர வசனங்களை 2 வருடங்களுக்கு முன் பேசி இருந்தால் கூட இன்னும் சில நூறு சூர்யா ரசிகர்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள்

மாற்றம்!

பகுத்தறிவு என்பதை எல்லாரும் பெரியாரின் சொத்தாக மட்டும் பார்க்கும் வரை மாற்றம், ஏமாற்றமாக தான் இருக்கும்! சிந்தனை என்பது அறிவியலுக்கும், பணத்திற்கும் மட்டும் சொந்தமாக ஆன பின்னே மாற்றம் தடுமாறி கொண்டு தான் இருக்கும்!

கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!

மக்களின் நியாமான கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு தெரியபடுத்துவதும், அரசாங்கத்தின் தவறான முடிவுகளை மக்களுக்கு அம்பலபடுதுவதும் தான் ஒரு பத்திரிகையின் முதற்கடமையாக இருக்க முடியும். கூடங்குளம் விவகாரத்தில் அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல செயல்படும் சில பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மக்களின் நியாமான கோரிக்கைகளை பொய் பிரச்சாரங்கள் மூலம் இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பது வேசித்தனமான செயல். 
மக்களின் மனசாட்சியாக செயல் பட வேண்டிய பத்திரிகைகள், அதிகாரவர்கத்தின் பல சாட்சியாகவும், பணம் படைத்தவர்களின் பண சாட்சியாகவும் மாற ஆரம்பித்து விட்டால், இந்த நாட்டு மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

அக்னி சிறகுகளும், நூறு ரூபாயாயும்!

'அணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்'- கலாம் 
சாருக்கு ரெண்டு பொட்டலம் பிரசாதம் பார்சல். 
கலாம் இப்படி ஒரு காமெடி பீசா இருப்பாருன்னு மொதலயே தெரிஞ்சிருந்தா அக்னி சிறகுகள் புக்குக்கு நூறு ரூபாயா வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன்.


மிக பெரிய அறிவாளி, மிக பெரிய தலைவர், மிக பெரிய வழிகாட்டி, பல இளைஞ்சர்களோட ரோல் மாடல் இப்படி கேவலமா ஒரு கருத்த சொல்லுவாரு அத எல்லாரும் வாய மூடிட்டு கேக்கணும், அப்படி தானே?

கடைசி துளி மரியாதை!

கூடங்குளம்: ரூ. 200 கோடியில் கலாமின் 10 அம்ச திட்டம்!

டேய் வெட்கமே இல்லையடா உங்களுக்கு எல்லாம்?
இன்னும் எத்தனை நாளுக்கு தான் உங்களோட தப்பான திட்டங்களை நடைமுறைபடுத்தவும், உங்களோட தவறுகளை மறைக்கவும், இந்த மாதிரி வருமையில கஷ்டபடுபவர்களை விலை குடுத்து வாங்கி அவங்களை அடிமையாவே வச்சி இருப்பீங்க? குவாட்டர்ல ஆரம்பிச்சு, வேலை வாய்ப்பு வரைக்கும் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தே காரியத்த சாதிக்க நினைகிறீங்க, என்னைக்காவது நமக்கு ஒரு விடுவு காலம் பொறக்காதனு ஏங்கிட்டு இருக்குற மக்களோட பலஹீனத்த உங்களுக்கு சாதகமா பயன்படுத்துகுரிங்களே, உங்கள எல்லாம் நூறு தடவை தூக்குல போட்டாலும் கூட பத்தாது டா. மத கொள்கைகள சொல்லி மனித வெடிகுண்டுகள உருவாக்குற தீவீரவாதிகும், நல திட்டங்கள காமிச்சி மக்களை பலி கடா ஆக நினைக்கிற உங்கள மாதிரி கீழ் தரமான ஆட்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முடிஞ்சா என்ன பிரச்சனையோ அதுக்கு பேசி தீர்வு காணுங்க, மக்களோட நியாமான கேள்விகளுக்கு விடை கொடுங்க, மக்களோட நியாமான பயத்த போக்குங்க, எந்த ஒரு பெரிய அறிவியல் வல்லுநரா இருந்தாலும் ஒரு பேரழிவு ஏற்படும் போது நீங்க சொல்ற மாதிரி radiation levels ஆ பார்த்துட்டு மக்களுக்கு சொல்லனும்னு உட்காந்து இருக்க மாட்டான், அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாதிக்க துண்ட காணோம் துணிய காணோம்னு தான் ஓடுவான், இத எங்க வேணும்னாலும் வந்து நிருபிக்க என்ன மாதிரி ஒரு சாதாரன ஆளாலயே முடியும், எதுல நீங்க சொல்ற பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை மையம் எல்லாம் வேலை செய்யாது.

கலாம் சார் உங்க மேல இருந்த கடைசி துளி மரியாதையும் இந்த செய்தியை படித்தவுடன் செத்து விட்டது. முடிந்தால் உங்கள் செய்கையை திருத்தி கொள்ளுங்கள் இல்லையேல் உங்களை தலை மேல தூக்கி வைத்து கொண்டாடிய இந்த தமிழ் நாடு உங்கள் முகத்தில் காரி உமிழ ஆரம்பித்து விடும்.

என்ன பண்ணுவீங்க?

நூறு பேரை எவக்யுவேட் பண்றதுகுள்ளயே நம்ம தீயணைப்பு துறைக்கும், போலீசுக்கும் டப்பா டான்ஸ் ஆடிடும், அணு உலையில கதிரியிக்க கசிவு ஏற்பட்டா பத்து லட்சம் பேரை எவக்யுவேட் பண்ணுனுமே என்ன பண்ணுவீங்க?

வரலாற்று பிழைகள்!

 மனிதத்தை ஆட்கொள்ள கூடிய எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் வளர்ச்சி அல்ல வரலாற்று பிழைகள்.

கொள்கை பரப்பு ஜால்ராக்கள்!

கலாம் சார் தப்பா நெனைச்சுகாதீங்க, தப்பு தான், ஆனா கேக்க வச்சிடீங்களே, என்ன பண்றது! எங்க பார்த்தாலும் கலாமே சொல்லிடாரு, கலாமே சொல்லிடாருனு ஒரு இளைஞர் கூட்டம் அலையுது, டேய் நீங்க என்னடானு நெனைகிரீங்கனு கேட்டாலும், நமக்கு என்னடா தெரியும், அதான் கலாமே சொல்லிடாரேனு சொல்றாங்க, நாளைக்கு கல்யாணம் பண்ண அவங்க வீட்டுல கேக்கும் போதும், கலாமே கல்யாணம் பண்ணல அப்படின்னு இவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணாம இருப்பாங்களோ! பாத்து சார் நாட்டோட வளர்ச்சி உங்களால கெட்டுட போகுது, அப்பறம் எப்படி வல்லரசு ஆகறது, வளர்ந்த நாடு ஆகறது! உங்க கணவை உங்க கொள்கை பரப்பு செயலாளர்களே கேடுதுடுவானுங்க போல இருக்கே!

கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள்!

கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள். அவர்கள்மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அப்துல் கலாம்
யப்பா இப்பவே கண்ண கட்டுதே! இவரு தெரிஞ்சு பேசுறாரா, இல்ல சும்மா டைம் பாஸ் பண்றரா! ஜனநாயகத்தை அழிச்சிட்டு இவரு என்ன மயித்த புடுங்க போறாரு! காந்தி பிறந்த நாட்டில், அணு ஆயுதங்களை வளர்த்து விட்ட இந்த மாதிரி மகான்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்தால் இது தான் கதி!

