ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, கடுமையான பாறைகளை கொண்டு பஞ்சபூதங்களை ஒருங்கிணைத்து, இயற்கை கட்டமைத்த பிரம்மாண்ட மலைகள் இன்று சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டும், திறன் மிகுந்த ராட்சத இயந்திரங்களை கொண்டும், அன்றாடங்காய்ச்சிகளாக வாழக்கூடிய மனிதர்களின் சக்தி கொண்டும், சிறிது சிறிதாக தரைமட்டமாக்கபடுதவதை காணும் பொழுதெல்லாம் தொழில்நுட்ப்ப வளர்ச்சியை நினைத்தோ, மனித உழைப்பின் சக்தியை நினைத்தோ புளங்காகிதம் அடைய முடியவில்லை, மாறாக மனிதனின் சுயநலத்தேடல்களுக்காக இயற்கைக்கு எதிராக அவன் ஆற்றி கொண்டிருக்கும் வினைகளுக்கு இயற்கை ஆற்ற இருக்கும் எதிர்வினைகளை நோக்கி கவலைப்பட வேண்டியதாயுள்ளது.
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Friday, April 5, 2013
இயற்கையின் எதிர்வினை!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, கடுமையான பாறைகளை கொண்டு பஞ்சபூதங்களை ஒருங்கிணைத்து, இயற்கை கட்டமைத்த பிரம்மாண்ட மலைகள் இன்று சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டும், திறன் மிகுந்த ராட்சத இயந்திரங்களை கொண்டும், அன்றாடங்காய்ச்சிகளாக வாழக்கூடிய மனிதர்களின் சக்தி கொண்டும், சிறிது சிறிதாக தரைமட்டமாக்கபடுதவதை காணும் பொழுதெல்லாம் தொழில்நுட்ப்ப வளர்ச்சியை நினைத்தோ, மனித உழைப்பின் சக்தியை நினைத்தோ புளங்காகிதம் அடைய முடியவில்லை, மாறாக மனிதனின் சுயநலத்தேடல்களுக்காக இயற்கைக்கு எதிராக அவன் ஆற்றி கொண்டிருக்கும் வினைகளுக்கு இயற்கை ஆற்ற இருக்கும் எதிர்வினைகளை நோக்கி கவலைப்பட வேண்டியதாயுள்ளது.
மகிழ்ச்சி!
மகிழ்ச்சி மிகச்சிறந்த அனுபவமாக இருந்தாலும் கூட அதனூடே சிறந்த மனிதர்கள் வடிவமைக்கப்படுவதில்லை, மாறாக கடுமையான வலியை ஏற்படுத்த கூடிய அனுபவங்களும், நெருக்கடி சந்தர்ப்பங்களும் மிகச்சிறந்த மனிதர்களையும், ஆளுமைகளையும் வார்த்தெடுத்து விடுகிறது.
Wednesday, April 3, 2013
ஏர்டெல்!
தற்போது தான் ஏர்டெல் நிர்வாகி பேசினார்..
எதுக்காக ஏர்டெல்ல இருந்து மாற விரும்புரிங்கனு தெரிஞ்சக்கலாமா?
இலங்கை போரில ஏர்டெல் செய்த துரோகத்திற்காக ஏர்டெல்ல புறக்கணிக்கறதுனு முடிவு பண்ணி இருக்கோம் அதான்.சிரித்து கொண்டே தொடர்தேன் நீங்களும் இந்த வேலைய விட்டுட்டு வேற நல்ல வேலையா பாருங்க.
அவசர அவசரமாக ஏர்டெல்லை அழைத்ததற்கு நன்றின்னு வச்சிட்டாரு
#யோவ் நீ தான்யா போன் பண்ண :-)!

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!
நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது.
#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.
#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.
பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!
தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள்
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள்.
வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்.
#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

மனிதனாக முழுமை அடைவது!
பல்வேறு சந்தர்பங்களில் ஏற்படுகின்ற மனத்தாக்கங்களை திறந்த மனதோடு தன்னுள் பயணிக்க அனுமதித்து, அவை ஏற்படுத்த கூடிய மெல்லிய மாற்றங்களை தக்க வைத்து கொள்பவனே மனிதனாக முழுமை அடைகிறான்.
உண்மையான மனிதன்!
உண்மையான ஹிந்து, உண்மையான முஸ்லிம், உண்மையான கிறிஸ்துவன் என சிதறி கிடக்கும் மதவாத கூட்டத்திற்கு நடுவே உண்மையான மனிதர்களின் கடைசி தடயங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகின்றது.
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்
"நான் உங்களை நேசிக்கிறேன்"
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களோடு அதிக நேரம் செலவிடவும், கல்லூரி நாட்களை பற்றி அசை போடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனதில் நினைத்த உடனே நினைவுகள் மூலம் கடந்து வந்த அனைத்தையும் அருகில் கொண்டு வந்து விடுகிற கலையை கடந்த சில வருடங்களும், கடந்து வந்த சில மனிதர்களும் எனக்கு சொல்லி கொடுத்து விட்டார்கள்.
இயற்கை மகிழ்ச்சிக்கான விதைகளை என்னிடத்தில் சற்று அதிகமாகவே புதைத்து விட்டது போல, எத்தனை நண்பர்கள், சொந்தங்கள்! மனத்தொய்வுகளுக்கு நடுவே இவர்கள் அன்பை கொண்டு செய்யும் மோடி மஸ்தான் வித்தை இருக்கிறதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்ப துளிர்களும், தொய்வுகளும் மாறி மாறி வருவது கூட ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றதொரு மயிர்கூச்சரியும் அனுபவமாக தான் இருக்கிறது.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பின் வழியே என்னை உயிர்ப்போடு வைத்து இருக்கும் உள்ளங்களுக்கெல்லாம் சொல்லி கொள்ள விரும்புவது -
"நான் உங்களை நேசிக்கிறேன்"
#எசஸ்க்யுஸ் மீ ஜென்டில்மென் - காதலர் தின ஜுரத்திற்கு நடுவே இப்படியொரு பதிவை போட்டதற்கு :-)!

டவுன் பஸ் ஞானி!
வாயை மூட கற்று கொண்டு விட்டால் கவனிக்க தொடங்கி விடலாம்;
வாயோடு கண்களையும் மூட பழகி விட்டால் சிந்திக்க பழகி விடலாம்;
வாய் மற்றும் கண்ணோடு காதையும் சேர்த்து மூட முடிந்து விட்டால் ஞானி ஆகி விடலாம்!
#டவுன் பஸ்ஸில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் சிந்தித்தது :-)
வாயோடு கண்களையும் மூட பழகி விட்டால் சிந்திக்க பழகி விடலாம்;
வாய் மற்றும் கண்ணோடு காதையும் சேர்த்து மூட முடிந்து விட்டால் ஞானி ஆகி விடலாம்!
