Friday, September 28, 2012

அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்!



  • அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
  • வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
  • வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
  • பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
  • வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
  • "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
  • மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு  வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
  • பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
  • தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
  • எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
  • கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,

நீங்கள் எல்லாரும் ஒன்னா  சேர்ந்து, 

"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"

"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"

" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "

போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம். 

ஜெய் ஹிந்த்!

பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்! 


Sunday, September 23, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 4


உங்கள் விருப்பம், சமூக நோய்களுக்கு வலி நிவாரணிகளை தயார் செய்வது என்றால் சமூக தொண்டாற்றுங்கள், அதை முற்றிலுமாக குணமாக்குவது என்றால் அரசியலில் இணையுங்கள். "Politics is the last refugee of the scoundrels" "அயோக்கியர்களின் இறுதி அடைக்கலம் அரசியல்" என்று அரசியலை ஒதுக்கி வைத்து பார்ப்பது அடிமாடுகளாக வாழ்வதை போன்றது. 

பட்ட மரங்களாக, பல நூறு ஆண்டுகள் மண்ணில் நின்று கொண்டிருப்பதை விட, வீரியமிக்க இளம் விதைகளாக மண்ணிற்குள் புதைக்கபடுவது உத்தமம். 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

Tuesday, September 18, 2012

நீயும் என் எதிரியே!

நீ கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை என்றால், நீயும் என் எதிரியே!

#சமூகத்தின் இன்றைய நிலை!

அணு உலை பொய்களின் தொகுப்பு - 1!


உலகெங்கிலும் அணு உலைகளை மையமாக வைத்து கூறப்படும் பொய்களின் தொகுப்பு. சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைகிறேன். 

1 . அணு உலைகளில் இருந்து கதிர் வீச்சு அபாயம் இல்லை 

2 . கவலை படாதீர்கள், செர்னோபில் கதிர்வீச்சு அபாயம் பிரெஞ்சு எல்லைகளுக்குள் இருந்து சென்று விட்டது: அனைத்து பிரஞ்சு நாளிதழ்களும் 1986 'ல் பதிவு செய்தது.

3 . மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வசதியும் பொய்யானதில்லை: செர்னோபில் பேரழிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு அறிவாளி சொல்லியது

4 . கதிர்வீச்சை பற்றி பயப்பட வேண்டியதில்லை, உங்கள் ஜன்னல்களில் பேப்பர்களை கொண்டு அடைத்து விடுங்கள் அதுவே போதும்

5 . நீங்கள் சிரித்து கொண்டு இருந்தால் கதிர்வீச்சு உங்களை ஒன்றும் செய்யாது : யமஷிட்டா

6 . அணு சக்தி அமைதிக்கானது

7 . அணு சக்தி என்பது பாதுகாப்பான, சுத்தமான, மலிவான ஒரு தொழில் நுட்பம்

- தொடரும்

ஜனரேஷன்!

ஒரு நண்பனுடன் சாட்டில் உரையாடி கொண்டிருக்கும் போது கேட்டான், 
ஏன் அணு உலையை எதிர்கிறாய் என்று? புகுஷிமா என்ற வார்த்தையை சொல்ல ஆரம்பித்தான், அது முதல் ஜனரேஷன், இது முன்றாம் ஜனரேஷன் என்றான் உடனடியாக, நினைத்து கொண்டேன் 2030 'ல் எங்கோ அணு உலைக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருக்கும் போது என் நண்பனை போலவே வேறொருவன் அந்த மக்களை பார்த்து சொல்வான் அது முன்றாம் ஜனரேஷன், இது ... 

வளர்ச்சி எனும் கண்ணாம்பூச்சி!


மனித தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க தெரிந்தவன், அந்த தவறால் பிரிந்த உயிரின் வலியையும், சிதைந்த உயிரின் வேதனையையும், பிரிந்த   குடும்பங்களின் துயரத்தையும் என்றுமே உணருவதில்லை. 
சிலரின் வளர்ச்சி என்ற கண்ணாம்பூச்சி விளையாட்டில் பலரின் வீழ்சிகள் ஒளிக்கபடுகின்றன!

Monday, September 17, 2012

வளர்ச்சி - என் டைரியிலிருந்து - 1 ( ஆண்டு - 2010 )




அன்று சனிக்கிழமை, வேலை செய்து கொண்டிருந்ததோ ஒரு சீன கம்பெனியில், பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்,  சீன கம்பெனிகளை பொறுத்த வரை சனி, ஞாயிறு என்பது எல்லாம் இல்லை என்று, வேறு வழி இல்லாமல் அலுவலகத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஹவுஸ்கீப்பிங்  பணியாளர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களில் ஒருவர் என்னருகே பணியில் ஈடுபட்டு இருந்தார், சுமார் நாற்பது வயதிருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர், வயிற்று பிழைப்பிற்காக பெங்களூரில் குடியேறியதாக கேள்விப்பட்டேன். அவர் அருகில் வந்ததும் அவரை பார்த்து புன்னகைத்தேன், அவரும் மரியாதையை நிமித்தமாக புன்னகைத்தார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை,  திடீரென சுத்தபடுத்துவதை நிறுத்தி விட்டு மனம் விட்டு பேச ஆரம்பித்தார், முதலில் அவருக்கும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் பேசி காண்பித்தார், எவ்வளவோ இயந்திரங்கள் நிர்வாகத்திடம் இருந்தும் எங்களை வருத்தி வேலை வாங்குகின்றனர் என்றார், அமைதியாக கேட்டு கொண்டிருந்தேன், வேலையை தொடர்ந்து கொண்டே இரண்டாயிரம் தான் தருகிறார்கள், பி. எப் எண்ணை வேறு மறந்து விட்டேன், வீதியில் கூட பிறந்து விடலாம், தானே ராஜா தானே மந்திரி என்று வாழலாம், குப்பையை பொறுக்கி கூட நாளொன்றுக்கு  இருநூறு ருபாய் வரை சம்பாதித்து விடலாம்,  ஆனால் ஏழையாக மட்டும் பிறக்க கூடாது, வாழவும் முடியாது, சாகவும் முடியாது என்று சொல்லி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், பதிலேதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன், உண்மையை சொல்ல போனால் கூனிக்குறுகி போயிருந்தேன். அந்த மனிதரின் நிலைக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை, சுளையாக  நாற்பத்தைந்தாயிரம் வாங்குவதை நினைத்து என் உடல் கூசியது. அந்த மனிதனின் துன்பத்திற்கு நானும் ஒரு காரணம்!
எப்படி என்று சொல்ல தெரியவில்லை என்றாலும் மனசாட்சி கண்டிப்புடன் சொல்லி விட்டது,   

நிச்சயமாக நீயும் ஒரு காரணம்!

மாதத்திற்கு இரண்டு லட்சங்களை சம்பாதிபவர்களும் அவர்களை விட நூறு மடங்கு குறைவாக இரண்டாயிரம் சம்பாதிபவர்களும் ஒரே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருகிறார்கள், ஏன் இந்த எற்றத்தாழ்வு? 

இதற்கு பெயர் தான் வளர்ச்சியோ! 