Monday, November 7, 2011

நயன்தாராவுடன் அணு உலை திறப்பு விழா!

அமெரிக்கா கம்பனி தயாரிச்ச ஜட்டி பனியன் அளவை சரி பார்க்குற சாப்ட்வேர்கே, ஸ்மோக் டெஸ்ட், அசிட் டெஸ்ட், கிராஷ் டெஸ்ட், ரிக்ரேச்சன் டெஸ்ட் னு என்ன என்னவோ எடுத்துட்டு தான் குடுக்குறீங்க, இருபது லட்சம் மனிதர்களுக்கு மேல பாதிப்பு ஏற்படுத்த கூடிய ஒரு அணு உலைய, என்ன என்ன டெஸ்ட் எடுத்து பார்த்தீங்க? மக்கள் பயத்த போக்க ஒரே ஒரு டெஸ்ட் எடுத்து காமிங்க சார், நூறு ஏவுகனைகள எடுத்துகோங்க, முப்பதை சீனாவிலும், முப்பதை பாகிஸ்தானிலும், இன்னொரு முப்பதை இலங்கையிலும், இன்னொரு பத்தை காழ்மீர் தீவிரவாதிகள் கிட்டயும் கொடுங்க, அவங்கள அத வெச்சு அணு உலைய தாக்கி காமிக்க சொல்லுங்க, அணு உலைக்கும், மக்களுக்கும் ஒன்னும் அகலைனா நாங்க எல்லாரும் வந்து, மைக் செட் எல்லாம் வச்சி, பிரபுதேவா பர்மிசினோட நயன்தாராவை ஒரு குத்தாட்டம் போட வச்சி திறப்பு விழாவ அமக்களபடுதிடலாம்.


அன்புடன்,
வி எஸ் வினோத் குமார்.

புறக்கணிப்பு!


இந்த உலகமே உன்னை புறக்கணித்தாலும் நீ இழந்து விட போவது ஒன்றும் இல்லை, உன்னை, நீயே புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால், நீ இழப்பதற்கு உன்னிடம் ஒன்றுமே இல்லை.
அன்புடன்,
வி எஸ் வினோத் குமார்.

Tuesday, October 25, 2011

இனிய தீபாவளி வாழ்த்துகள் :-)




இந்த தீப ஒளி திருநாளில், உங்கள் வாழ்கை பாதையில் படிந்திருக்கும் இருள் முற்றிலுமாக தொலைந்து போகட்டும், இனி வரும் காலம் மத்தாப்பின் சிரிப்போடும், அணுகுண்டின் அதிரடியோடும், வான வேடிக்கையின் உற்சாகத்தோடும் வண்ணமயமாக அமையட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள் :-)

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

பின் குறிப்பு: சுற்று சூழலுக்கு அதிக அளவு மாசு ஏற்படா வண்ணம், குறைந்த அளவு பட்டாசுகளை வெடித்து, நிறைவான மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், பாதுகாப்போடும் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

Monday, October 24, 2011

இந்தியாவின் நொட்டைகளும், நொல்லைகளும்!


உறவுகளை துச்சமாக மதித்து, அந்நிய நாட்டில் கிடைக்கும் பணத்திற்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வசதிகளுக்காகவும், கட்டவிழ்த்த சுதந்திரத்துக்காகவும், ராஜ அடிமைகளாக உங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கும் இந்தியர்களே! உங்கள் செயலை நியாயபடுத்த, இந்திய நாட்டில் அது நொட்டை, இது நொல்லை என்று சொல்வதை தயவு செய்து இன்றோடு நிறுத்தி விடுங்கள். உங்கள் தாயார் அசிங்கமாக இருந்தால், அழகாக இருக்கும் த்ரிஷாவையும், நயந்தாராவையும் எப்படி அம்மா என்று கூப்பிட முடியாதோ, அதே போல் எங்கள் தாய் நாட்டில் எத்தனை நொட்டைகள் இருந்தாலும், எவ்வளவு நொல்லைகள் இருந்தாலும் எங்களால் அவளை விட்டு கொடுக்க முடியாது! உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் இருங்கள், இல்லை உங்கள் விருப்பம் போல் உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வாழ்கையை தொடங்குங்கள், நாங்கள் தடுக்கவில்லை, அதை விட்டு இந்தியாவை குறை சொல்வதன் மூலம் உங்களையும் ஏமாற்றி கொண்டு, வருங்கால இந்தியாவையும் எமாற்றதிர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை பற்றியும், செல்வம் கொழிக்கும் உங்கள் சமூகத்தில் இருக்கும் இருண்ட பகுதியை பற்றியும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். செல்வம் என்ற வார்த்தைக்காக நீங்கள் இழந்ததையும், இழந்து கொண்டிருப்பதையும், இழக்க போவதையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் இன்னும் வாழ தொடங்கவே இல்லை என்பது புரியும்!

முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Saturday, October 15, 2011

ப்ரீதிக்கு நான் காரண்டீ!

ப்ரீதிக்கு நான் காரண்டீ என்பது போல மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முயற்சிக்கிறார் நம் பிரதமர்! அலையாத்தி காடுகளை வளர்ப்பதன் மூலம் சுனாமியின் பாதிப்பை குறைக்க முடியும் என்று அறிவியல் மேதைகள் படித்து படித்து சொல்லியும், இன்று வரை எந்த இந்திய கடற்கரையிலும் அலையாத்தி காடுகளை வளர்க்க தீவிர முயற்சி எடுத்ததாக தெரியவில்லை, இவர் நம் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முயற்சிப்பது பூனையின் கண்ணை மூடி விட்டு உலகமே இருண்டு விட்டதாக அதை நம்ப வைக்கும் முயற்சி தவிர வேறு இல்லை. பதிமூன்றாயிரம் கோடிக்காக ஆறு கோடி மக்களின் உயிரோடு விளையாடுவது இரண்டாயிரம் ரூபாய் இழப்புக்காக ஒருவனின் உயிரை பறிக்க முயற்சிபதற்கு சமம். பொது மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, கார்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக தமிழகத்தை இன்னொரு போபாலாக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறோம்.

அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

அரசாங்கத்தின் பூச்சாண்டி!

 
 
நிலக்கரி பற்றாகுறை, காற்றலை உற்பத்தி குறைவு என மின் பற்றாகுறை பிரச்சனையை மிகைபடுத்தி, அணு மின் நிலைய பிரச்சனையை திசை திருப்ப முயலும் மத்திய அரசு, நாளை உணவு பற்றாகுறை என்று மனிதர்களை மனிதர்களே கொன்று திண்ண கூட சட்டம் இயற்றினாலும் அச்சிரியபடுவதர்கில்லை! நம் இந்தியாவின் மக்கள் சக்தியை பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை லாபமாக தங்கள் நாட்டுக்கு எடுத்து செல்லும் கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் மின் தேவையை அரசாங்கத்தை நம்பியில்லாமல் சுயமாக பூர்த்தி செய்ய தீர்மானம் இயற்றபட வேண்டும், இது தற்போது எழுந்துள்ள அணுமின் பிரச்சனைக்கு தீர்வாக மட்டும் இல்லாமல், நட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு ஊக்கமாகவும், புதிதாக பல தொழிலதிபர்கள் மின் உற்பத்தியில் கால் பதிக்க ஒரு உந்துதலாகவும், உலக அளவில் மின் உற்பத்தியில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க ஒரு வாய்பாகவும் இருக்கும். பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வை யோசிக்காமல், குறுக்கு வழியில் காரியத்தை சாதிக்க நினைக்கும் அரசின் இந்த மெத்தன போக்கு என்று தான் மாறுமோ! 
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

Friday, October 7, 2011

அணு உலை பாதுகாப்பானது தான், ஆனால் இங்கு அல்ல!




அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமரின் முட்டாள்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஜப்பானில் நடந்த பேரழிவுக்கு பின்னர் பல உலக நாடுகள் இயங்கி கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையே மறுபரிசிலனை செய்ய முற்படும் போது யாருடைய நலனுக்காக அவசர அவசரமாக புதிதாக ஒரு அணுமின் நிலையத்தை இயக்க துடிக்கிறார் நம் பிரதமர்? நாட்டின் பெரும்பகுதி மின்சாரத்தை அயல் நாட்டு தொழிற்சாலைகள் பயன்படுத்தி கொண்டிருக்கையில், குடிமக்களின் நலன் கருதி மின் உற்பத்தியை அதிகபடுத்த தீவிரம் காட்டுவது போல நம் பிரதமர் நடந்து கொள்வது கேலிகூத்து! விதண்டாவாதம் பேசுவதில் நம் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே , உயர்திரு சோ சொல்கிறார், அணுமின் நிலையம் ஆரம்பித்து பல வருடங்களாக போராடாத மக்கள், அது செயல்பட தயாராகும் நேரத்தில் யாரோ சிலரின் தூண்டுதலால் போராடுகிறார்களாம்! விட்டால் ஜப்பான் தனக்கு அணுமின் நிலையங்களே தேவை இல்லை என்ற முடிவை கூட தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் தூண்டுதலால் தான் என்பார்கள் போல! எப்படியெல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும். அணுமின் நிலைய கட்டுமான வேலை ஆரம்பித்து எத்தனை தடவை தற்பொழுது ஜப்பானில் ஏற்பட்ட அழிவை போல ஏற்பட்டுள்ளது? ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுக்கு பிறகு தான் அணு ஆயுத தயாரிப்பு, உபயோகம் மற்றும் கையிருப்பை பற்றி உலக நாடுகள் தீவிரமாக சிந்தித்து, கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்தது என்று இந்த அறிவு ஜீவிகளுக்கு தெரியாதா? ஒரு வேடிக்கையான ஆங்கில பழமொழி உண்டு, இது வரை யாருமே செய்திராத பல ஆயிரம் தவறுகள் இருக்கும் போது, ஏற்கனவே யாரோ செய்த தவறை மறுபடி ஏன் செய்யவேண்டும்? அணுமின் நிலையங்களால் பேரழிவு ஏற்படும் என்பதை கண்கூடாக கண்ட பின்பும் அவசர அவசரமாக முடிவெடுக்கும் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களை என்னவென்று சொல்வது?
நம் தொழில் நுட்பத்தை நம்புங்கள், நம் அறிவியல் வல்லுனர்களை நம்புங்கள் என்று கூச்சல் போடுபவர்கள் கவனத்திற்கு, தொழில் நுட்பம் முழுவதும் நம்முடையது அல்ல, அறிவியல் வல்லுனர்களை நாங்கள் முழுவதும் நம்புகிறோம் ஆனால் அதை விட அதிகமாக அணுவின் தீவிரத்தையும், இயற்கையின் சக்தியையும், மனிதர்களின் வக்கிரத்தையும் கண்டு நடுங்குகிறோம். இவர்களை தூக்கி சாப்பிடும் சில மகான்கள் உள்ளனர், நடந்து போனாலும் மரணம் வரும், சைக்கிளில் சென்றாலும் மரணம் வரும், பஸ்சில் சென்றாலும் மரணம் வரும், எரோப்ளேனில் சென்றாலும் மரணம் வரும், ராக்கெட்டில் சென்றாலும் மரணம் வரும் என்று என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொட்டுவார்கள், சாவுக்கும், அழிவுக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களை எல்லாம் எந்த கூட்டத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை! சில நூறு பேர் சாவதற்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு ஈ, கொசு கூட இல்லாமல் அழிந்து போவதும் எப்படி ஒன்றாகும்?அணு கதிர்களால் நீங்களும் நானும் மட்டுமா சாக போகிறோம்? நம் தலைமுறை மட்டுமா பாதிக்க பட போகிறது?
நாங்கள் அணுமின் நிலையங்களை மட்டும் எதிர்க்கவில்லை, அணு ஆயுதங்களை மட்டும் எதிர்க்கவில்லை, மானுடத்தை சுக்கு நூறாக சிதைக்கும் வல்லமை பெற்ற அணுசக்தியை மொத்தமாக எதிர்க்கிறோம், அணு உலகின் தலை சிறந்த ஆற்றல் என்பதில் மாற்று கருத்து இல்லை, அணுமின் நிலையங்களின் எண்ணிகையை விட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பள்ளி சிறுவர்களுக்கு கூட தெரிந்த நிதர்சனமான உண்மை. இயற்கை அழிவை கண்டிராத கோளில், வன்முறையை அறியாத உலகத்தில், எதிரிகள் இல்லாத நாட்டில், மனித தவறுகள் நிகழாத சமூகத்தில் அணு உலை பாதுகாப்பானது தான், ஆனால் இங்கு அல்ல!


அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

Thursday, September 29, 2011

இவன் சரிப்பட்டு வரமாட்டான்!




மழைக்கால தொடர்: ராகுல் பார்லிக்கு வந்தது 6 நாள் தான்!
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி துவக்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம், 25 நாட்கள் பார்லிமென்டின் அவைகள் இயங்கின. இந்த கூட்டத்தொடரில் நடந்த மிக முக்கிய விவாதங்களில், மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று எடுத்தால், இலங்கை தமிழர் விவகாரம், தெலுங்கானா பிரச்னை, விலைவாசி உயர்வு விவகாரம், கிட்டங்கிகளில் உணவுப்பொருட்கள் வீணாவது ஆகியவைதான். இந்த விவாதங்கள் நடைபெற்ற தெல்லாம் அவையில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். ஆனால், இந்த விவாதங்கள் எதிலும் காங்கிரஸ் எம்.பி.,யும், அந்த கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் ராகுல் பங்கேற்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடரின் போது ஒரே ஒருமுறை மட்டும் ராகுல் பேசினார். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதை தாக்கி அவையில் அவர் பேசினார். உண்ணாவிரதம் இருப்பதன் வாயிலாக அவர் பார்லிமென்ட் மீது அதிகாரம் செலுத்துவதாகவும், அது முடியாது என்று ஹசாரேவை எச்சரித்தும் லோக்சபாவில் பேசினார். அன்றைய தினம் ராகுல் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பொதுவாக, ஜீரோ நேரத்தில் இதுபோல யாருக்கும் திடீர் அனுமதியை சபாநாயகர் வழங்குவது இல்லை என்றும், ராகுலுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கப்படுவதாகவும், இது பார்லிமென்ட் நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தின.
நன்றி - தினமலர்
ராகுல் உச்சா போனா கூட பக்கம் பக்கமா எழுதுற ஆங்கில பத்திரிகைகளும், ஆங்கில செய்தி சேனல்களும் அவர் பாராளுமன்றம் பக்கமே போகாம இருந்ததை மட்டும் எப்படி எழுதாம விட்டாங்க.
இவன் சரிப்பட்டு வரமாட்டான், அந்த விழயத்துக்கு இவன் கண்டிப்பா சரி பட்டு வரவே மாட்டான். சொன்னா கேளுங்க!



அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

பெண்ணிய அமைப்புகளின் கவனத்திற்கு!



உங்கள் பாதுகாப்புக்காக, நாகரீகமாக உடை அணிய யாராவாது சொன்னால், உங்கள் உரிமைகளை நிலை நாட்டுகிறோம் என்று கூறி உலகம் முழுவதும் போராடுகிறீர்கள், எல்லா சேனல்களும், 5 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை வாசனை திரவியதுக்கும், பல் பசைக்கும், ஆண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும், அவர்கள் வைத்திருக்கும் காருக்கும், செல் போனுக்கும் அலையும் அற்ப பிறவிகளாக சித்தரித்து கொண்டிருப்பதை எதிர்த்து எந்த அமைப்பும் போராடுவதாக தெரியவில்லையே! உங்கள் நோக்கம் தான் என்ன !? கடவுளுக்கு அடுத்த நிலையில் பெண்களை வைத்து வணங்கும் நாட்டில் பிறந்து விட்டு அல்பமாக நடந்து கொள்வதை இனி மேலாவது குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வளர்சிக்கான குறியீடாக இருக்க வேண்டும், நீங்கள் தான் இந்த சமூகத்தின் வழிகாட்டிகளாக திகழ வேண்டும், நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இறுக்க வேண்டும், உங்களால் தான் குற்றங்களற்ற ஒரு தலைமுறையை உருவாக்க முடியும். உங்கள் சிறப்பை உணருங்கள், உங்களை கீழ் தரமாக சித்தரிக்க யாரையும் அனுமதிக்காதிர்கள் , உங்கள் சக்தியை குடும்பத்தின் வளர்சிக்கும், சமூகத்தின் நன்மைக்கும், நாட்டின் எழுச்சிக்கும் பயன்படுத்துங்கள்.


அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்


Wednesday, September 21, 2011

இப்படியும் சொல்வார்கள் - எலி மருந்து பாதுகாப்பானது!



பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு இலக்கை துள்ளியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் இஸ்ரோ சொல்கிறது, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று" ! ஒரு வேளை உலகத்திலயே இந்தியாவிடம் மட்டும் தான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளதோ?? 13000 கோடி வீணாகிறதே என்று கவலைபடுபவர்கள் கவனத்திற்கு, பல லட்சம் கோடிகள் வரி எய்பால் வீணாகிறது, முதலில் அதற்கு குரல் கொடுங்கள் பின்பு அணு உலையால் வீணாகும் 13000 கோடி ஒரு பெரிய இழப்பாக தெரியாது, இருமல் மருந்து என்று நினைத்து எலி மருந்தை வாங்கி விட்டால் பணம் வீணாகிறது என்று குடிக்கவா முடியும்??  i

Thursday, September 15, 2011

WORRIED ABOUT HIKE IN PETROL PRICE??


-Try using public transport as much as possible
-Avoid using Cars/Autos when travelling alone
-Minimize use of bikes for shorter distances. Try walking or cycling
-Declare House Rent Allowance correctly and pay your taxes properly
-Avoid purchasing anything from the black market
-Get proper receipts for any thing you purchase
-Declare the correct value of a property when registring it
-Try helping atleast 10 bpl individuals in your neighbourhood to come up financially 
-Minimize the habit of unncessary shopping and use of credit cards
-Try saving at least 20% of your income as savings
and then start commenting and condemning government else PLEASE KEEP QUIET.

Thursday, September 1, 2011

தேர்தலை சந்திக்காதவர் தன்னை மக்களின் குரல் என்பதா? ஹசாரே மீது சசிதரூர் தாக்கு!

தேர்தலை சந்திக்காதவர் தன்னை மக்களின் குரல் என்பதா? ஹசாரே மீது சசிதரூர் தாக்கு

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற ஓட்டு எடுப்பின் மூலம் தான் தலைவர்கள் உருவாக முடியும் என்று நினைகின்ற போக்கே ஜனநாயகத்திற்கு எதிரானது! கட்டாயமாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நடத்தபடுகிற ஓட்டு எடுப்பின் மூலம் உருவாக்க படுகிற தலைவர்களை விட, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து மக்கள் சக்தி மூலம் உருவாகின்ற தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பது கூட புரியாத இந்த அறிவு ஜீவிக்கிளை எல்லாம்!!

Wednesday, August 31, 2011

தேடிச் சோறு நிதந்தின்று


தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

-பாரதி

நல்லதோர் வீணைசெய்தே - பாரதி


நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
-பாரதி

Saturday, August 27, 2011

How Our Mind Can Do Amazing Things!

TH15 M3554G3
53RV35 TO PR0V3 H0W 0UR M1ND5 C4N D0 4M4Z1NG TH1NG5! 1MPR3551V3 TH1NG5! 1N TH3
B3G1NN1NG 1T WA5 H4RD BUT NOW, ON TH15 LIN3 YOUR M1ND 1S R34D1NG 1T
4UT0M4T1C4LLY W1TH OUT 3V3N TH1NK1NG 4B0UT 1T, B3 PROUD! 0NLY C34RT41N P30PL3
C4N R3AD TH15. R3 P05T 1F U C4N.

தூக்கு - செய்யாத தவறுக்காக, விசாரிக்கபடாத குற்றத்திற்காக, இல்லாத சட்டத்திற்காக!


இந்த பதிவை நான் எழுதியதின் நோக்கம் விடுதலை புலிகளின் மேல் இருக்கும் அனுதாபமோ, தமிழன் என்ற உணர்வோ, தூக்கு தண்டனை தேவை இல்லை என்று வலியுறுத்துவோ மட்டும் இல்லை, உண்மையை சொல்ல போனால் விடுதலை புலிகளின் மேல் இருக்கும் அனுதாபத்தை விட, காந்தி பிறந்த மண்ணில் பிறந்ததிற்காக நான் அதிகம் பெருமை பட்டு இருக்கிறேன், தமிழ் மொழி உணர்வும், இந்திய தேசிய உணர்வும் என்னுள் இரண்டற கலந்து உள்ளது, தமிழ் எனது தாய் மொழி , இந்தியா எனது தாய் நாடு,  ராஜீவ் கொலை குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிப்பது சரியல்ல என்று இந்த பதிவை எழுதிய நான், நாட்டில் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் மிருகங்கள் அடையாளம் காண பட்டு, வேரறுக்க பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன், அதே நேரத்தில், செய்யாத தவறுக்காக, முழுவதும் விசாரிக்கபடாத குற்றத்திற்காக, நடைமுறையில் இல்லாத சட்டத்திற்காக, ஒரு சிலரின் லாபத்திற்காக ஒருவர் கூட தீங்கிழைக்கபட கூடாது என்பதிற்காக தான் இந்த பதிவு்.