#டவுன் பஸ்ஸில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் சிந்தித்தது :-)
சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை!
தன்னெழுச்சியாக பரவி வரும் மாணவர் போராட்டங்களை பார்க்கும் பொழுது இறந்து போன நம்பிக்கைகள் துளிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. என் தலைமுறையை சார்ந்த சக வயது காரர்ககள் மேல் இருந்த கவலைகள், கோபங்கள், வருத்தங்கள் இந்த மாணவர்களின் எழுச்சியின் முன் அர்த்தம்மற்றதாய் ஆகி விட்டன. சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை வென்று விடுவோம் என்பதை தவிர.
உணர்வுகளின் எழுச்சி!
பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது.
#கூடங்குளம்!
#கூடங்குளம்!
போதும் துருப்பு சீட்டுகள்!
பல லட்சம் உயிர்களின் சாம்பலை பார்த்தும் மௌனத்தை கலைக்கவில்லை இந்த உலகம், இறந்து சாம்பலானது போதும் நின்று போராடி நியாயம் கேட்க வேண்டிய நேரம் இது. நம் கையில் 2 லட்சம் உயிர்கள் துருப்பு சீட்டுகளாக இருக்கிறது இதற்கு மேலும் ஒரு துருப்பு சீட்டு வேண்டாம். இனிமேலும் ஒரு உயிரை நாம் இழந்து விட கூடாது.
ஜெய்ஹிந்த்!
இலங்கை கடற்படையினரின் பிடியில் இருக்கும் சகோதரனின் பிரிவின் வலியை உணர்த்தும் அந்த சிறுமியின் அழுகை என்னவோ செய்கிறது.
#மிக முக்கியம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. ஜெய்ஹிந்த்!
#மிக முக்கியம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. ஜெய்ஹிந்த்!
மனநிலைக்கு பதில் சொல்லுதல் !
ஒருவரின் மனநிலைக்கு பதில் சொல்வதென்பது நீரில் விழுந்த தேளை காப்பாற்றிய யோகியின் கதை தான்.
#நீதி: நீங்கள் யோகியாக இருந்தால் மட்டும் மனநிலைக்கு பதில் சொல்லுங்கள்.
#நீதி: நீங்கள் யோகியாக இருந்தால் மட்டும் மனநிலைக்கு பதில் சொல்லுங்கள்.
Tuesday, April 2, 2013
முடிந்தால் சிந்தியுங்கள் - 10!
விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;
பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;
மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;
வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;
சுற்றுச்சுழலை பாழ்படுத்துவதிலும்;
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக மாற்றுவதிலும்;
நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும் இல்லாமல் செய்வதிலும்;
தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;
அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;
நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;
அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;
இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.
அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.
பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?
முடிந்தால் சிந்தியுங்கள்!
Monday, March 4, 2013
மகிழ்ச்சியின் ரகசியம்!
வியாழக்கிழமை மாலை சுமார் ஏழு மணியிருக்கும், சைதை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி மார்க்கெட் அருகே இருக்கும் நடை பாதை கடைகள் வழியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எத்தனை முறை தங்கள் வாழ்வாதாரமான அந்த கடைகள் அகற்றப்பட்டாலும் அத்தனை முறையும் முளைத்து விடுகின்ற நவீன இந்தியாவின் 'பினிக்ஸ் பறவைகள்' அந்த எளிய மனிதர்கள்!
இப்பொழுதெல்லாம் நடைப்பாதை கடையினர் கூவி விற்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை, பெரும் தொகை செலவிட்டு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் பல வித இயந்திர இரைச்சல்களுக்கும் இடையே இந்த அன்றாடங்காய்ச்சிகளின் குரல் பலவீனமானதாகவே ஒலிக்கிறது! என்ன செய்ய?
எண்ண ஓட்டத்தோடு நடையின் வேகத்தையும் தீவிரப்படுத்தினேன்.
தீடிரென கேட்ட சத்தமான சிரிப்பு சத்தம் நடையின் வேகத்தை சற்று குறைத்து விட்டிருந்தது.
'அட இங்க பாருடா என் முருங்கை கீரைக்கு எவ்வளவு வெளிச்சம்', கீரைக்கார பாட்டி தெருவோர சோடியம் லைட்டின் வெளிச்சம் அவளின் 'விற்காத முருங்கைக்கீரையின்' மேல் பட்டு விட்டதற்கு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள்.
கேட்டு கொண்டே அவளை கடந்து விட்டேன். வீடு சேர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் அந்த வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் பிரசவித்து கொண்டிருந்தன.
என்னிடம் இருந்து எதையோ எடுத்து சென்ற அந்த வார்த்தைகள், சற்று நேரம் கழித்து எதையோ கொடுத்து விட்டு சென்றிருந்தது! - "எளிய மனிதர்கள் தங்களின் சின்ன சின்ன மகிழ்ச்சிகளுக்கு காரணங்களை தேடி கொண்டிருப்பதில்லை, அவர்களே அதை உருவாக்கி கொள்கிறார்கள்"
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
Friday, January 25, 2013
நான் வாசிக்கும் புத்தகங்கள் : 2013 - 1!
இந்த வருடம் முதல் நான் படிக்கும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிரலாம் என முடிவெடுத்துள்ளேன். இந்த சிறு முயற்சி நண்பர்களுக்கு புத்தகங்களை பற்றிய ஒரு அறிமுகமாகவும், வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ளவும் உதவும் என நம்புகிறேன். இந்த வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு ஐம்பது புத்தகங்களையாவது படித்த விட வேண்டும் என முடிவெடுத்து உள்ளேன், பார்க்கலாம்!
சமீபத்தில் மறைந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து உள்ளேன், மிக சிறிய புத்தகம். நான் சந்தித்த பல சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் தங்களை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் சீடன் என பெருமையாக அறிமுகப்படுத்தி கொள்வதை எண்ணி வியந்திருக்கிறேன்.
புத்தகத்தின் பெயர் : எண்ணங்கள்
ஆசிரியர் பெயர்: டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பாளர்: கங்கை புத்தக நிலையம்
விலை: 35/-
பக்கங்கள்: 167
முடிந்தால் நீங்களும் வாசிக்க தொடங்கி விடுங்கள்.
அடுத்து படிக்க இருப்பது :
அறிந்ததினின்றும் விடுதுலை, ஜே. கிருஷ்ணமூர்த்தி.
விரைவில் சந்திப்போம்.
Monday, January 14, 2013
முடிந்தால் சிந்தியுங்கள் - 9: தைத்திருநாளும், சில வரிகளும்!