அப்படி தான் போல, இந்த முட்டாளின் அறிவிற்கு தான் அதை எட்டி பிடிக்கும் சக்தி இல்லை, இருந்தாலும் முட்டாளாகவே இருந்து விட கூடாது என்ற காரணத்தினால்,  நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி இல்லாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல் விரக்தியுடன் வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி என்பதை தெளிவாக என் அறிவில் வெளியே சென்று விட முடியாதவாறு அடைத்து வைத்து கொண்டேன்.

ஒன்றை மனதில் நிறுத்தி கொண்டேன், என்னை கூனிக்குறுக வைத்த கடவுளை ஒரு நாள் சந்திக்கும் போது அவன் கழுத்தை நெரித்து கேட்க வேண்டும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று? 
என்னை போலவே பதில் தெரியாமல் அவனும் கூனிக்குறுகி போயிருப்பான்!     
       

Friday, September 14, 2012

என் குல சாமி ஆவாரா கலாம்?



வெகு காலமாக அப்துல் கலாமை விமர்சித்ததற்காக பல பேரின் கண்டனத்திற்கு ஆளாகினேன், இருந்தாலும் அப்துல் கலாமை எப்படி நீ சொல்லலாம் என்ன திரும்ப பல அறிவு ஜீவிகள் பதிவுகளை போடுவதால் இந்த பதிவு!

கூடங்குளத்தில் உள்ள அணு உலைகளை அளிப்பது ரஷ்ய நாட்டை சேர்ந்த நிறுவனம், இன்று வரை அவர்கள் நாட்டில் தயாரித்த அணு உலையில் ஏற்பட கூடிய விபத்துக்கு பொறுபேற்க தயாராய் இல்லை, அப்படி இழப்பிடு தர வேண்டும் என்ற கட்டாயம் இருந
்தால் நாங்கள் இதை விற்க தயாராய் இல்லை என்பதை தெளிவு படுத்திய பின்பு வேறு வழி இல்லாமல் இந்திய மக்களின் வரி பணத்தின் மூலமாக இழப்பீடு கொடுத்து கொள்ளலாம் என்ற தான்றோன்றி தனமாக முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது, தயாரிப்பாளரே பிரச்சனைக்கு பொறுபேற்க விருப்பமில்லாத ஒரு தொழில் நுட்பத்திற்கு தான் நமது அறிவியல் ஞானி மாண்புமிகு திரு அப்துல் கலாம் அவர்கள் 100௦௦% பாதுகாப்பானது என்று உத்தரவாதம் கொடுத்திருகிறார், இதை அவர் ரஷ்ய கம்பெனியிடம் சொல்லி நமக்கு இழப்பிடு வாங்கி தரும் படி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து இருந்தால் கூட அவரை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம், சாதாரண மக்களிடம், அவரை ஒரு அறிவாளியாக, தலைவராக, ரோல் மாடலாக நினைக்கும் பல கோடி மக்களின் முன் சொல்கிறார் அணு உலை 100௦% பாதுகாப்பானது என்று! இதை நான் இரண்டு விதமாக பார்கிறேன், ஒன்று இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கோமாளியாக அப்துல் கலாம் இருக்கலாம், அப்படி இல்லை தன்னை நம்பி இருக்கும் மக்களை கோமாளியாக ஆக்கி காரியத்தை சாதித்து கொள்ள கூடிய ஒரு குள்ள நரியாக இருக்கலாம். ஆக அப்துல் கலாமை சாடுவதில் எந்த தவறும் இல்லை என்பதை இதன் மூலம் அப்துல்கலாமை தெய்வமாக நினைத்து கொண்டிருக்கும் அன்பிற்கினிய, அப்பாவி உள்ளங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களை நான் பரிதாபப்பட்ட பிறவிகளாக தான் பார்க்கிறேனே தவிர எதிரியாக அல்ல.

பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
ட்டு பூஜை அறையில் வைத்து கும்புடுகிறேன்.

கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல!



கம்யுனிஸ்டுகள், ஜெய்தாபுரில் இருக்கும் அணு மின் நிலையத்தை அழிவு திட்டமாகவும், கூடங்குளத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை வளர்ச்சி திட்டமாகவும் பார்ப்பது எவ்வளவு நியாயமான ஒன்று என்று சில நிமிடங்களுக்கு முன்பு தான் புரிந்தது, அவர்களை பச்சோந்திகள் என பழிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒன்று, அவர்கள் சொல்வது ரஷ்யாவில் உலை வாங்காமல் அவர்கள் பொருளாதரத்தை அழிக்கிறீர்கள், ரஷ்யாவில் உலை வாங்கி அவர்களை வளர்
கிறீர்கள் என்று, உங்கள் அறியாமையால் அவர்கள் இந்தியாவை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல நண்பர்களே, பச்சை துரோகிகள்!
பின் குறிப்பு: சமுதாயம் மட்டும் நாட்டின் மீது அக்கறை உள்ள நல்ல கம்யுனிஸ்டுகள் மன்னிக்கவும், நான் உங்களை பற்றி பேசவில்லை..



இத கவிதைன்னு நான் சொல்லல!



கம்யூனிஸ்ட் கட்சிகளின் ரஷ்ய மோகம்,
இந்தியாவில் இவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச,
மோகத்தையும்,
அழித்து விடும்,
போல இருக்கிறதே! 
அடடே ...! 
பச்சோந்தி பயலுக! 
சத்தியமா இத கவிதைன்னு, 
நான் சொல்லல, 
ஒரே லைன்ல எழுதி, 
போர் அடிச்சிடுச்சு,
அதான் இப்படி,
கோப படாதீங்க...!



Thursday, September 13, 2012

அறிவு ஜீவி சோ!



தீவிரவாதிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தும் போது, மருத்துவமனையில் சென்று ஒளிந்து கொள்ளும் போது, ராணுவம் பொது மக்களை கொன்று விட்டு தீவிரவாதிகளை கொள்வது தவிர்க்க இயலாதது! அப்படி கொல்லப்பட்ட பொது மக்களின் சாவுக்கு தீவிரவாதிகள் தான் காரணமே தவிர, ராணுவமோ, அரசோ எந்த விதத்திலும் காரணம் இல்லை - சோ 
#சர்வாதிகார அரசோ, ராணுவமுமே கூட இது வரை தங்கள் மக்களின் மீது செயல் படுத்தாத ஒரு யுக்தியை இந்த அறிவு ஜீவ
ி சாதாரண விடயமாக பார்க்கிறார்! சில ஆயிரம் தீவிராவதிகளுக்காக ஒன்றரை லட்சம் பொது மக்களை கொன்றது மிக சாதாரண விடயமாம், ராணுவ நடவடிக்கையாம்.
ஆன்மிக தேசம், அகிம்சா தேசம், ஜனநாயக தேசம் என்றல்லாம் போற்றப்படும் ஒரு தேசத்தில் பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் சோ என்ற முகமூடிக்குள் ஒளிந்திருப்பது ஒரு மனிதாபிமானமற்ற கொடிய பிணம் திண்ணி என்பதை ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்தி விட்டார்.
தமிழனாக அல்ல, ஒரு சராசரி மனிதனாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.

வேதனையோடு
வி. எஸ். வினோத் குமார்

காந்திய வழி!