 ராஜீவ் கொலையில் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது, அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலு போன்றோர்கள், ஒரு சில விடுதலை புலி ஆதரவாளர்களால் தூண்டி விட பட்டு நடத்தபடுகிற போராட்டமாக இதை சித்தரித்து கொண்டிருகிறார்கள், இதை பற்றி நான் படித்து, கேட்டு, உணர்ந்த சில விடயங்கள் உங்கள் பார்வைக்கு!

முதலாவதாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டகள் என்று முன்னரே கூறி இருந்தேன், தடா சட்டம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!
Terrorist and Disruptive Activities (Prevention) Act என்பதின் சுருக்கம் தான் TADA
தடா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டோர் காவல் அலுவலரின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துகொள்ளவேண்டும், இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது. அவர் ஒத்துகொண்டதையே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துகொள்ளும், குற்றம் சுமத்தபட்டவர்கள் தாங்கள் நிரபராதி என்று நிரூபிக்க இந்த சட்டத்தில் எந்த வாய்ப்பும் இல்லை. வாக்கு மூலம் தவிர வேறு எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்க படலாம். இந்த சட்டம் ஆங்கிலேய ஆட்சியில் இருந்த, மகாத்மாவால் கடுமையாக சாடப்பட்ட Rowlatt Act க்கு நிகராக கருதப்பட்டதால் 2002 - 2004 ல் பதவியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது. குளறுபடியான ஒரு சட்டம் என்று இரத்து செய்யப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு கொடுத்த தண்டனை தான் இப்பொழுது நிறைவேற்ற பட இருக்கிறது! இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஒரு இழுக்காக கருதபடுகிறது. இந்த ஒரு அடிபடையிலயே இந்த போராட்டங்கள் வெறும் உணர்வு பூர்வமானது மட்டும் இல்லை என்பது தெளிவாகிறது! 

இரண்டாவது, ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையின் படி இந்த கொலை விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை, குண்டு தயாரித்தது யார், அதில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் பதில் எட்டப்படவில்லை. ஆக முழுவதுமாக முடிவுக்கு வராத ஒரு விசாரணையின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 

மூன்றாவது, ராஜீவை கொலை செய்ததாக விடுதலை புலிகளோ, குற்றவாளிகள் என்று கருதபடுபவர்களோ இன்று வரை, எந்த நேரத்திலும் பொறுபேற்கவில்லை. 

நான்காவது, ராஜீவ் கொலை நடந்த நேரத்தில் எந்த ஒரு மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களும் இறக்கவில்லை, ஏன் ஒரு சிறு காயம் கூட படவில்லை. ஒரு நாட்டின் பிரதம மந்திரி பங்கேற்கும் ஒரு அரசு பொது விழாவில் அவருக்கு அருகில் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு இன்று வரை விடை காண யாரும் முன் வரவில்லை!

ஐந்தாவது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அனுப்பிய இராணுவத்தின் மூலம் இலங்கையின் பெருங்கோபதிற்கு ராஜீவ் ஆளானர், இலங்கையில் ராஜீவ் பங்கேற்ற விழாவில் ஒரு சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க முடியாது, இலங்கைக்கும் ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த கோணத்திலும் பெரிதாக விசாரணை எதுவும் நடத்தபடவில்லை. 

ஆறாவது, கே.ஆர். நாராயணன் மற்றும் அப்துல் கலாம் ஆகிய பிரதமர்கள் சட்ட குளறுபடிகளின் காரணமாக வழங்க பட்ட தீர்ப்பு என்பதாலும், கருணை அடிப்படையிலும் இந்த மூவரின் தூக்கை நிறுத்தி வைத்து இருந்தார்கள். காங்கிரசின் கைபாவையாக செயல்படும் பிரதிபா பாட்டில் அவசர அவசரமாக இந்த தூக்கை உறுதிபடுத்தி இருப்பது, இந்த வழக்கை சீக்கிரம் முடித்து, உண்மையை மறைத்து, மக்களை திசை திருப்பி,  காங்கிரஸ் தலைமை நிம்மதி பெரு மூச்சு விடுவதற்காக இருக்கலாம்!  

ஏழாவது, ராஜீவ் கொலை குற்றவாளிகளாக கருத படும் யாரும் பயங்கரவாதிகள் இல்லை, அனைவரும் குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு வந்தவர்கள், அவர்கள் மேல் எந்த ஒரு பயங்கரவாத பின்னணியும் இல்லை, அவர்கள் மேல் இருக்கும் குற்றம் கூட முக்கிய குற்றவாளியான சிவராசனுக்கு பாட்டரி வாங்கி கொடுத்தது என்பது தான், சிறைக்குள் இருந்த நாட்களில் அவர்கள் நன்னடத்தையுடன் தான் இருந்து உள்ளனர்,  செய்யாத குற்றத்திற்காக வாழ்கையை இழந்து, பந்த பாசங்களை இழந்து தவித்து கொண்டுள்ள அவர்களுக்கு இதற்கு மேலும் தண்டனை தேவையா? 

செய்யாத தவறுக்காக, முழுவதும் விசாரிக்கபடாத குற்றத்திற்காக, நடைமுறையில் இல்லாத சட்டத்திற்காக, ஒரு சிலரின் லாபத்திற்காக வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை அவசியம் தானா?

இந்த குளறுபடிகளை கருத்தில் கொண்டு, இந்த மூவரின் தூக்கு நிறுத்தபட்டால் மக்களுக்கு சட்டத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை அழியாமல் காக்கப்படும், இல்லையேல்! இலங்கை போரில், லட்சம் லட்சமாய் பச்சிளம் குழந்தைகளையும், அப்பாவி பெண்களையும் சதை பிண்டங்களை பார்த்து பழகிய மனதிற்கு கூடுதலாக மூன்று அப்பாவிகளின் பிணங்களை பார்பதினால் பெரிய கேடு ஒன்றும் விளைந்து விட போவதில்லை!

 வி. எஸ். வினோத் குமார்

முடிந்தால் சிந்தியுங்கள்!


இலங்கையுடனான உறவை, எக்காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள, இந்தியா தயாராக இல்லை. கச்சத்தீவு முடிந்து போன விஷயம். திரும்பவும் பேச முடியாது. போர்க்குற்றம் குறித்து இலங்கையே விசாரிக்கும் : கிருஷ்ணா

தினமலர் செய்தி - ஆகஸ்ட் 26 , 2011.  

இந்த திறமையான காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அடுத்து என்ன மாதிரியான அறிக்கைகள் வரலாம் என்று ஒரு சின்ன ஊகம்!

->2ஜி ஊழலை ராஜா தலைமையில் தி.மு.க விசாரிக்கும்!
->காமன் வெல்த் ஊழலை கல்மாடி தலைமையில் காங்கிரஸ் விசாரிக்கும்!
->சத்யம் முறைகேட்டை பற்றி ராமலிங்க ராஜு விசாரிப்பார்!
->சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை பற்றி, ஹசன் அலி தலைமையில் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களே விசாரிப்பார்கள்!
->பத்திரத்தாள் முறைக்கேட்டை தெல்கி விசாரிப்பார்!
->போபர்ஸ் ஊழலை ஒத்தோவியோ குவாத்ரோச்சி விசாரிப்பார்!
->மும்பை தீவிரவாத தாக்குதல்களை பற்றி அஜ்மல் கசாப் விசாரிப்பார்!