முடிந்தால் சிந்தியுங்கள் - தைத்திருநாளும், சில வரிகளும்!
மனித நாகரிகத்தின் முதல் விதை, மனித சமூகம் மற்றும் அனைத்து தொழில்களையும் தனது கருவறையில் சுமந்து, பெற்று, வளர்த்தெடுத்த தாய், விவசாயம்!
தாயின் துணை கொண்டு மனித சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தன்னையே அர்பணித்த "தாயின் தவப்புதல்வன்", விவசாயி!
நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. ஆனால் வெளியில் சொல்ல தான் வாய் கூசுகிறது. மாபெரும் விந்தை!
என் தாயிற்கும், என் பாதுகாவலனுக்கும் என் நாகரிகத்தை கொண்டு நான் அளித்த பரிசு என்ன தெரியுமா?
மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள், பாசன நீர் தட்டுப்பாடு, பல்லுயிர் சூழலை கெடுத்து மலடாக்க பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் விளை நிலங்கள், விலை பொருட்களுக்கு அடிமட்ட விலை நிர்ணயம், பசி, பட்டினி, அடைக்க முடியா கடன்கள், நகரத்தை நோக்கிய வாழ்வாதார தேடல்கள், வாழ்வாதரதிர்க்காக பிற தொழிலின் கூலிகளாக மாற்றப்படுதல், இறுதியாக தற்கொலைகள், இல்லை இல்லை, சமூக கொலைகள். வெட்கக்கேடு!
அதோடு நின்று விட்டோமா?
அவ்வளவு நல்லவர்களா நாம்! படிக்காதவனின் தொழில், அடித்தட்டு மக்களின் தொழில், மதிப்பில்லா தொழில்; இது தானே அவர்களை பற்றிய சமூகத்தின் பார்வை. உண்மை தான், சமூகம் நிச்சயமாகவே கோமாளிகளின் கூட்டமைப்பு தான்!
பல லட்சம் ஆண்டுகளாக நீண்ட, நெடியதொரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் மனித சமூகம், அந்த பயணத்தின் முடிவின் காரணி என்னவாக இருக்க முடியும்?
தனி மனித மனசாட்சிகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சமூகத்தின் மனசாட்சிகளுக்கு ஆணித்தரமாகவே அது தெரியும். விவசாய புறக்கணிப்பு, விவசாயிகள் அழிப்பு!
மிக கொடூர எதிரியோ, வேற்று கிரக வாசிகளோ, கொலைக்கார ஆயுதங்களோ தேவைப்படாது. மாபெரும் உணவு பஞ்சமும் , நஞ்சாகி போன உணவு பொருட்களையும் கொண்டு மனித இனமே தன்னை அழித்து கொள்ளும். வேடிக்கை!
முடிந்தால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடங்குவோம். இல்லையேல் மனித சமூகத்தின் கடைசி நாட்களுக்காக நம்மை ஆயுத்தப்படுத்தி கொள்வோம்!
தைத்திருநாள் வாழ்த்துக்களை இப்பொழுதாவது சொல்லி விட தான் மனம் நினைக்கிறது, என்ன செய்ய அதை சொல்ல விடமால் மனசாட்சி தடுக்கிறது!

Tuesday, January 1, 2013
தனி மனித சுதந்திரம்!
தனி மனித சுதந்திரம் என்பது "தான் சமூகத்தின் ஒரு அங்கம்" என்ற பொறுப்புணர்வோடு புரிந்து கொள்ளப்பட வேண்டும்; சக மனிதர்கள், சமூகம், இயற்கை போன்றவற்றின் மீதான விளைவுகளை புறந்தள்ளி விட்டு தான்றோன்றி தனமாக செயல்படுவதற்கு பெயர் தனி மனித சுதந்திரமாக இருக்க முடியாது அதை காட்டுமிராண்டித்தனம் அல்லது சுயநலம் என்று வேண்டுமானால் அடையாள படுத்தி கொள்ளலாம்.
Monday, December 24, 2012
முடிந்தால் சிந்தியுங்கள் - 8!
குற்றமும் தண்டனையும்
உலகில் நடைபெறும் அனைத்து குற்றங்களும் ஒரே காரணத்திற்காகவோ, நோக்கத்திற்காகவோ செய்ய படுபவை அல்ல, இதை புரிந்து கொள்ளவே தயாராய் இல்லாத வரை அவற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவோ, அல்லது குற்றங்களை தடுத்து நிறுத்தவோ முடியும் என்று நினைப்பது சிறு பிள்ளைத்தனம்.
தவறுகளுக்கான தண்டனைகளை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஈடுபாடு அவை நடை பெறாமல் இருக்கவும் , நடை பெரும் பட்சத்தில் நம்மை தற்காத்து கொள்ளவும் செய்ய வேண்டியவனைவற்றை பற்றி பேசுவதில் இல்லை , பிறகொரு குற்றம் நடக்கையில் திரும்ப கொடி பிடிக்க தொடங்கி விடுகிறோம் - இந்த மன நிலையை வைத்து கொண்டு நாம் எதை தான் சாதித்து விட முடியும்?
குற்றங்கள் வானத்தில் இருந்து நேராக மனித மனங்களில் டௌன்லோட் செய்ய படுவதாக கற்பனை செய்வதை சற்று மறு பரிசிலனை செய்வோம், அவை கண்டிப்பாக நோய் பிடித்த ஒரு சமூகத்தின் மூலம் மனித மனங்களில் பரவிய தொற்று நோயாக தான் இருக்க முடியும், மன நோய்கள் மூலம் செய்ய படும் குற்றங்களுக்கும், சமூகத்திற்கு ஒரு மிக பெரிய பங்கு இருப்பதை எந்த மன நல மருத்துவராலும் மறுத்து விட முடியாது. தனி மனித ஒழுக்கம் தொடங்கி அரசியல் சாசனம் வரை பரவி இருக்கும் நோய் கிருமிகளை மேலும் வளராமல் நிறுத்தி வைக்கவும் , ஒட்டு மொத்தமாக அழிக்கவும், மீண்டும் பாதிக்காமல் தடுக்கவும் வேண்டியவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் மனிதம் பற்றி சிந்திக்க தயாராய் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. நோயற்ற சமூகத்தில் வலி நிவாரணிகள் வழகொழிந்து போகும் என்பது நிதர்சனம். விதைக்காமல், விளைவதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை, தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நல் விதைகளை முதலில் விதைத்து விட்டு நல்லதொரு சமூக மாற்றத்திற்காக காத்திருக்க தொடங்குவோம்!
தண்டனைகள் வலி நிவாரணிகள் மட்டுமே நோய்க்கான காரணங்களையும் அவை ஏற்படாமல் தற்காத்து கொள்வதை பற்றியும் சிறிது பேசி வைப்போம்!