தடியடியை தாங்கி கொண்டு காந்திய வழியில் போராடும் போராட்ட குழுவினர் ஒவ்வொருவரும் சுபாஷ் சந்திர போஸின் வீரமும், காந்தியின் மன திடத்தையும் உடையவர்கள். வெட்கமே இல்லாமல் வன்முறையை கட்டவிழ்க்கும் அரசும், காவல் துறையும் மனிதத்தின் அவமான சின்னங்கள்.

மனித உரிமை மீறல்கள்!

மனித உரிமை மீறல்கள் எந்த காரணகளுக்காகவும் நியாபடுத்துவதை அனுமதிக்க முடியாது. சராசரி மனிதனாக அதை எதிர்க்க கூட திராணியற்ற ஒவ்வொருவனும் வெட்கி தலை குனிய வேண்டும்.

உதயகுமாரன்!



கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளையே அருவாளுடனும், நாட்டு தூப்பாக்கிகளுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் அணுகும் மக்களை தடி அடிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் வாங்கி கொண்டு அற வழியில் போராட பண்படுத்தி விட்ட சுப உதயகுமாரன் ஈடு இனையற்ற தலைவராக நெஞ்சில் நின்று விட்டார். இவரது கால் தூசிக்கு பெறாதவர்கள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருப்பது நமக்கு ஏற்படுள்ள சாப கேடு. பொய் பிரச்சாரங்கள் மூலமும், வன்முறை மூலமும் உண்மையாக்கபட்ட பொய்கள் என்றும் நிலைத்ததில்லை .

காட்டேரிகளின் கோமாளி தந்திரம்!

அச்சத்தை ஏற்படுத்தி அச்சத்தை போக்குவதற்கு பெயர் தான் ராஜதந்திரம் என்றால் அந்த தந்திரத்தை செயல்படுத்தும் ராஜா கோமாளியாகவும், காட்டேரியாகவும் தான் இருக்க முடியும்! வெட்க கேடு.

கூடங்குளம் அடக்குமுறை!




தனது கோர முகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய ஜெயலலிதாவுக்கும், பிணம் தின்னிகள் போல் செயல்பட்ட தமிழக காவல் துறைக்கும் ஒரு தனி மனிதனாக எனது தீவிரமான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நண்பர்கள் அவர்கள் கண்டனங்களை நாகரீகமான முறையில் பதிவு செய்யவும்.

காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!



வெறும் கையுடன்,குழந்தைகளுடனும் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மக்களிடம் இருந்து, துப்பாக்கி, வெடி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், கவச உடை, லத்தி அனைத்தையும் வைத்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு பாதுகாப்பில்லையாம்! கேட்கும் போதே ரத்தம் சூடாகிறது, உதயகுமாரன் போன்ற அகிம்சையை நம்ப கூடிய தலைவர்கள் மட்டும் இல்லை என்றால் எத்தனை காவலர்கள் உயிர் இழந்து இருக்க கூடும் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அகிம்சையை நம்பியவர்கள் தோற்றதில்லை, தூண்டுதலுக்கு ஆளாகாமல் அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். அரசாங்கம் மற்றும் உளவு துறையின் ராஜதந்திர முயற்சிகளை அமைதி வழியில் நின்று முறியடிப்போம், போது மக்களிடம் இருந்து நமக்கான ஆதரவை அதிகரிப்போம்.


அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்கள்!



எக்கச்சமான உளவு பிரிவிகளையும், விசாரணை அமைப்புகளையும், ஆயுத படைகளையும் வைத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள், வெளி நாட்டு அமைப்புகள் மூலம் பணம் பெறுவதாக பிரச்சாரம் செய்து கொச்சைபடுத்தபடும் உதயகுமாருக்கு எதிராக எந்த வித ஆதாரத்தை இன்று வரை கொடுக்க முடியாததன் மூலமே தெரியும் அரசியல்வாதிகளின் குள்ளநரி தனத்தை. பொய் பிரச்சாரங்களை செய்கிறார் பிரதமர் என அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குக்கு இன்று வரை பதில் தர வில்லை. உண்மையை பேசுபவர்களை கொச்சை படுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளும் கீழ்த்தனமான செயலை என்று அரசியல்வாதிகள் நிறுத்திகிறார்களோ அன்று தான் மக்கள் இந்திய அரசியல் வாதிகளையும், அரசியல் அமைப்பையும் நம்ப தொடங்குவார்கள்.


வாலாட்டிகள்!



ஒத்த கருத்துகளில் சேர்ந்தும், எதிர் கருத்துகளில் பிரிந்தும் செயல் பட வேண்டியது மனிதனாக பிறந்த ஒவ்வொருவனின் கடமை, உரிமை, அவசியம். அதை விட்டு எல்லா நேரத்திலும் சொம்பு பிடித்து கொண்டும், முதுகு தேய்த்து கொண்டும் இருப்பவர்கள் கண்ணியமான மனிதர்கள் அல்ல, வாலாட்டிகள்.

பதவி ஒரு கேடு!



தனது கட்சியை சேர்ந்த சொம்பு தூக்கிகள் இறந்தால் நீண்ட அறிக்கையின் மூலம் தனது இரங்கலையும், அவரது குடும்பத்துக்கு ஆதரவையும் தெரிவிக்கும் அம்மா, கொடூரமாக தடி அடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை கையாண்டு கொன்ற ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து சரி கட்டி ஒதுங்கி விட முயலுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்த அனைத்து அசம்பாவிதங்களுக்கும் முழுமையான பொறுப்பு அதை நடத்தியவர்களுக்கு தான் உண்டு என்பதை உணராதவருக்கு பதவி ஒரு கேடு.

சட்டத்தை செயல்படுத்த சட்டம்!

சுதந்திர போராட்டம் என்பது வெள்ளைகாரர்கள் நம்மை அடிமை படுத்திய காலம், தற்கால போரட்டங்கள் என்பது கொள்ளை காரர்கள் நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் காலம். பூவுலகின் நண்பர்கள் திரு சுந்தரராஜனின் கருத்து மிக நுண்ணியமானது, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை சட்டபடி நடக்க வைப்பதற்கே சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. அணு சக்தி கழகம் புகுஷிமா விபத்துக்கு பிறகு விதித்த 17 விதிகளை முழுவதுமாக செயல் படுத்தி விட்டு அணு உலையை செயல் படுத்துங்கள் என்று சொல்வதற்கே உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர வேண்டி இருக்கிறது. 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.

ஆட்சி மாற்றம்!

ஒரு பத்து வருட காலத்துக்கு, இந்திய அரசியலில் வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்ற நிலையை கொண்டு வந்தால் தான் நம் ஆட்சியாளர்களுக்கு புத்தி வரும் என்று நினைகிறேன்.

நம்பிக்கையின் மிச்சம்!



கடலுக்குள் இறங்கி அமைதி வழியில் போராடும் இடிந்தகரை மக்கள்! பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாமல் ஜனநாயகத்தின் மீதான நம்பிகையை இன்னும் இழந்து விடாமல் போராடுவதை பார்க்கும் போதே சிலிர்கிறது!

Monday, September 10, 2012

அணு உலை போராட்டத்துக்கு எதிரான கபட நாடகம்!