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு கச்சத்தீவு முடிந்து போன விழயமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் வாழும் நம்மை போன்றோருக்கு காஷ்மீரும், அருணாச்சல் பிரதேசமும் கூட முடிந்து போன விழயமாக இருப்பதில் தப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை! இலங்கையை விட பல மடங்கு பலம் வாய்ந்த நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான உறவை மட்டும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும்! தனி மனிதர்களுக்கு மட்டும் தான் இறையான்மையா, மத்திய அமைச்சர்களுக்கு கிடையாதோ! அநியாயங்களை கண்டும் காணாமல் இருப்பதற்கு பெயர் தான் வெளிஉறவு கொள்கையா? அகிம்சையையும், ஆன்மிகத்தையும் உலகுக்கே போதித்த இந்தியாவுக்கு, காங்கிரஸ் அரசின் இந்த போக்கு உலக அரங்கில் அவமானத்தை தேடி தராதா? இந்த பச்சோந்தி கொள்கைகளால் நாம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகுவோம் என்பது இந்த அரசுக்கு தெரியாதா! 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார்

Sunday, August 21, 2011

நாட்டோட ரகசியத்த எப்படி எல்லாம் பாதுகாக்கறோம்!

சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!

இந்தியால கூட தான் பொது இடத்துல புகைபிடிக்க தடை இருக்கு, யாராலயாவது கண்டு பிடிக்க முடிஞ்சதா? 
நாட்டோட ரகசியத்த எப்படி எல்லாம் பாதுகாக்கறோம்!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

டிப்லோமசி!

நெறைய பத்திரிக்கையில 'நண்பன்' ஒசாமாவை உருவாக்கி, 'எதிரி' ஒசாமாவை அழித்த அமெரிக்கானு எழுதிட்டு இருக்காங்க, இத பார்த்து யாரும் அமெரிக்காவ தப்பா நெனைச்சுக்காதீங்க, இதுக்கு பேரு தான் டிப்லோமசி (Diplomacy), இந்த மானம் கெட்ட தனத்துக்கு பேரு தான் டிப்லோமசி. எங்க சொல்லுங்க பார்க்கலாம் டிப்லோமசி!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

உறவுகளை வளர்ப்போம்!

உறவுகள், நட்பு, அன்பு போன்ற உன்னதமான விழயங்களை புறக்கணித்து விட்டு பணத்தை தேடி நாம் முன் வைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்குள், நாமே வளர்த்து கொள்ளும் தீவிரவாதம். நம் தலைமுறையிலே பக்தி, அன்பு, வெட்கம், அழுகை, துடிப்பு, நெகிழ்வு, பவ்யம் போன்ற பல உணர்வுகளை இழந்து, வெறும் உதட்டளவு சிரிப்பு, காமம், வெறி, பயம் போன்ற வெகு சில உணர்வுகளை கொண்ட, நாகரீக வளர்ச்சி குறைந்த மனித பிண்டங்களாய் உலாத்தி கொண்டு இருக்கிறோம், இந்த நிலையின் முடிவு, மனித இனத்தின் நாகரீகம் அற்ற, ஒருவனை ஒருவன் கொன்று சாப்பிடும் முதல் நாளாக தான் இருக்க முடியும்! Facebook, Orkut, போன்ற வலை பின்னல்களில் மாயையான நட்பை தேடுவதில் சிறிது நேரத்தை உங்கள் உறவுகளுடனான பாச வலை அறுபடாமல் இருக்க செலவு செய்யுங்கள்!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

முதுகெலும்பில்லா அரசியல்வாதிகள்!

நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்கள், கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்பு தலை வணங்கி அறிமுகம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? நெஞ்சை நிமிர்த்தி, சுய கவுரவத்துடன் மரியாதையை செலுத்தும் பழக்கத்தை யார் இவர்களுக்கு சொல்லி தருவது!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

மானுடம் தோற்குதம்மா!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனிதாபிமானத்தை வளர்க்க அவசியமில்லாமல் போய்விட்டது, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு மனிதாபிமானத்தை சொல்லி தர நேரமில்லாமல் போய்விட்டது, சமுதாயம் அதன் உறுப்பினர்களுக்கு மனிதாபிமானத்தை புரிய வைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பணமும், பதவியும், கேளிக்கையும் மட்டுமே புரிந்த உணர்விழந்த ஜடத்திடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது, பசித்திருக்கும் சிங்கத்திடம் முயல் நட்பை எதிர் பார்ப்பதை காட்டிலும் வேடிக்கையானது!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி இருந்திருந்தால், இந்த கேடு கேட்ட மானுடத்தை சகித்து கொள்ள முடியாமல் தன்னை தானே அழித்து கொண்டிருப்பான்!
பொருந்தா பொருளாதரத்தையும், முறையில்லா வளர்ச்சியும் தலை மேல் தூக்கி வைத்து ஆடும் விட்டில் பூச்சிகளாக மாறி விட்ட மானுடத்தை கண்டு வேதனை மட்டும் தான் பட முடியும் போலிருக்கிறது!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

உலகத்தை சுருக்கி விட்டோம்!




உலகத்தை சுருக்கி விட்டோம், 
உலகத்தை சுருக்கி விட்டோம்!

மனங்களை தூரபடுத்தி, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

இதயத்தை அப்புறபடுத்தி, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

மனசாட்சியை அடகுவைத்து, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

வாழ்வியலை வேரறுத்து, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

உண்மையை உதாசீனபடுத்தி, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

இயற்கையை இம்சித்து ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

மனிதத்தை மறந்துவிட்டு, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

உலகத்தை சுருக்கி விட்டோம், உண்மைதான்
உலகத்தை சுருக்கி விட்டோம்! 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Tuesday, August 16, 2011

ஒளிர்கிறது தேர்தல் முடிவுகள், ஒளிருமா தமிழ்நாடு - 2 ?!