Friday, November 30, 2012
வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழி!
வலிகள் சில நேரங்களில் உந்துதலையும், பல நேரங்களில் வேதனையையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றன. எவன் ஒருவன் வலிகளை தேடி போய் அதனூடே உள்ள உந்துதலை மட்டும் உறிஞ்ச பழகி கொண்டானோ அவனே "வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழியை" கண்டு கொண்டவன் ஆகிறான்.
அனுபவ பாடம் - 2!
இயந்தரமயமாகி விட்ட வாழ்கை பயணத்தில் சிந்தனைக்கான சாத்தியகூறுகள் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், அரசியல் போன்ற பொருள் சார்ந்த சிந்தனைகள் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணத்திற்காகவும், பெட்ரோலுக்காகவும் ஓடும் வாடகை வண்டி போல பொருளாதரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஓடும் மனித இயந்திரங்களை உருவாக்கி வருகின்றது.
மனிதம் பட்டு போய் விடாமல் தழைக்க பொருள் சார்ந்த சிந்தனைகளுக்கு வேக தடைகள் அவசியமாகின்றன. என் அனுபவத்தில் நீண்ட தனிமை பயணங்கள் ஒரு மிக சிறந்த வேக தடையாக செயல்படுகின்றது, சில மணி நேர பேருந்து, ரயில் பயணங்களில் சிந்தனைகள் சிறிய விதைகளாக விதைக்கப்பட்டு, துளிர் விட்டு விருட்சமாகி விடுகின்றன, அதை போன்று உருவான சிந்தனை விருட்சங்கள் என் வாழ்கை பயணத்தை பலவாறு மாற்றி அமைத்து உள்ளது.
வாழ்கை பயணத்தை செம்மையாகவும், ருசிகரமானதாகவும் அமைத்து கொள்ள பயணங்கள் அவசியமாகின்றன. வேக தடைகள் தானாக உருவாவதற்காக காத்திருக்காமல் வாய்ப்பு கிடைக்கும் போது உருவாக்கி கொள்ளுங்கள், நீண்ட தனிமை பயணங்களாக.
உங்கள் அனுபவம் கூறும் வேக தடைகளையும் தெரியபடுத்துங்கள்.
Wednesday, November 21, 2012
முடிந்தால் சிந்தியுங்கள் - 7
தண்டனை என்பது சட்டபூர்வமாக பழிக்கு பழி வாங்கும் படலம் மட்டுமே என புரிந்து கொள்பவர்களுக்கு கசாப்பின் தூக்கு நியாயமான ஒன்றாய் தான் இருக்க முடியும்! கசாப்பின் தூக்கு நம் பழி வாங்கும் உணர்வுகளுக்கும், அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளுக்கும் வேண்டுமானால் நியாயம் செய்யுமே தவிர தீவிரவதத்தையோ, வன்முறையையோ குறைக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஏமாளியாகவே வைத்திருக்க செய்யப்படும் பூச்சிக்காட்டல் மட்டுமே.
மரண தண்டனைக்கு எதிரான நிலை என்பது மனிதத்திற்கு ஆதரவான நிலை தானே தவிர மரண தண்டனை குற்றவாளிக்கு ஆதரவான நிலை இல்லை. சட்டபடி குற்றமான ஒன்றை சட்டமே செய்யும் போது குற்றமில்லை என்ற அபத்தத்தின் சிறந்த உதாரணம் மரண தண்டனை!
மரண தண்டனைகளை ஒழிப்போம், மனிதனாக முயற்சிப்போம்.
முடிந்தால் சிந்தியுங்கள்!
Tuesday, November 6, 2012
முடிந்தால் சிந்தியுங்கள் - 6!
அறிவியல் வளர்ச்சி என்பது என்ன ?
மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள், சமகால பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இயற்கைக்கும் , மனிதத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத வகையிலான மாற்று கண்டுபிடிப்புகள் ஆகியவையா அல்லது அறிவியல் தன்னை தானே கண்டுபிடித்து வளர்த்து கொள்வதா?
அறிவியல் சார்ந்து சிந்திக்க கற்று கொண்டுள்ள அறிவியல் வல்லுனர்களுக்கு மனிதம் சார்ந்து சிந்திக்க கற்று கொடுக்கப்பட்டுள்ளதா!
வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட தெரிந்த பெரும்பாலான அறிவியல் வல்லுனர்களுக்கு இயற்கைகாகவும் மனிதத்திர்காகவும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டதா?
முடிந்தால் சிந்தியுங்கள்!
கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன்!
ஆஹா அடுத்து ஒரு புது பூதம் கிளம்பி தயாரா இருக்கு!
கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன் - கிருஷ்ணரே இல்லன்னு சொல்ற பலரே இதை பகிர்ந்து கொண்டிருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு தானா உங்க டக்கு! பகுத்தறிவு என்பது இது தான் போல!
யப்பா சாமிகளா உங்க பார்ப்பன எதிர்ப்பை கொஞ்சமாவது அர்த்தத்தோட செய்யுங்க. கண்மூடி தனமா இப்படி பிரச்சாரம் செஞ்சிங்கனா நீங்கள் பார்பனர்கள் மேல வைக்கிற நியாயமான

குற்றச்சாட்டுக்கள் கூட அநியாயாமா தான் தோனும். சமகால பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணனும்னு யோசிக்க ஆரம்பிங்க, அத விட்டுட்டு தொட்டதுக்கு எல்லாம் பார்பனன் பார்பனனே பேசிக்கிட்டு திரிஞ்சா இன்னும் ஒரு ஆயிரம் வருஷத்துக்கு இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்.
# பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும் தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது!

Wednesday, October 31, 2012
தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் !
அப்போ:
நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம்!
இப்போ:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் சார்பில் அனுப்ப பட்ட மின்னஞ்சல் செய்தியில் இந்திரா காந்தி என்பதற்கு பதிலாக இந்திய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை சோனியா காந்தி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது!
#நாலணா செலவில்லாமல் நாலாயிரம் விளம்பரம் தேடி கொள்கிற தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது!
க க க போ!
என்ன வாழ்கைடா இது!
WTF, HOLY SHIT எல்லாம் "சோ கால்ட் மேட்டு குடியினர்" போகிற போக்கில சொல்லிட்டு போயிடலாம். ஆனா அதையே தமிழுல சொன்னா நாம அயோக்கியன்!
#என்ன வாழ்கைடா இது!
நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!