ஏவுகணை தாக்குதலுக்கு ஒன்றும் ஆகாத அணு உலை, ஏரோப்ளேன் விழுந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, சுனாமி வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, பூகம்பம் வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, நிராயுதபாணி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அருகில் சென்றாலே விபத்து ஏற்படும், பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் தடியடி நடத்தி முன்று உயிர்களை பலி வாங்கினோம், பல ஆயிரம் பேரை பழி வாங்கினோம்! வாழ்க இந்திய ஜனநாயகம்.

அன்புடன்,
வி. எஸ்.  வினோத் குமார்

மாய வலையா, சாப வலையா!


அணு உலை எதிர்பாளர்களின் மாய வலையில் யாரும் விழவில்லை, ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகளின் சாப வலையில் தான் இந்திய மக்கள் விழுந்துள்ளனர். 

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார் 

ஓட்டு வங்கியும், மாய வலையும்!




ஓட்டு வங்கிக்காக மட்டும் உங்களில் ஒருத்தியாக இருப்பவர்களுக்கு, தேவைகள் முடிந்தவுடன் உண்மைகள் மாய வலையாக தான் தோன்றும் போல!

அன்புடன்,
வி. எஸ்.  வினோத் குமார்

மலிவான உயிர்கள்!




மனித உயிர்கள் மலிவாக பார்க்கப்படும் பொது இந்த சமுதாயத்தின் மீது கட்டுபடுத்த முடியாத ஒரு கோபம் வருகிறது. எனது வாழ்வை தீர்மானித்து கொள்ளும் உரிமை எனக்கு 200 % சதவிகிதம் இருக்கிறது, யாரும் மறுக்க முடியாது! ஆனால் எனது வளர்சிக்காக பிறர் வாழ்வாதரங்களை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? டினோசர்களும், காட்ஜில்லாக்களும், சுனாமியும், பூகம்பமும், எரிமலைகளும் இந்த உலகுக்கு ஏற்படுத்துவதாக திரை படங்களில் காட்டப்படும் அழிவை விட மனிதன் தன் சுய நலத்தின் மூலம் சிறிது சிறிதாக ஏற்படுத்தி வருகிறான். உலகின் முடிவு கண்டிப்பாக மனிதனால் தான் ஏற்பட போகிறது என்பதை சத்தியம் செய்து சொல்லலாம். 

மனிதன் முதலில் மனிதனாக வாழ கற்று கொள்ளட்டும், பிறகு அறிவியல் அறிஞ்சராகவோ, மருத்துவராகவோ, வக்கீலாகவோ என்னவாக வேண்டுமானாலும் ஆகி விட்டு போகட்டும்.

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார் 







Saturday, September 8, 2012

செதுக்கப்படுகிறேன், மனிதனாக!




இருபத்தாறு வருடங்களாக பயனற்ற, வடிவமற்ற பாறையாக ஏக்கத்தோடும், இயலாமையோடும் இருந்த என்னை, சிறிது காலமாக பல சிறு சிறு உளிகளை கொண்டு இந்த சமூகம் செதுக்க ஆரம்பித்திருப்பதாக உணருகிறேன்! எனக்கான தளமும், நோக்கங்களும் தெளிவாகும் போது ஏக்கங்களும், இயலாமையும் பலம் இழக்கின்றன! பாலைவனத்தில் விதைக்கப்பட்ட விதையாய் பரிதவித்த மனசாட்சியும், ஆன்மாவும் புதிதாய் பெய்த மழையில் துளிர் விடும் ஆரம்பிக்கும் விருட்சம் போல் எழ ஆரம்பித்து இருக்கின்றன. வீழ்ச்சிகளும், தோல்விகளும் அன்றாட நிகழ்வான வாழ்கையில், வீழ்ச்சிகளும், தோல்விகளும் சந்தர்பங்களுக்கு தானே தவிர மனதுக்கோ, உடம்புகோ, ஆன்மாவுக்கோ அல்ல என்பது தெள்ள தெளிவாகி விட்டது. பல கடினமான நேரங்களில், வாழ்கை ஓட்டத்தில் என்னை இழந்து விடாமல் தடுக்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும், என்னை எதிரியாக நினைத்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாரதியின் வழியில், தினம் தினம் புதியதாய் பிறக்க மட்டுமல்லாமல், மனிதனாகவும் பிறக்க கற்று கொண்டு விட்டேன் என நினைக்கிறேன். வலிகளுக்கு ஊடே  செதுக்கப்படுகிறேன், ரத்தமும், சதையும் கொண்ட பிண்டமாக அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் கொண்ட மனிதனாக!  
இந்த உலகிற்கு விடுப்பு கொடுக்கும் முன்பு சமூகத்திற்கு என் பயனையும், உலகிற்கு என் வடிவத்தையும் காட்டி விட வேண்டும் என்ற உந்துதலோடு தொடர்கிறேன்! 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.

வலிகள்!



வலிகள் நம்மை வேதனைக்கு உட்படுத்த அல்ல,
நம் தன்மைகளை சோதனைக்கு உட்படுத்த!

அன்புடன்,
வி எஸ்  வினோத் குமார் 

Saturday, August 18, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 4 !


பிராமணன் என்று கூறி கொண்டு கழிசடையாக நடப்பவர்கள் அதிகம் பேர், அதை காரணம் காட்டி தலித் என்று கூறி கொண்டு கழிசடை தனம் செய்பவர்கள் நியாயவாதிகள் ஆகி விட மாட்டார்கள். இரண்டு பேருமே கழிசடைகள தான்! பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும்  தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது. ஒரு ஜாதி, மத, இன  அடையாளத்தோடு உள்ள  பெரும்பாலானவர்களின் மன நிலை, அனைவரின் மன நிலை ஆகாது, தனி நபர்  குற்றங்களுக்கு ஜாதி, மத சாயம் பூசி பிரிவினை ஏற்படுத்துவதை தவிர்ப்போம், ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபடுவோம், சமத்துவத்தை சமாதியில் இருந்து உயிர்பிப்போம்,  மனிதத்தை வளர்ப்போம்.  


முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி.  எஸ். வினோத் குமார்

பின் குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, நம் மனங்களை பண்படுத்த!

Wednesday, August 15, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 3!

நாடு வேறு, நாட்டை ஆள்பவர்கள் வேறு. நாட்டை ஆள்பவர்கள் புனிதர்களாக இல்லாமல் சராசரி மனிதர்களாக இருந்து விட்ட காரணத்தின் விளைவே இன்றைய அனைத்து அவலங்களும். இந்த நிலையில் இல்லாமல் இருந்தால், அல்லது வேறு நிலையில் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது வாதத்திற்கு மிக சிறந்த காரணி, மனித இயல்பு, அனால் உண்மை? 100 % வாழ்வதற்கு சிறந்த இடம், சிறந்த வழி, சிறந்த கலாச்சாரம் என்று எதையாவது குறிப்பிட முடியுமா? இயற்கை விதிகளினால் இம்மண்ணின் மைந்தர்கள் படைக்கப்பட்டவர்கள் நாம், இந்த நாட்டில் உள்ள குறைகளை களைவது, நம் உடம்பில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயை அணுகும் நேர்த்தியோடு இருக்க வேண்டுமே தவிர, அதை விட்டு சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவிப்பது பல லட்சம் பேரின் தியாகத்தை கொச்சை படுத்தும் செயலாகும். நிகழ் கால சமுக போராளிகள், கடந்த கால போராளிகளின் தியாகத்தை இப்படி அணுகுவது ஆரோக்யமானதல்ல! நோக்கங்கள் நல்லதற்காக இருந்தாலும் அதை செயல்படுத்தும் வழிமுறை தவறாகும் போது சராசரி மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போவோம். 