செல்வி ஜெயலலிதாவும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றாகிவிட்டது, முப்பத்தி நான்கு பேர் கொண்ட ஒரு வலிமையான அமைச்சரவை நமது மாநிலத்தில் உருவாக்கபட்டிருகிறது. சட்டம் படித்த ஒருவரிடம் சட்டத்துறை ஒப்படைக்கப்படவில்லை என்பதை தவிர மற்ற அனைத்து துறைகளும் தகுதியானவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பெரும்பாலானோர் நம்புகின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் புது முகங்களாக இருப்பது ஆட்சியிலும் புதுமைகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் படித்த ஒருவரிடம் சட்டத்துறை ஒப்படைக்கபடாதது சிறிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், அது சரியான முடிவா, தவறான முடிவா என்பதை அவரது செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் நம்மால் உணர்ந்திட முடியும். எந்த வித கல்வி தகுதியும் இல்லாமல், ஈடு இணையற்ற ஆளுமை திறனுடன், மக்கள் தேவையை சரியாக புரிந்து நலத்திட்டங்களை தீட்டிய மகான்கள் வாழ்ந்த நாட்டில் நாம் இருப்பதால் இதை ஒரு பெரிய தவறாக கருத வேண்டிய அவசியம் இல்லை. எல்லா நிகழ்வுகளும் சரியாக நடக்கும் போதும் ஆங்காங்கே சில சில நெருடல்கள் இருக்க தான் செய்கிறது, நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்கள், கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்பு தலை வணங்கி அறிமுகம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? நெஞ்சை நிமிர்த்தி, சுய கவுரவத்துடன் மரியாதையை செலுத்தும் வழக்கத்தை யார் இவர்களுக்கு சொல்லி தருவது? என்று பதவி ஏற்பு விழாவை கண்ட எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் வேதனை கொண்டிருப்பான். எதிர் கட்சி தலைவராக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவரது பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை, தமிழக வாக்காளர்கள் அவர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையின் மூலம் நமக்கும் தொற்றி கொள்கிறது. தினகரன், முரசொலி போன்ற தி.மு.க சார்ந்த ஊடகங்கள் தவிர அனைத்து ஊடகங்களும் இந்த கூட்டணியின் வெற்றியை கொண்டாடுவது எதோ அந்நிய சக்தியின் பிடியில் இருந்து நாடு விடுதலை அடைந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஊடகங்களின் இந்த ஒற்றுமை நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அடுத்து வர போகும் நாட்களில், இவை ஆளும் கட்சியின் ஜால்ராவாக மாறாமல் கண்ணியத்தோடும், சுய கவுரவத்துடனும் செயல் பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் சார்பாக இந்த தொடரின் மூலம் வைக்க கடமை பட்டுள்ளோம். நல்லதொரு சட்டசபை உருவாகி விட்டது, அடுத்து என்ன? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தானே! சரி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்துவதுக்காக கொடுக்கபட்டவையா? அப்படி இல்லை என்றால் அவற்றில் எத்தனை வாக்குறுதிகளை குப்பையில் போடலாம்? வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு கஜானாவில் பணம் உள்ளதா? வாக்குறுதிகளில் இருப்பதை தவிர வேறு என்ன என்ன மக்கள் பிரச்சனைகள் உள்ளது? தனி மனித பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்துவதுக்காக என்ன என்ன செயல் திட்டங்கள் நடைமுறை படுத்த இருக்கிறது? விலைவாசி உயர்வு கட்டுபடுத்த படுமா? மின் உற்பத்தி பெருக்கப்படுமா? மீனவர் நலன் காக்கப்படுமா?  பல ஆண்டுகளாக தீர்க்கபடாமல் இருக்கும் மாநில அளவிலான நதி நீர் பிரச்சனையும், சர்வதேச அளவிலான ஈழ தமிழர் பிரச்சனையும் இந்த அரசாங்கத்தின் மூலம் தீர்வு எட்டப்படுமா? இப்படி எண்ணில் அடங்கா கேள்விகள் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கணையாய் துளைத்து கொண்டு இருக்கிறது. 

- மேலும் பேசுவோம்...

அன்புடன், 
வினோத் குமார்.

கருத்துகள் வரவேற்கபடுகிறது!

ஒளிர்கிறது தேர்தல் முடிவுகள், ஒளிருமா தமிழ்நாடு - 1 ?!


சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு மைல் கல், ஜனநாயகத்தின் ஒப்பில்லா அதிசியம்.. பண பலம், ஊடக பலம், செல்வாக்கு, ரவுடியிசம், இலவசங்கள், ஜாதி வாக்குகள், குலதெய்வத்தின் மேல் சத்தியம் போன்ற அனைத்தையும் உடைத்தெறிந்து ஜனநாயகம் விண்மீனை போல ஒளிர்கின்றது. ஒரு கட்சி அறுபது வருடங்களாக சேர்த்த செல்வாக்கை ஒரே தேர்தலில் உடைத்தெறிந்து ஜனநாயகம் தன்னை மேலும் அழகாக்கி கொண்டது.  எங்கும் முறைகேடு, எதிலும் முறைகேடு என்று ஆட்சி செய்து வந்த தி.மு.காவை வேரறுத்தது ஒரு வகையில் சந்தோஷத்தை கொடுத்தாலும், இந்த நல்லதொரு தொடக்கத்தை அ.தி.மு.க எப்படி எடுத்து செல்ல போகிறது என்ற ஆவலும், எதிர்பார்ப்பும் மேலோங்கி இருக்கிறது, கூடவே எந்த தவறும் நடந்து விட கூடாது என்ற கவலையும், அப்படி நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. ஜனநாயகத்தின் மூலம் ஒளிர்ந்த தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை, இந்தியாவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக ஒளிர வழி செய்ய வேண்டும் என்ற ஏக்கம் பெரும்பாலான மக்களிடையே உள்ளது. தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவது ஓரிரு நாட்களிலோ, மாதங்களிலோ நடக்க கூடிய விழயம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஜெயலலிதா போன்ற ஒரு சிறந்த தலைவரால் இதை மூன்று, நான்கு வருடத்தில் கண் முன் நிறுத்தி விட முடியும் என்பதில் பலர் அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ளனர். அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சிறிது அதிக பொறுப்புடனும், நன்றியுடனும், கண்டிப்புடனும் செயல்பட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் சரி செய்து தமிழகத்தை ஓரிரு வருடங்களிலயே  வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும், அடுத்த சில வருடங்களில் தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாகவும் மாற்ற முடியும்.  நமது அடுத்த முதல்வருக்கு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதுடன் நமது தொப்புள் கொடி உறவான, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. சிறந்த நிர்வாகம், மக்கள் நல திட்டங்கள், தனி மனித பொருளாதார மேம்பாடு, சட்டம் ஒழுங்கு, விவசாயம், கல்வி,  தொழில் மேம்பாடு போன்ற பல விழயங்கள் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தூண்களாக நின்று ஒளிர செய்யும். அவற்றில் அவசியமானதாக, பல துறைகளில் உள்ளவர்களின் எதிர்பார்பாக இருக்க கூடிய சில கருத்துகளை பின் வரும் பகுதிகளில் அலசுவோம்.

- தொடரும்..

அன்புடன், 
வினோத் குமார்.

கருத்துகள் வரவேற்கபடுகிறது!

Birth Day of Non-Violence, Love, Peace, Spiritualism and Death day of Deadly Weapons!


India, the spiritual capital of the world, given birth to Non-Violence and proved Peace cannot be brought through Firepower, the silence which is brought through Firepower is not peace, but the death of Humanity. Many Great Leaders across world accepted what India taught as the King of Weapons, but we still hold the firepower and increasing it every day. We feel proud everyday for giving birth to technollogically advanced weapons, display it to the world and make them fear, but we failed to display the power of Non-Violence to the world and bring Love, Peace, Spirutalism among the countries and make the world as 'A Place to Live' and it is no more A Place to Die! We spend more than lakh crore rupees a year to improvise our fire power, but failed to spend a  penny to teach Non-Violence to the world! We celebrate Abdul Kalam everyday for bringing technological advancements in weapons, but we failed to celebrate Mahatma who had given a greatest identity to our country. Mahatma is living only in memory, but died in our thoughts and actions. We should lead the world, display love, peace, spirutalism by teaching Non-Violence and make every country to give farewell to all the deadly weapons. Let us all celebrate our Independence day as the Independence Day for the world from all the deadly weapons, Let us all celebrate the Birth Day of Non-Violence, Love, Peace, Spiritualism and Death day of Deadly Weapons. 

Happy Independence Day. Jai Hind.

With Love,
V. S. Vinoth Kumar

சுதந்திரம் கொண்டாடுவதற்கு அல்ல!