இனி அரசியல்வாதிகளின் சொம்பு தூக்கிகள், ஆதிக்க ஜாதியினர், அதிகார வர்கத்தினர், பணம் படைத்தவர்கள் மட்டும் தங்கள் கருத்துகளை சமூக இணையத்தில் பதியலாம். மற்றவர்கள் இங்கே கடையை சாத்தி விட்டு பழையபடி குட்டி சுவத்தையோ, டீ கடை பெஞ்சையோ தேடி கொள்ளுங்கள், இல்லையேல் சுழிய குற்றத்திற்காக கலி தின்று கொண்டிருக்கும் தோழர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்!
#நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!
நோயும், பேயும்!
செய்தி: விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கவே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - அன்னை சோனியா !
தாய்நாட்டு நோயை போக்குவதற்கு அந்நிய நாட்டு பேயை இறக்குமதி செய்தானாம் ஒருத்தன்!
இதையும் கேட்டு ஓகோ அப்படின்னு சொல்லி அமைதியா போறவன் உலக மகா கிறுக்கன்!
http://hillpost.in/2012/10/22/ fdi-in-retail-to-benefit-farmer s-sonia-gandhi/53116/people/ hp_bureau
தாய்நாட்டு நோயை போக்குவதற்கு அந்நிய நாட்டு பேயை இறக்குமதி செய்தானாம் ஒருத்தன்!
இதையும் கேட்டு ஓகோ அப்படின்னு சொல்லி அமைதியா போறவன் உலக மகா கிறுக்கன்!
http://hillpost.in/2012/10/22/
அட்வைஸ் செய்து வாங்கி கட்டி கொள்ளாமல் இருக்க!
இருபத்தி நாலு மணி நேரமும் டி வி, பாட்டு, படம், பேஸ்புக்னு எதாவது ஒரு போதையிலயே அடிமையாகி கிடக்காதீங்க, அளவோட என்ஜாய் பண்ணுங்க, மத்த பிரச்சனைகளை பத்தியும் தெரிஞ்சிகோங்க அப்படின்னு தெரியாத்தனமா கூட யாருகிட்டயும் சொல்லிடாதீங்க!! அப்பறம் சாடிஸ்ட், உலகம் தெரியாதவன், ரசனை இல்லாதவன், குறுகிய மனப்பான்மை உடையவன், மன நோயாளி, சைக்கு, புத்தி கேட்டவன், துப்பு கேட்டவன், பொறாமை புடிச்சவன், சுயநலவாதி, மத்தவங்க சந்தோஷத்த கெடுக்கிறவன், கொடுங்கோலன் இன்னும் பல சொல்ல கூடாத வார்த்தைகளில் எல்லாம் வாங்கி கட்டி கொள்ள வேண்டி வரும்.
#பார்த்து சூதானமா நடந்துக்கோங்க!
#பார்த்து சூதானமா நடந்துக்கோங்க!
முடிந்தால் சிந்தியுங்கள் - 5!
பார்ப்பனிய எதிர்ப்பு என்பது "பார்ப்பனிய சிந்தனை" உடையவர்களை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள பட வேண்டும், அதை விட்டு பிறப்பால் பார்ப்பனனாக உள்ளவர்கள் அனைவரையும் எதிர்ப்பது மீண்டும் ஒரு சமூக அநீதிக்கே வழி வகுக்கும்.
முடிந்தால் சிந்தியுங்கள்!
Friday, October 26, 2012
அரசியலும் வளர்ச்சியும்!
ஒரு தேரை இரண்டு குதிரைகள் இழுத்து செல்கின்றன, தேரின் இரு சக்கரங்களின் அருகிலும் மக்கள் கூட்டம், ஒரு சமயத்தில் ஒரு சக்கரத்தின் அச்சாணி கழன்று அந்த பக்கம் உட்காந்திருந்த மக்கள் உயிருக்காக மரண ஓலத்தை எழுப்பி கொண்டிருகிறார்கள். இரண்டு குதிரைகளும் மக்களின் மரண ஓலத்தை பொருட்படுத்தாமல் நிற்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருகிறது.
இதில் ஒரு குதிரையின் பெயர் வளர்ச்சி, மற்றொன்றின் பெயர் அரசியல், ஒரு பக்கம் அச்சாணி கழன்ற சக்கரம், மறு பக்கம் அச்சாணி கழலாத சக்கரம் என்பது பொருளாதார ஏற்ற தாழ்வு (இடைவெளி), அச்சாணி கழன்ற பக்கத்தின் உட்கார்ந்திருந்த மக்கள் இந்தியாவின் BPL (Below Poverty Line) என வரையறுக்க படும் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்க படாமல் தினம் தினம் மரண ஓலத்துடன் வாழ்கையை சந்திக்கும் அப்பாவிகள்.

#இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் அரசியல் பற்றியோ, சமுகம் பற்றியோ, வளர்ச்சி பற்றியோ பேசுவது எந்த விதத்திலும் பலன் தராது.
Wednesday, October 24, 2012
வளர்ச்சி!
நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல், விரக்தியுடன், நடை பிணமாக வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி.
மின்னலும், இடியும் !
ஆயிரம்
கோடி கோளாரிருக்க அவையனைத்தை விட்டு இதை மட்டும் நோக்கும் இவன் பொய்யன் என்றாய்
-
ஆயிரம்
ஆயிரம் நானிருக்க அவனையெல்லாம் விட்டு என்னை மட்டும் நோக்கும் நீ!
உன்னிடம் அதிகம் பேச ஒன்றும் இல்லை,
ஆயிரம்
கோடி ஆண்டு அறியாமை வரலாற்றின் இன்றைய எச்சம் தான் நீ!
ஆயிரம்
கோடி துளி விஷத்துளிகளில் எதன் வீரியம் அதிகம்?
நீ
உட்கொண்டது உனக்கானது, நான் உட்கொண்டது எனக்கானது!
ஆயிரம்
கோடி கோளாறில் எதன் பாதிப்பு அதிகம்?
நீ
உணர்ந்தவை உனக்கானது, நான் உணர்ந்தவை எனக்கானது!
மின்னலும்,
இடியும் ஒன்றாம் -
ஆனால் அதை
பார்ப்பதும் கேட்பதும் ஒட்டமறுக்கிறது!
நான்
பார்ப்பது என்னை உந்தி தள்ளுகிறது -
கேட்பவைகள் என்னுள் புகுந்து
கொள்ளு(ல்லு)கிறது,
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது -
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது -
புகுந்தவை
என்னுள் நடக்கிறது,
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
#சமூக பிரச்சனைகளை அணுகுதல்!
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!
அழிவின் மொத்தம் என்றேன் - நாட்டின் பாதுகாப்பு என்றாய்,
மனிதத்தை சிதைக்கும் என்றேன் - அறிவியல் வளர்ச்சி என்றாய்,
எதிர்காலத்தை தொலைப்போம் என்றேன் - பொருளாதார எழுச்சி என்றாய்,
நோயுற்று சாவோம் என்றேன் - மின்விசிறி ஓடவேண்டும் என்றாய்,
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!