முடிந்தால் சிந்தியுங்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!


அன்புடன்,
V . S . வினோத் குமார் 

Thursday, August 9, 2012

அனுபவ பாடம் - 1!


நீங்கள் அதிக நேரம் பேசும் போது  கேட்பவர்களுக்கு நீங்கள் சொல்ல கூடிய அர்த்தங்கள் அர்த்தமற்றவைகளாகவும், நீங்கள் முன்னெடுக்கும் வாதங்கள், விதண்டாவாதங்களாகவும் தெரிய கூடும். உங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்ற மன நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ  கேட்பவர்கள் தள்ளபடுவார்கள், உங்கள் தீர்க்கமான சிந்தனைகள் அவர்களுக்கு பிடிவாதமாக தெரியும். எனவே குறைவான நேரத்தில் நிறைவான, அனைவர்க்கும் புரியும்படியான, ஆழமான கருத்துகளை சொல்லி முடித்து விடுங்கள். எதிர் மறை சிந்தனை உள்ளவர்களுடன் பேசும் போது ஆணித்தரமான கருத்துகளையும், சரியான ஆதாரங்களையும் வைத்து கொண்டு பேசுங்கள், தவறான தகவல்களை கொடுத்து மாட்டி கொள்ளாதிர்கள், குறிப்பாக, உங்கள் ஒரு தவறு கூட நீங்கள் சொல்ல வந்த கருத்தில் உள்ள அனைத்து உண்மைகளையும், நியாங்களையும் அர்த்தமற்றதாக ஆகி விடும். எல்லாவற்றுகும் மேலாக உங்கள் மனசாட்சிக்கு உண்மையான கருத்துகளை பேசி பழகுங்கள், எக்காரணத்தை கொண்டும் பேச்சின் ஓட்டத்தில் உங்களை இழந்து விடாதிர்கள்.

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Wednesday, July 18, 2012

மதம், கடவுள், மனிதம்!

மதம் ஒரு பாரம்பரியம்; கடவுள் ஒரு நம்பிக்கை,  பாரம்பரியத்திற்காகவும், நம்பிக்கைகாகவும் மனிதத்தை சிதைக்காதிர்கள்!  


அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Monday, July 16, 2012

பில்லா 2!




முன் குறிப்பு: தல ரசிகர்கள் முழுதாக படித்து விட்டு திட்ட ஆரம்பிக்கவும்! 

பில்லா 2 படத்துக்கு செல்லும் முன் தீவிர தல ரசிகனான என் தம்பி என்னிடம் சொன்னது, படத்தில் காமெடி எல்லாம் இல்லைடா! முடிந்த பின் தான் தெரிந்தது, படத்தில் காமெடிக்கு தனி ட்ராக் இல்லன்றத தான் அந்த நல்லவன் அப்படி சொல்லி இருக்கான், மத்தபடி படம் முழுக்கவே செம காமெடி. கதாநாயகியை கட்டி போட்டு விட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் வில்லன்கள் ஸ்நியபர் துப்பாக்கியை வைத்து கொண்டு உட்காந்து இருப்பது, தல, சில பல வண்டிகளுடன் வந்து புழுதியை கிளப்பி கதாநாயகியை மீட்பது, வயிற்றில் பத்து, இருபது குத்து வாங்கினாலும் (கத்தியில்) தல கெத்தாக நடப்பது, ஒரு செகப்பு ஸ்கெட்சு பேனாவையும், நீதிபதி குடும்பத்தோட எடுத்த ஒரு பழைய போட்டோவையும் வைத்து, அதில் நீதிபதியை தவிர அனைவரையும் கவர் செய்யும் படி ஒரு வட்டம் வரைந்து தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்குவது எல்லாம் த்ரீ மச், இது வரை உலக திரை பட வரலாற்றிலயே இப்படி ஒரு சமயோசித வழியை எந்த வில்லனும் பின்பற்றி இருக்க மாட்டான், கடைசியில் தல அவரது வலது மற்றும் இடது கையோடு வில்லனது கோட்டைக்குள்ளயே நுழைந்து துவம்சம் செய்யும் போது எந்த தறுதலை இந்த சீன் வச்சதுனு கேக்கலாம்னு பார்த்தேன், சுத்தி தல ரசிகர்கள் (என் தம்பியையும் சேர்த்து) இருந்ததால் வாயை மூடி கொண்டேன். படம் முழுக்க மாஸ் மாஸ் னு யோசிச்சு திரைக்கதை பழைய புயுஸ் போன பல்பு மாதிரி ஆயிடுச்சு. கதை தான் கொஞ்சம் காமெடியே தவிர தல இன்னாமா நடிச்சு இருக்கார், இன்னா கெத்து, ஸ்டைல், தலைவா யு ஆர் கிரேட்,  ஐய்ஐய்யோ இது தளபதி டயலாக் இல்ல, சாரி தல யு ஆர் கிரேட்!. தல ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் மத்தவங்க விடு ஜூட்!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Thursday, July 12, 2012

பேஸ்புக் எனும் நாதாரி!

அட நாதாரிகளா.. அது என்ன பேஸ்புக்ல Add Close Friends option ?!!!!
Add Closest Friends , Add Thick Friends, Add Best Friends, Add Dearest Friends, Add True Friends , Add False Friends லாம் எப்ப கொண்டு வர போறீங்க? அப்படியே Add nalla kaathal , Add kalla kaathal , Add chumma kaathal , Add nijama kaathal னு எல்லாத்தையும் கொண்டு வந்துடுங்க நம்ம ஜனங்க ரொம்ப உருபட்ருவாங்க.

Engineers Rock! எப்புடி..!

 C. A படிச்சவன் ஆடிட்டர் ஆகிறான், B. L படிச்சவன் லாயர் ஆகிறான், M. B. B. S படிச்சவன் டாக்டர் ஆகிறான், B. ED படிச்சவன் டீச்சர் ஆகிறான், B . E படிச்சவன் எதுவாவும் ஆகாம வீணாப்போறான், இப்போ சொல்லுங்க பார்க்கலாம் Engineers Rock.






அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்!







இதனால், இந்திய நாட்டை ஆளக்கூடிய சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் தங்கள் மோப்ப சக்தியையும், அறிவு ஜீவிதனத்தையும் ஒரு சேர பயன் படுத்தி டைம் இதழுக்கும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கும் உள்ள ஒற்றுமையை கண்டுபிடித்தாலும், சென்னையில் டைம் இதழ் ஸ்டாக் இல்லாத காரணத்தினாலும், அப்படியே கிடைத்தாலும் தற்போது உள்ள இந்திய பொருளாதார மந்த நிலையில் அதை விட குறைவான விலையில் கிடைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவை, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு யுவராஜின் தலைமையிலும் மற்றும் அவரது ஆத்மார்த்த குருவும், இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பில் 15 கோடிக்கு விலை போக கூடிய ஒரே மாப்பிளையான திரு ராகுல் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், கசக்கி, கிழித்து, எரித்து டைம் இதழுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெற்றிகரமாக தெரிவித்து கொண்டு உள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...!


அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Sunday, July 8, 2012

புதிய தலைமுறை எக்ஸ்குளுசிவ்: ஆ. ராசாவின் அக்னி பரீட்சை!





புதிய தலைமுறை எக்ஸ்குளுசிவ்: ஆ. ராசாவின் அக்னி பரீட்சை, பார்த்தபின் தான் தெரிந்தது அக்னி பரீட்சை ராஜாவுக்கு அல்ல அதை பார்பவர்களுக்கு...


உண்மையை மறைப்பது என்பது மண்ணுக்குள் விதையை புதைப்பது போன்றது; டாக்டர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதியில் இருக்கும் இந்த வரி தான் எல்லா துன்பங்களையும் தாங்ககூடிய சர்வ வல்லமையை எனக்கு அளித்தது - ஆ. ராசா!

நான் ஈ (நானி)!




நானி என்ற இளைஞன் தன் காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றவும், தன்னை கொன்றதுற்கு பழி வாங்கவும் நான் ஈ என்று அவதாரம் எடுத்து வருகிறான், ஈயாக அவதாரம் எடுத்த நானி தன் காதலியை வில்லனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. இது வரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் கையாளப்படாத துல்லியமான கிராபிக்ஸ் காட்சிகள், ஒரு விநாடி கூட ஒவ்வாமை ஏற்படுத்தாத ரம்மியமான திரைக்கதை, கண்ணுக்கினிய கண்ணியமான காட்சி அமைப்புகள், நேர்த்தியான நடன அசைவுகள், மனதை வருடும் பின்னணி இசை, இயல்பான நடிப்பு, திரைக்கதை உடன் பிண்ணி பிணைந்த நகைச்சுவை காட்சிகள், அப்பப்பா எவ்வளவு பிளஸ்கள்.. படம் முடிந்த பிறகு தான் உணர்ந்தேன், கடைசி அரை மணி நேரம் கை, கால், கண், காது, கழுத்து எல்லாவற்றையும் எதோ மோடி மஸ்தான் வித்தை செய்து திரைப்பட குழுவினர் கட்டி போட்டு விடுகின்றனர்.
இயக்குனருக்கு ஒரு பெரிய ஓ போடலாம்; கற்பனை குதிரையை ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிறார்; துல்லியம், ரம்மியம், கண்ணியத்தை நம்பி படம் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். அனைத்தையும் அழகாகவும், நேர்த்தியாகவும் காண்பித்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
லாஜிக் பார்க்காமல், விதண்டாவாதம் பேசாமல் இரண்டரை மணி நேரம் தேமே என்று உட்கார்ந்து பொழுதை கழிக்க சிறந்த படம்.

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

அரிஸ்ஸடாடில், சாக்கரடிஸ் VS மெகா சீரியல்!

அரிஸ்ஸடாடிலும், சாக்கரடிசும் சொல்லி கொடுக்காததை நம்ம ஊர் மெகா சீரியல் சொல்லி கொடுத்துடுச்சி! சமீபத்தில் சன் டிவியில் பார்த்த ஒரு மெகா சீரியலில் கேட்ட தத்துவம் இது தான்: "நியாயம்ன்றது வேற, நியாயபடுத்தறதுன்றது வேற" - இந்த விழயம் இப்போ பெரும்பாலான தமிழ் மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு., இனிமேல் ஆவது நியாபடுத்தாம, நியாயமா பேச பாருங்க, இல்லனா எல்லாரு வீட்டுலயும் இந்த தத்துவத்த அடிக்கடி கேக்க வேண்டி வரும், ஜாக்கிரதை!

கூடங்குளத்தில் 266 மெகாவாட் மின்சாரம் பெற உரிமை உள்ளது: கேரளம்!

அப்படியே அணு உலையில இருந்து வெளிய வர கழிவுகளிலும் ஒரு 50௦ சதவிகிதத்தை எடுத்துட்டு போய் உங்க ஊர் பூரா பூ போல தூவி விட்டுகோங்க.

Tuesday, June 26, 2012

மெத்த படித்த மண்ணாங்கட்டிகள்!




பணம் சம்பாதிக்க என்னவெல்லாம் பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிச்சாலும் இவனுங்கள மாதிரி யோசிக்க முடியாது என்பதை சத்தியம் செஞ்சு சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் IIT யில் படித்த, படித்து கொண்டிருபவனுடைய விந்தணு விலைக்கு வாங்க தயார் என்று சென்னையை சேர்ந்த ஒரு மறை கழண்ட தம்பதி இணையத்தில் விளம்பரம் செய்தது, பிள்ளை பேருக்கு வழி இல்லாமல் விந்தணுவை வாங்கும் பாசத்தை கொச்சைபடுத்திய இந்த மானம்கெட்ட தம்பதியர் சொன்னதை வேத வாக்காக எடுத்து கொண்ட IIT யில் படித்த ஒரு பக்கி பரதேசி, IIT யில் படித்தவர்களது விந்தனுகளை இணையத்தில் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி விட்டது. இன்னொரு அறிவு ஜீவி IIT , IIM மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலை கழகங்களில் படித்தவர்களை திருமணம் மற்றும் டேடிங் என்ற பெயரில் கூட்டி கொடுக்கும் இணையதள நிறுவனத்தை ஆரம்பித்து விட்டது.  சிறந்த பல்கலை கழகங்களில் படித்த பெரும்பாலனோர் அதிகளவு பணத்திற்காகவும், பொய்யான சமூக மதிபிற்காகவும் தங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருப்பது இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்!


இப்படி தன்னை தானே மெய்ச்சு கொண்டு சுய அடையாளங்களை ஏற்படுத்துவதை தவிர சிறந்த பல்கலை கழகங்களில் படித்தவர்கள் என்னத்தை பெரியதாக கிழித்து விட்டார்கள் என தெரியவில்லை (என்னையும் சேர்த்து தான்)! நான் உணர்ந்தவை, பெரிய பல்கலை கழகத்தில் படித்த பெரும்பாலனோர், அடிக்க வந்துவிடாதிர்கள், எல்லாரும் அல்ல, பெரும்பாலனோர் மிக எளிதாக விலை போக கூடிய ஜந்துகள், தனது நெருங்கிய உறவுகளை தூரபடுத்தி தற்காலிக, சிற்றின்பதிர்கான உறவுகளை எளிதாக ஏற்படுத்தி கொள்ள கூடியவர்கள், கடந்து வந்த பாதையை உதாசீன படுத்தி ஆல் டே ஜாலி டே என வாழ்கையை முன்னெடுத்து செல்ல கூடியவர்கள், தாய் மண், இல்லாமை, கல்லாமை, பசி, உறவுகள் இவை எல்லாம் அவர்களது அகாரதிகளில் தேடினாலும் கிடைக்காது. பிறருக்காக தங்கள் இன்பங்களை சிறிதளவு கூட குறைத்து கொள்ள விரும்பாதவர்கள், இன்னும் எத்தனையோ சொல்லலாம், இத்தனை நொட்டைகள் இருந்தும் இவர்கள் பண்ணுகிற அலப்பறை இருக்கே. சூ அபபா..