1806 'ல் வேலூர் கோட்டையில் ஆரம்பித்து நூற்றிநாற்பது வருடங்களுக்க மேலாக இலட்சகணக்கான உயிர் தியாகத்தில் கிடைத்தது சுதந்திரம்,  நாற்பது கோடி இந்தியர்களின் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்ததின் மூலம் கிடைத்தது சுதந்திரம், கிட்டதட்ட ஓராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு, அசிங்கப்பட்டு கிடந்த ஒரு இனத்தை சுய கவுரவத்தோடு வாழ வைத்தது சுதந்திரம் , ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்ற மஹாகவியின் ஆதங்கத்தை ஏற்று ஒவ்வொரு இந்தியனும் வேற்றுமைகளை மறந்து  ஓரணியில் நின்று போராடி கிடைத்தது சுதந்திரம், ஆயுத பலத்தின் மூலம் உலகை வென்று விட முடியும் என்ற வளர்ந்த நாடுகளின் அகங்காரத்தை, மகாத்மா என்ற ஒரு தனி மனிதரின் அகிம்சை என்ற தொலைநோக்கு சிந்தனையால் தவிடு பொடியாக்கி வென்றெடுத்தது சுதந்திரம்,  இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் விடுதலை வேட்கையோடு, உயிரை துச்சமாக மதித்து, பின் வரும் சந்ததியாவது விடுதலை இந்தியாவில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் பிறந்தது சுதந்திரம்,  வீழ்ந்தோம், எழுவோம்,  வீழ்ந்தோம், எழுவோம், ஒரு முறை வீழ ஒன்பதாய் எழுவோம், விஸ்வரூபம் எடுப்போம் என்று மண்ணில் மடிந்து வீழ்ந்தவரெல்லாம் விதைகளாய் மாறி போராடி போராடி கிடைத்தது சுதந்திரம்.
அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிய நாட்டு பணத்துக்கும், கேளிக்கை களியாட்டங்களுக்கும் தனது சூடான இளம் இரத்தத்தை அடிமைபடுத்தி கொண்டுள்ள ஒரு சமுதாயம், பணத்தை தேடி ஓடி ஓடி குடும்பத்தையும், வாழ்கையும், சமுகத்தையும் மறந்து மரத்து போன ஒரு சமுதாயம், பிறரின் நஷ்டத்தில் இலாபம் தேடி கொள்கின்ற ஒரு சமுதாயம், சுதந்திரத்தின் மூலம் ஒன்றிணைந்த வேற்றுமைகளை அரசியல் இலாபத்திற்காக மறுபடியும் பிரித்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம்,  பதவி மற்றும் பண பலத்தின் மூலம் நாட்டையே முட்டாளாக்கி சுவிஸ் வங்கியில் இலட்சம் கோடிகளாக பணத்தை சேர்த்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், ஒரு வேலை உணவுக்கு திண்டாடி, பிறந்ததே பூமிக்கு பாரம் என்றெண்ணி தினம் தினம் வறுமையாலும், பசியாலும் போராட தெம்பில்லாமல் உயிரை முடித்து அநாதை பிணங்களாக மாற காத்திருக்கும் அதே நாற்பது கோடி இந்தியர்கள் கொண்டஒரு சமுதாயம் !

இதற்காகவா இத்துணை உயிர் தியாகங்கள்? இதற்காகவா இத்துணை போரட்டங்கள்?  இது தானா சுதந்திரத்தின் போது இருந்த நாற்பது கோடி இந்தியர்களின் ஏக்கம்? இது தானா சுதந்திர உணர்வோடு, உயிரை துச்சமாக எண்ணி நமக்காக போரடியர்வர்களுக்கு நாம் தரும் பரிசு? 

என்ன வளம் இல்லை நம் நாட்டில், உலகத்திற்கே படி அளக்கும் அளவுக்கு விவசாய நிலங்களையும், அள்ள அள்ள குறையாத மனித சக்தியையும், அறவியல் அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், கனிம வளங்களையும், உலகமே போற்ற கூடிய குடும்ப அமைப்பையும், வாழ்வியல் நெறிகளையும், ஆன்மிகத்தையும் வைத்து கொண்டு சில லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அந்நிய நாட்டிற்கு அடிமை பட்டு தான் ஆக வேண்டுமா? நம் நாட்டில் ஒரு சமுக எழுச்சியை ஏற்படுத்தி பல கோடி சுதந்திர போராளிகளின் கனவுகளை நனவாக்க முடியாதா? நாற்பது கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சீர்தூக்க முடியாதா? கட்டுகடங்கா பொருளாதார வேற்றுமைகளை தகர்த்தெறிய முடியாதா? அந்நிய முதலீடு என்ற பெயரில் நடக்கும் ஆட்டுழியங்களை வெளிச்சம் போட்டு காட்ட முடியாதா? இளமை துடிப்பை கேளிக்கைக்கும், பணத்திற்கும் அடிமை ஆக்காமல் சமூக எழுச்சிக்கும், நாட்டின் வளர்சிக்கும் முதலீடு செய்வோம்.

தாய் நாட்டையும் , தாய் மொழியையும் நேசிப்போம்! ஒன்றிணைவோம், சுதந்திரத்தை உணர்வோடு கொண்டாடுவோம்!

சுதந்திர தின வாழ்த்துகள்! ஜெய் ஹிந்த்!

அன்புடன்
வி. எஸ். வினோத் குமார் 

Thursday, April 14, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உங்கள் தோல்விகளை மறந்து உங்கள் முன்னேற்றத்துக்கான புதுமையான பல நல்ல சிந்தனைகளுடன் இந்த புத்தாண்டை தொடங்குங்கள்! வாழ்த்துக்கள்!


அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Vote!

Voting is not your right, It is your duty. Stop blaming politicians and finding excuses to avoid Voting.

Sunday, April 10, 2011

பயங்கரவாதம்!

குறி பார்க்கும் துப்பாக்கி முன்னால் நெஞ்சை நிமிர்த்தி காட்ட மகாத்மா காந்தியால் மட்டும் தான் முடியும். ஒசாமா பின்லேடனால் நிச்சயம் முடியாது. நாம் ஒவ்வொருவரும் காந்தியின் வாரிசு என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் பயங்கரவாதத்தை குழித் தோண்டி புதைத்து வெள்ளை ரோஜாவை மலர செய்யலாம்.

-யோகி ஸ்ரீ ராமானந்த குரு

Womens day Resolution!

An Ideal Resolution for Every Indian Women to Save Our Family System and Our Future Generations!

"Prevent and Correct anyone who misuses IPC 498a"

Happy Womens Day!

Tuesday, February 1, 2011

உயிர் நேயம்!

உயிர் நேயத்தை உணர்ந்த ஒரு சமூகம் சொர்கத்தின் பூமி பிரதி!


அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Wednesday, January 12, 2011

வெற்றி, தோல்வி.

வெற்றி என்பது பெற்று கொள்வது; தோல்வி என்பது கற்று கொள்வது.
ஒன்று கௌரவம், மற்றொன்று அனுபவம்.

Monday, January 10, 2011

Religion, God and Humanity!

Religion is a Tradition, God is a Belief, Humanity is the Truth.

Never try to kill the Truth for the sake of Tradition & Belief.

Saturday, January 1, 2011

இன்று ஒரு திருக்குறள்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.


நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.