மனிதத்தை சிதைக்கும் என்றேன் - அறிவியல் வளர்ச்சி என்றாய்,
எதிர்காலத்தை தொலைப்போம் என்றேன் - பொருளாதார எழுச்சி என்றாய்,
நோயுற்று சாவோம் என்றேன் - மின்விசிறி ஓடவேண்டும் என்றாய்,
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!
சரியும், தவறும்!
"சரியாக செய்யப்பட்ட தவறை" - சரி என்றும், "தவறாக செய்யப்பட்ட சரியை" - தவறு என்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது ஒன்றும் அசாதரணமானது அல்ல, அவர்கள் வாழ்வியலோடும், புரிதலோடும் ஐக்கியப்பட்ட ஒன்று இந்த மேலோட்ட நிலை. ஆனால் சமூகத்தை கூர்ந்து நோக்க கூடிய "So Called சமூக போராளிகள்" இதை போன்றதொரு மேலோட்டமான நிலைபாட்டை எடுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
சமூக நீதி!
அனைவருக்கும் சமமான ஒன்றை தான் சமூக நீதி என்று சொல்லி கொள்ள முடியும், பிரபலங்களுக்கும், பணம் படைத்தவருக்கும், பதவியில் இருப்போருக்கும், பலம் கொண்டோர்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை சமன் செய்ய அவசர அவசரமாக வாங்கி தரப்பட்ட (அ)நீதியை சமூக நீதியாக மார்தட்டி கொண்டாடுவது வேடிக்கையாகவே உள்ளது
Wednesday, October 10, 2012
மாற்று அரசியல் !
அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல் மக்களிடம் அந்நியப்பட்டு போய் விட்டது. அரசியல் மற்றும் சமூகம் இன்றி தனி மனிதனாக யாரும் வாழ்ந்து விட முடியாது என்ற உண்மையை மக்கள் உணர ஆரம்பித்தாலன்றி அரசியல் நிலைபெறாது. கேள்விகளில்லாத விடைகள் அர்த்தமற்றவை, முதலில் கேட்க பழகுவோம், நமக்காக மட்டும் அல்ல, அனைவருக்காகவும், புரிதலை வளர்த்து கொள்வோம், சித்தாந்தங்களை வகுத்து கொள்வோம், தவறுகளை திருத்தி கொள்வோம், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விவாதிப்போம், மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்போம், அரசியல் மாற்றத்தை மட்டுமே கண்டுணர்ந்த சமூகத்தை மாற்று அரசியலையும் காண செய்வோம்!
Friday, September 28, 2012
அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்!
- அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
- வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
- வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
- பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
- வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
- "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
- மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
- பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
- தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
- எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
- கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,
நீங்கள் எல்லாரும் ஒன்னா சேர்ந்து,
"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"
"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"
" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "
போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம்.
ஜெய் ஹிந்த்!
பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்!
Sunday, September 23, 2012
முடிந்தால் சிந்தியுங்கள் - 4
உங்கள் விருப்பம், சமூக நோய்களுக்கு வலி நிவாரணிகளை தயார் செய்வது என்றால் சமூக தொண்டாற்றுங்கள், அதை முற்றிலுமாக குணமாக்குவது என்றால் அரசியலில் இணையுங்கள். "Politics is the last refugee of the scoundrels" "அயோக்கியர்களின் இறுதி அடைக்கலம் அரசியல்" என்று அரசியலை ஒதுக்கி வைத்து பார்ப்பது அடிமாடுகளாக வாழ்வதை போன்றது.
பட்ட மரங்களாக, பல நூறு ஆண்டுகள் மண்ணில் நின்று கொண்டிருப்பதை விட, வீரியமிக்க இளம் விதைகளாக மண்ணிற்குள் புதைக்கபடுவது உத்தமம்.
முடிந்தால் சிந்தியுங்கள்!
Tuesday, September 18, 2012
நீயும் என் எதிரியே!
நீ கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை என்றால், நீயும் என் எதிரியே!
#சமூகத்தின் இன்றைய நிலை!
#சமூகத்தின் இன்றைய நிலை!
அணு உலை பொய்களின் தொகுப்பு - 1!
உலகெங்கிலும் அணு உலைகளை மையமாக வைத்து கூறப்படும் பொய்களின் தொகுப்பு. சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைகிறேன்.
1 . அணு உலைகளில் இருந்து கதிர் வீச்சு அபாயம் இல்லை
2 . கவலை படாதீர்கள், செர்னோபில் கதிர்வீச்சு அபாயம் பிரெஞ்சு எல்லைகளுக்குள் இருந்து சென்று விட்டது: அனைத்து பிரஞ்சு நாளிதழ்களும் 1986 'ல் பதிவு செய்தது.
3 . மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வசதியும் பொய்யானதில்லை: செர்னோபில் பேரழிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு அறிவாளி சொல்லியது
4 . கதிர்வீச்சை பற்றி பயப்பட வேண்டியதில்லை, உங்கள் ஜன்னல்களில் பேப்பர்களை கொண்டு அடைத்து விடுங்கள் அதுவே போதும்
5 . நீங்கள் சிரித்து கொண்டு இருந்தால் கதிர்வீச்சு உங்களை ஒன்றும் செய்யாது : யமஷிட்டா
6 . அணு சக்தி அமைதிக்கானது
7 . அணு சக்தி என்பது பாதுகாப்பான, சுத்தமான, மலிவான ஒரு தொழில் நுட்பம்
- தொடரும்

ஜனரேஷன்!
ஒரு நண்பனுடன் சாட்டில் உரையாடி கொண்டிருக்கும் போது கேட்டான்,
ஏன் அணு உலையை எதிர்கிறாய் என்று? புகுஷிமா என்ற வார்த்தையை சொல்ல ஆரம்பித்தான், அது முதல் ஜனரேஷன், இது முன்றாம் ஜனரேஷன் என்றான் உடனடியாக, நினைத்து கொண்டேன் 2030 'ல் எங்கோ அணு உலைக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருக்கும் போது என் நண்பனை போலவே வேறொருவன் அந்த மக்களை பார்த்து சொல்வான் அது முன்றாம் ஜனரேஷன், இது ...

வளர்ச்சி எனும் கண்ணாம்பூச்சி!
மனித தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க தெரிந்தவன், அந்த தவறால் பிரிந்த உயிரின் வலியையும், சிதைந்த உயிரின் வேதனையையும், பிரிந்த குடும்பங்களின் துயரத்தையும் என்றுமே உணருவதில்லை.