அன்புடன் 
வி. எஸ். வினோத் குமார்

Monday, May 14, 2012

அடிமை இந்தியாவின் வழிதொடர்தலும், பரி பூரண சுதந்திரமும்!




           இருபது மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டு, சூரியன் என்ற ஓற்றை அச்சில் சுழன்று வந்த இந்த புராதான உலகம், சிறிது சிறிதாக அதன் அச்சில் இருந்து விலகி, பணம், பதவி படைத்த பல லட்சம்  மனிதர்களை  அதன் அச்சுகளாக்கி கொண்டு செயல் பட ஆரம்பித்த நூற்றாண்டு. வாழ்கைக்கு தேவையான பொருளாதரத்தை தேடும் பயணத்தில், வாழ்க்கையின் சாராம்சமான ஒழுக்கம், உண்மை, நேர்மை, குடும்பம், மனிதம் போன்றவற்றை சிறிது சிறிதாக சிதைத்து, இறுதியாக வாழ்க்கையையே தொலைக்கும் கலையை மனிதனுக்கு கற்று தந்த நூற்றாண்டு. தனி மனிதர்களின், நான் என்ற சிந்தனையில் சிக்கி, உண்மைகள் பொய்ய்யாக்கப்படுவதும், தத்துவங்கள் மழுங்கடிக்கப்படுவதும், நீதிகள் அநீதிகளாக்கப்படுவதும் இங்கு அன்றாட நிகழ்வுகள். விசலாமாக இருந்த புரிதலின் எல்லைகள் சுருங்கி, துவண்டு, அன்றாட அர்த்தங்கள் கூட அதிசயங்களாக பார்க்கப்படும் வேடிக்கை இங்கு வாடிக்கை. 

          அடிமைத்தனம் மற்றும் சுதந்திரம் என்பது என்னுடைய  நாடு மற்றும் அதன் அடையாளங்களின் மீதானது என்ற விசாலாமான பார்வை சுருங்கி, இன்று நான், என்னுடைய விருப்பு அல்லது வெறுப்பு என்ற அளவில்  அதன் உண்மையான அர்த்தத்தை இழந்து கொண்டிருப்பது  பகுத்தறிவின் மரண போராட்டம்.  நம்முடைய ரத்தமும் சதையுமான சொந்த அடையாளங்களை அடகு வைத்து விட்டு, ஒரு காலத்தில் நம்முடைய ரத்தம் சிந்த சிந்த திணிக்கப்பட்ட அந்நிய அடையாளங்களை, நம்முடைய அடையாளங்களாக நம்பி கொண்டிருப்பது  இன்னும் நம் ரத்தத்தில் இருந்து வெளியேறாமல் இருக்கும் அடிமை இந்தியாவின் வழிதொடரல்கள்.      

                 தாய் மொழியில்  பேசுவதை  மரியாதை குறைவாக  நினைப்பதும், ஆங்கில மொழியில் பேசுவது உயர்குடி  மக்களின் அடையாளமாக பார்க்கபடுவதும்தாய் மொழியில், ஆங்கில மொழி கலப்பு  தவிர்க்க இயலாத  ஒன்றாக நம்பபடுவதும், ஒரே மொழி பேசுபவர்கள் கூடி பேசும் போதும் கூட, தங்கள் தாய் மொழியை தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுவதும், லட்சகணக்கான உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் தாய்  மொழியிலயே இருக்க, அவற்றை முற்றிலுமாக உதாசினபடுத்தி விட்டு, வணிக நோக்கத்துடன் பிரபலபடுத்தபட்ட ஒரு சில ஆங்கில படைப்புக்களை சுற்றி விட்டில் பூச்சிகளாய் திரிவதும், வழி வழியாக வந்த, இயல்பான, சுவாரஸ்யமான நம் சொந்த மண்ணின் விளையாட்டுகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, ஏழை முதலாளிகளும், பசியால் வாடும் விளையாட்டு வீரர்களும் தங்கள் வறுமையை போக்கி கொள்ள நடத்தப்படும் கிரிகெட்டின் மேல் தீரா காதல் கொண்டிருப்பதும், நமக்கான கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை முற்றிலுமாக மறந்து, துறந்து அந்நிய மோகினியின் போதையில் மயங்கி கிடப்பதும், அடிமை இந்தியாவின் வழிதொடரல்கள் இன்னும் முற்று பெறவில்லை என்பதின்  வெளிப்டையான அடையாளங்கள்.

          நம் சொந்த அடையாளங்களான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், தொழில், இயற்கை வளம் ஆகியவற்றை மன நிறைவோடு ஏற்று, பாதுகாத்து, அவற்றில் உள்ள பகுத்தறிவில்லாத, ஒவ்வாத கருத்துகளை சீர்படுத்தி,  இன்றைய உலகத்திற்கான மாற்றங்களை புகுத்தி சிறப்புற செய்பவனே சுதந்திர மனிதன்.  நம்மால் நம்  அடையாளங்களும், நம் அடையாளங்களால் நாமும் செம்மை அடைவதே பரி பூரண சுதந்திரத்திற்கான ஒரே வழி. 

          அடிமை இந்தியாவின் வழிதொடர்தலை வேரறுத்து, பரி பூரண சுதந்திரம் என்னும் வரலாற்றின் முதல் எழுத்தை எழுதிடுவோம்.

பின் குறிப்பு: இந்த கட்டுரை தமிழில் எழுதபட்டிருப்பது எனது அடையாளமாக தமிழ் இருக்கும் காரணத்தால் மட்டுமே, இதில் உள்ள வாதங்கள் அந்நிய மொழி மற்றும் மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கும் அனைத்து மொழியினருக்கும் பொதுவானவையே.

அன்புடன்
வி.  எஸ்.  வினோத் குமார்.

Sunday, May 13, 2012

இன்று ஒரு திருக்குறள்.


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
கருமமே கட்டளைக் கல்.
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.



Wednesday, April 11, 2012

அழிவின் தொடக்க புள்ளி?

அந்நிய நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்ற லட்சம் கோடிகளை செலவழிக்கும் அரசு, சில ஆயிரம் கோடிகளுக்காகவும் அந்நிய முதலாளிகளின் நலனுக்காகவும், சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்க தயாராவது கேலி கூத்து! எளிய மக்களின் நலுனுக்காக எதிராக நடைபெறும் எந்த முயற்சியும் ஒரு பெரும் அழிவின் தொடக்க புள்ளியே.

எங்கே வாழ்கிறது ஜனநாயகம்?





நீங்கள் உங்கள் மக்களின் நலனுக்காக போராடுபவர் என்றால், நீங்கள் ஒரு ராஜ துரோகி!
நீங்கள் அந்நிய முதலாளிகளுக்காக, உங்கள் நாட்டு நலனை விட்டு தர தயாராக இல்லாதவராய் இருந்தால், நீங்கள் ஒரு தேச விரோதி, சதிகாரர்! 
வாழ்கிறது ஜனநாயகம்! - வேடிக்கை மனிதர்களின், விதண்டவாத பேச்சினில் மட்டும்!

நிலநடுக்கம், சுனாமியில் இருந்து பாதுகாப்பு : வாயால் வடை சுடும் சங்கம்!