சிலரின் வளர்ச்சி என்ற கண்ணாம்பூச்சி விளையாட்டில் பலரின் வீழ்சிகள் ஒளிக்கபடுகின்றன!
Monday, September 17, 2012
வளர்ச்சி - என் டைரியிலிருந்து - 1 ( ஆண்டு - 2010 )
அன்று சனிக்கிழமை, வேலை செய்து கொண்டிருந்ததோ ஒரு சீன கம்பெனியில், பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும், சீன கம்பெனிகளை பொறுத்த வரை சனி, ஞாயிறு என்பது எல்லாம் இல்லை என்று, வேறு வழி இல்லாமல் அலுவலகத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஹவுஸ்கீப்பிங் பணியாளர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களில் ஒருவர் என்னருகே பணியில் ஈடுபட்டு இருந்தார், சுமார் நாற்பது வயதிருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர், வயிற்று பிழைப்பிற்காக பெங்களூரில் குடியேறியதாக கேள்விப்பட்டேன். அவர் அருகில் வந்ததும் அவரை பார்த்து புன்னகைத்தேன், அவரும் மரியாதையை நிமித்தமாக புன்னகைத்தார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென சுத்தபடுத்துவதை நிறுத்தி விட்டு மனம் விட்டு பேச ஆரம்பித்தார், முதலில் அவருக்கும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் பேசி காண்பித்தார், எவ்வளவோ இயந்திரங்கள் நிர்வாகத்திடம் இருந்தும் எங்களை வருத்தி வேலை வாங்குகின்றனர் என்றார், அமைதியாக கேட்டு கொண்டிருந்தேன், வேலையை தொடர்ந்து கொண்டே இரண்டாயிரம் தான் தருகிறார்கள், பி. எப் எண்ணை வேறு மறந்து விட்டேன், வீதியில் கூட பிறந்து விடலாம், தானே ராஜா தானே மந்திரி என்று வாழலாம், குப்பையை பொறுக்கி கூட நாளொன்றுக்கு இருநூறு ருபாய் வரை சம்பாதித்து விடலாம், ஆனால் ஏழையாக மட்டும் பிறக்க கூடாது, வாழவும் முடியாது, சாகவும் முடியாது என்று சொல்லி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், பதிலேதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன், உண்மையை சொல்ல போனால் கூனிக்குறுகி போயிருந்தேன். அந்த மனிதரின் நிலைக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை, சுளையாக நாற்பத்தைந்தாயிரம் வாங்குவதை நினைத்து என் உடல் கூசியது. அந்த மனிதனின் துன்பத்திற்கு நானும் ஒரு காரணம்!
எப்படி என்று சொல்ல தெரியவில்லை என்றாலும் மனசாட்சி கண்டிப்புடன் சொல்லி விட்டது,
நிச்சயமாக நீயும் ஒரு காரணம்!
எப்படி என்று சொல்ல தெரியவில்லை என்றாலும் மனசாட்சி கண்டிப்புடன் சொல்லி விட்டது,
நிச்சயமாக நீயும் ஒரு காரணம்!
மாதத்திற்கு இரண்டு லட்சங்களை சம்பாதிபவர்களும் அவர்களை விட நூறு மடங்கு குறைவாக இரண்டாயிரம் சம்பாதிபவர்களும் ஒரே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருகிறார்கள், ஏன் இந்த எற்றத்தாழ்வு?
இதற்கு பெயர் தான் வளர்ச்சியோ!
அப்படி தான் போல, இந்த முட்டாளின் அறிவிற்கு தான் அதை எட்டி பிடிக்கும் சக்தி இல்லை, இருந்தாலும் முட்டாளாகவே இருந்து விட கூடாது என்ற காரணத்தினால், நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி இல்லாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல் விரக்தியுடன் வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி என்பதை தெளிவாக என் அறிவில் வெளியே சென்று விட முடியாதவாறு அடைத்து வைத்து கொண்டேன்.
ஒன்றை மனதில் நிறுத்தி கொண்டேன், என்னை கூனிக்குறுக வைத்த கடவுளை ஒரு நாள் சந்திக்கும் போது அவன் கழுத்தை நெரித்து கேட்க வேண்டும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று?
என்னை போலவே பதில் தெரியாமல் அவனும் கூனிக்குறுகி போயிருப்பான்!
Friday, September 14, 2012
என் குல சாமி ஆவாரா கலாம்?
வெகு காலமாக அப்துல் கலாமை விமர்சித்ததற்காக பல பேரின் கண்டனத்திற்கு ஆளாகினேன், இருந்தாலும் அப்துல் கலாமை எப்படி நீ சொல்லலாம் என்ன திரும்ப பல அறிவு ஜீவிகள் பதிவுகளை போடுவதால் இந்த பதிவு!
கூடங்குளத்தில் உள்ள அணு உலைகளை அளிப்பது ரஷ்ய நாட்டை சேர்ந்த நிறுவனம், இன்று வரை அவர்கள் நாட்டில் தயாரித்த அணு உலையில் ஏற்பட கூடிய விபத்துக்கு பொறுபேற்க தயாராய் இல்லை, அப்படி இழப்பிடு தர வேண்டும் என்ற கட்டாயம் இருந
்தால் நாங்கள் இதை விற்க தயாராய் இல்லை என்பதை தெளிவு படுத்திய பின்பு வேறு வழி இல்லாமல் இந்திய மக்களின் வரி பணத்தின் மூலமாக இழப்பீடு கொடுத்து கொள்ளலாம் என்ற தான்றோன்றி தனமாக முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது, தயாரிப்பாளரே பிரச்சனைக்கு பொறுபேற்க விருப்பமில்லாத ஒரு தொழில் நுட்பத்திற்கு தான் நமது அறிவியல் ஞானி மாண்புமிகு திரு அப்துல் கலாம் அவர்கள் 100௦௦% பாதுகாப்பானது என்று உத்தரவாதம் கொடுத்திருகிறார், இதை அவர் ரஷ்ய கம்பெனியிடம் சொல்லி நமக்கு இழப்பிடு வாங்கி தரும் படி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து இருந்தால் கூட அவரை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம், சாதாரண மக்களிடம், அவரை ஒரு அறிவாளியாக, தலைவராக, ரோல் மாடலாக நினைக்கும் பல கோடி மக்களின் முன் சொல்கிறார் அணு உலை 100௦% பாதுகாப்பானது என்று! இதை நான் இரண்டு விதமாக பார்கிறேன், ஒன்று இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கோமாளியாக அப்துல் கலாம் இருக்கலாம், அப்படி இல்லை தன்னை நம்பி இருக்கும் மக்களை கோமாளியாக ஆக்கி காரியத்தை சாதித்து கொள்ள கூடிய ஒரு குள்ள நரியாக இருக்கலாம். ஆக அப்துல் கலாமை சாடுவதில் எந்த தவறும் இல்லை என்பதை இதன் மூலம் அப்துல்கலாமை தெய்வமாக நினைத்து கொண்டிருக்கும் அன்பிற்கினிய, அப்பாவி உள்ளங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களை நான் பரிதாபப்பட்ட பிறவிகளாக தான் பார்க்கிறேனே தவிர எதிரியாக அல்ல.
பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
ட்டு பூஜை அறையில் வைத்து கும்புடுகிறேன்.பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல!
கம்யுனிஸ்டுகள், ஜெய்தாபுரில் இருக்கும் அணு மின் நிலையத்தை அழிவு திட்டமாகவும், கூடங்குளத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை வளர்ச்சி திட்டமாகவும் பார்ப்பது எவ்வளவு நியாயமான ஒன்று என்று சில நிமிடங்களுக்கு முன்பு தான் புரிந்தது, அவர்களை பச்சோந்திகள் என பழிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒன்று, அவர்கள் சொல்வது ரஷ்யாவில் உலை வாங்காமல் அவர்கள் பொருளாதரத்தை அழிக்கிறீர்கள், ரஷ்யாவில் உலை வாங்கி அவர்களை வளர்
கிறீர்கள் என்று, உங்கள் அறியாமையால் அவர்கள் இந்தியாவை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல நண்பர்களே, பச்சை துரோகிகள்!
பின் குறிப்பு: சமுதாயம் மட்டும் நாட்டின் மீது அக்கறை உள்ள நல்ல கம்யுனிஸ்டுகள் மன்னிக்கவும், நான் உங்களை பற்றி பேசவில்லை..
கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல நண்பர்களே, பச்சை துரோகிகள்!
பின் குறிப்பு: சமுதாயம் மட்டும் நாட்டின் மீது அக்கறை உள்ள நல்ல கம்யுனிஸ்டுகள் மன்னிக்கவும், நான் உங்களை பற்றி பேசவில்லை..
Thursday, September 13, 2012
அறிவு ஜீவி சோ!
தீவிரவாதிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தும் போது, மருத்துவமனையில் சென்று ஒளிந்து கொள்ளும் போது, ராணுவம் பொது மக்களை கொன்று விட்டு தீவிரவாதிகளை கொள்வது தவிர்க்க இயலாதது! அப்படி கொல்லப்பட்ட பொது மக்களின் சாவுக்கு தீவிரவாதிகள் தான் காரணமே தவிர, ராணுவமோ, அரசோ எந்த விதத்திலும் காரணம் இல்லை - சோ
#சர்வாதிகார அரசோ, ராணுவமுமே கூட இது வரை தங்கள் மக்களின் மீது செயல் படுத்தாத ஒரு யுக்தியை இந்த அறிவு ஜீவ
ி சாதாரண விடயமாக பார்க்கிறார்! சில ஆயிரம் தீவிராவதிகளுக்காக ஒன்றரை லட்சம் பொது மக்களை கொன்றது மிக சாதாரண விடயமாம், ராணுவ நடவடிக்கையாம்.
ஆன்மிக தேசம், அகிம்சா தேசம், ஜனநாயக தேசம் என்றல்லாம் போற்றப்படும் ஒரு தேசத்தில் பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் சோ என்ற முகமூடிக்குள் ஒளிந்திருப்பது ஒரு மனிதாபிமானமற்ற கொடிய பிணம் திண்ணி என்பதை ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்தி விட்டார்.
தமிழனாக அல்ல, ஒரு சராசரி மனிதனாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
வேதனையோடு
வி. எஸ். வினோத் குமார்

காந்திய வழி!
தடியடியை தாங்கி கொண்டு காந்திய வழியில் போராடும் போராட்ட குழுவினர் ஒவ்வொருவரும் சுபாஷ் சந்திர போஸின் வீரமும், காந்தியின் மன திடத்தையும் உடையவர்கள். வெட்கமே இல்லாமல் வன்முறையை கட்டவிழ்க்கும் அரசும், காவல் துறையும் மனிதத்தின் அவமான சின்னங்கள்.
மனித உரிமை மீறல்கள்!
மனித உரிமை மீறல்கள் எந்த காரணகளுக்காகவும் நியாபடுத்துவதை அனுமதிக்க முடியாது. சராசரி மனிதனாக அதை எதிர்க்க கூட திராணியற்ற ஒவ்வொருவனும் வெட்கி தலை குனிய வேண்டும்.
உதயகுமாரன்!
கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளையே அருவாளுடனும், நாட்டு தூப்பாக்கிகளுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் அணுகும் மக்களை தடி அடிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் வாங்கி கொண்டு அற வழியில் போராட பண்படுத்தி விட்ட சுப உதயகுமாரன் ஈடு இனையற்ற தலைவராக நெஞ்சில் நின்று விட்டார். இவரது கால் தூசிக்கு பெறாதவர்கள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருப்பது நமக்கு ஏற்படுள்ள சாப கேடு. பொய் பிரச்சாரங்கள் மூலமும், வன்முறை மூலமும் உண்மையாக்கபட்ட பொய்கள் என்றும் நிலைத்ததில்லை .
காட்டேரிகளின் கோமாளி தந்திரம்!
அச்சத்தை ஏற்படுத்தி அச்சத்தை போக்குவதற்கு பெயர் தான் ராஜதந்திரம் என்றால் அந்த தந்திரத்தை செயல்படுத்தும் ராஜா கோமாளியாகவும், காட்டேரியாகவும் தான் இருக்க முடியும்! வெட்க கேடு.
காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!
வெறும் கையுடன்,குழந்தைகளுடனும் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மக்களிடம் இருந்து, துப்பாக்கி, வெடி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், கவச உடை, லத்தி அனைத்தையும் வைத்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு பாதுகாப்பில்லையாம்! கேட்கும் போதே ரத்தம் சூடாகிறது, உதயகுமாரன் போன்ற அகிம்சையை நம்ப கூடிய தலைவர்கள் மட்டும் இல்லை என்றால் எத்தனை காவலர்கள் உயிர் இழந்து இருக்க கூடும் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அகிம்சையை நம்பியவர்கள் தோற்றதில்லை, தூண்டுதலுக்கு ஆளாகாமல் அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். அரசாங்கம் மற்றும் உளவு துறையின் ராஜதந்திர முயற்சிகளை அமைதி வழியில் நின்று முறியடிப்போம், போது மக்களிடம் இருந்து நமக்கான ஆதரவை அதிகரிப்போம்.
Subscribe to:
Posts (Atom)
.jpg)