செய்தி: தமிழகம், ஆந்திர மாநிலங்களில் எச்சரிக்கை! 
பேசாம ஊருக்கு ஒரு அணு உலை வச்சிட்டா, என்ன பூகம்பம்னாலும், சுனாமினாலும் மக்கள் எல்லாரும் உள்ள போய் பாதுகாப்பா இருக்கலாமே! மத்திய, மாநில அரசுகள் சட்டு புட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. என்ன APJ சார், நாராயணசாமி சார் கொஞ்சம் பாத்து செய்யுங்க. உலக நாடுகளும் நம்மூரில் உள்ளது போல 200 சதவிகிதம் பாதுகாப்பான அணு உலைகள கட்டி தங்கள் மக்களை பாதுகாத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறது! மேலும் விவரங்களுக்கு வாயால் வடை சுடும் சங்க தலைவர் APJ மற்றும் துணை தலைவர் நாராயணசாமியை www.vaayalvadaisuduvom.com இல் அணுகவும்.

பீதியிலே, பேதி!

செய்தி: தமிழகம், ஆந்திர மாநிலங்களில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! 

ஒரு சின்ன ஆட்டத்துக்கே, பீதியிலே பேதியாகி கொண்டிருக்கும் அணு உலை ஆதரவாளர்களே! அதிகார பூர்வ அறிவுப்பு வரதுக்கு முன்னாடியே, எதுக்கு 200 சதவிகிதம் பாதுகாப்பான அணு உலையே விட்டுட்டு , பாதுகாப்பே இல்லாத வேற எங்கயோ தலை தெறிக்க நம்ம அறிவு களஞ்சியங்கள் ஓடினாங்கனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்! அப்படியே அந்த மங்கோஸ் மண்டயனையும், ஸ்னேக்கு பாபுவையும் பார்த்தா இந்த பக்கம் கொஞ்சம் வந்துட்டு போக சொல்லுங்க!

Saturday, January 21, 2012

தினமலரா, தினமலமா!

கிசு கிசு எழுதிட்டு இருந்தவன் எல்லாம் தலையங்கம் எழுதுனா எப்படி இருக்கும்னு  தினமலரின் அணு உலை எதிர்ப்பு கட்டுரைகளை பார்த்து  தெரிஞ்சிகோங்க, சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சது தான் மிச்சம். நம்மால் எதை மாற்ற முடியுமோ அதற்காக மட்டுமே நேரத்தை செலவழிங்கனு அருள் ராஜன் சாரே சொல்லிருக்காரு, போய் அடுத்த வாரம் அந்தரங்கம் ரெடி பண்ணுங்க, ஸ்னேஹா பிரசன்னா லவ் பத்தி கவர் ஸ்டோரி ரெடி பண்ணுங்க, அத விட்டு அணு உலை, மின்சாரம்னு காமெடி பண்ணிட்டு.

மானங்கெட்ட இந்திய இளைஞர்களே!

If 15,964 farmers died in 2010 under huge debt, why is the govt keen to save an indebted Vijay Mallya? Isn't everyone equal? //Devinder Sharma


இதுல என்ன டவுட்டு! எல்லாருக்கும் தெரிஞ்ச பரம ரகசியம், இந்திய அரசாங்கம், குடிமக்களோட உண்மையனா பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் என்னைக்குமே கண்டுகிட்டது கிடையாது. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்துட்டு நாற்பது கோடி பேரு இருக்காங்க, அவங்க இருந்தா என்ன செத்தா என்ன? பத்து பதினஞ்சி விஜய் மால்யா தான் நாட்டோட ஜி.டி.பி'ய வளர்த்துட்டு இருக்காங்க (ரொம்ப நல்லவங்க, நாம கேக்கும் பொது எல்லாம் நல்ல கமிஷனும் கொடுக்குறாங்க). மானங்கெட்ட இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இந்தியா வல்லரசு நாடாவோ, வளர்ந்த நாடாவோ ஆகனும்னு ஆசை இருந்தா அமைதியா அரசோட எல்லா திட்டங்களுக்கும் ஆதரவு கொடுங்க! (நாற்பது கோடி பெற கொன்னுட்டா சராசரி தனி மனித வருமானம் அதிகமாயிடும்). நமக்கு என்ன தெரியும் நம்ம என்ன விஞ்ஞானியா, பொருளாதார வல்லுனரா, நம்ம போய் அமெரிக்காகாரனுக்கு முதுகு தேய்க்கலாம் வாங்க.

இந்தியா ஒளிர்கிறது! தமிழகம் மிளிர்கிறது!

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நாற்பது கோடி இந்தியர்களில் ஒருவரா நீங்கள்? தமிழகத்தில் வாழ்பவரா நீங்கள்? ஆஹா, வீடுதோறும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிகணினி! நூறு கிலோ மீட்டர் தூரம் சென்று வர 3 நாட்கள் சம்பாதித்தாலே போதும், ஒரு லிட்டர் பால் வாங்க, ஒரே நாள் சம்பாதித்தாலே போதும், சுத்தமான குடிநீர் வாங்க பாதி நாள் சம்பதிதாலே போதும், இந்தியா ஒளிர்கிறது! தமிழகம் மிளிர்கிறது!

Thursday, January 19, 2012

வாழ்க ஜனநாயகம்!


பிறப்பால் ஜனநாயக இந்தியாவின் தவபுதல்வர்கள் நாம், வாழ்வதோ காங்கிரஸ் என்ற துப்பு கெட்ட, ஆண்மை அற்ற, வக்கிர புத்திகாரர்களின் கூட்டமைப்பின் ராணுவ ஆட்சியில்; மரியாதையைக்குறிய அடிமைகளாக! வெள்ளையனின் அடிமைகளாக இருந்த போது கூட நம்மிடம் தன்மானமும், சுய புத்தியும் மிச்சம் இருந்தது, காங்கிரஸ் என்னும் துப்பு கெட்டவர்களின் அடிமையாக வாழும் நமக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது? எத்தனை ஊழல்கள் செய்தாலும், எத்தனை முறை கேடுகள் நடந்தாலும், அரசியல் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தங்களை பரிசுத்ததன்மை மிக்கவர்களாகவும், தூய்மையின் மொத்த குத்தகைகாரர்களாகவும் காட்டி கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களை மிஞ்ச இதுவரை, இல்லை, இல்லை; இனிமேலும் யாரும் பிறக்க முடியாது! அப்படியே இதை எல்லாம் மீறி ஒரு பிரச்சனை வந்தால், காந்தியின் பின்னாலோ, அல்லது இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் முயற்சியில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போன்ற ஒரு மாயையை உருவாக்கியோ, தப்பித்து கொள்ளும் ஆண் மகன்களின் கூட்டமைப்பு தான் இந்த காங்கிரஸ் கட்சி. நீங்கள் ஒரு தனி மனிதனாகவோ, சமூக எழுச்சி அமைப்பாகவோ இருந்து காங்கிரஸின் எதாவது ஒரு தவறை சுட்டிகாட்டுங்கள் பார்க்கலாம், நீங்கள் விடுதலை புலியாகவோ, மதவாத அமைப்பாகவோ, நக்சலாகவோ, அந்நிய சக்தியாகவோ சித்தரிக்கபடுவது நிச்சயம், ஒரு வேளை காங்கிரசுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேற்று கிரக சதிகாரகளாக கூட சித்தரிக்க படலாம்! வாழ்க ஜனநாயகம்


-வி. எஸ். வினோத் குமார்